21ம் நூற்றாண்டுக் கோபுரம்

21 ஆம் நூற்றாண்டுக் கோபுரம் வரிசையில் முதலாவதாக உள்ளது.

21ம் நூற்றாண்டுக் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 269 m (883 ft) உயரம் கொண்ட இக் கட்டிடம் உலகின் மூன்றாவது உயரமான வதிவிடக் கட்டிடம் ஆகும்.[1]

21 ஆம் நூற்றாண்டுக் கோபுரம்
தகவல்
அமைவிடம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலைComplete
கட்டப்பட்டது2001 - 2003
பயன்பாடுவதிவிடம்
உயரம்
Antenna/Spire269 மீ (883 அடி)
கூரை240 மீ  (787 அடி)
கடைசித் தளம்185.7 மீ  (609 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை55
உயர்த்தி எண்ணிக்கை7
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர்டபிள்யூ. எஸ். அட்கின்ஸ் அண்ட் பார்ட்னர்ஸ்
உரிமையாளர்எமிரேட்ஸ் விமான நிறுவனம்

இது 2003 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டபோது உலகின் மிக உயர்ந்த வதிவிடக் கட்டிடமாக இது இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், யுரேக்கா கோபுரமும், அதே நாட்டின் குயீன்ஸ்லாந்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் என்னுமிடத்தில் கியூ 1 கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டபோது இது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

எமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கான தங்குமிடமாக விளங்கும் இக் கட்டிடத்தில் கடைசி மாடியில் ஒரு உடற்பயிற்சிக் கூடமும், கூரையில் ஒரு நீச்சல் குளமும் அமைந்துள்ளது. இந்த வானளாவியில் 7 உயர்த்திகள் உள்ளன.

இதிலுள்ள படுக்கை அறைகள் ஒவ்வொன்றும் பெரிய கண்ணாடிச் சாளரங்களைக் கொண்டுள்ளன. இவை ஷேக் சயத் வீதியையோ அரபிக் கடலையோ பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன.

கட்டுமானம்

டபிள்யூ. எஸ்.அட்கின்ஸ் நிறுவனம் இதன் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் வடிவமைப்புக்களை உருவாக்கியது.

இவற்றையும் பார்க்கவும்

  • துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடங்கள்

வெளியிணைப்புகள்



மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்