உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்ஃபா துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்ஃபா துகள்
பொதிவு2 புரோத்தன்கள், 2 நியூத்திரன்கள்
புள்ளியியல்போசானியம்
குறியீடுα, α2+, He2+
திணிவு6.64465675(29)×10−27 kg[1]

4.001506179125(62) u

3.727379240(82) GeV/c2
மின்னூட்டம்2 e
சுழற்சி0[2]

ஆல்ஃபா துகள் அல்லது கதிர் (Alpha particle or ray), இயற்கை அல்லது செயற்கைக் கதிரியக்கத்தின் போது வெளிப்படுகின்றன. இந்நிகழ்வு பொதுவாக அணு நிறை கூடிய தனிமங்களில் நிகழ்கிறது. α துகள்கள் ஈலியத்தின் கருக்களாகும். எனவே இதில் இரு புரோத்தன்களும் இரு நியூத்திரன்களும் காணப்படும். சில செயற்கைக் கதிரியக்கத் தனிமங்கள் மிகக்குறைந்த அல்லது மிக அதிக அரை வாழ்வுடன் காணப்படுகின்றன. இச்செயற்கை கதிர் தனிமங்களின் அணுஎண் 60 க்கும் 85 க்கும் இடைப்பட்டதாகவும் உள்ளன. α துகளை வெளியிட்டபின் தாய்தனிமத்தின் அணு எண்ணில் 2 உம் அணுநிறையில் 4 உம் குறைந்து, புதிய சேய் தனிமம் கிடைக்கிறது. α உமிழ்ச்சியினைத் தொடர்ந்து காமாக் கதிர்கள் வெளிப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட ஐசோடோப்பிலிருந்து வெளிப்படும் எல்லா α துகள்களும் ஒரே ஆற்றலுடன் காணப்படுகின்றன. எனவே வளியிலோ, பிற ஊடகங்களிலோ அவைகளின் செல்தொலைவு (Range ) ஒன்றுபோல் இருக்கும். இச்செல்தொலைவு அவைகளின் ஆற்றலைப் பொறுத்திருக்கிறது.ஆல்ஃபா கதிர்கள் என்பன ஐட்ரஜனைப் போல் நான்கு மடங்கு நிறையும் ஐட்ரஜனைப் போல் இரு மடங்கு நேர்மின்னூட்டமும் கொண்ட துகள்களின் ஓட்டமாகும்.ஆல்ஃபா துகள்கள் எலக்ட்ரான்களை இழந்த ஈலியம் அணுக்களாகும்.இத்துகள்களின் செல்தொலைவு,

என்ற சமன்பாட்டால் கொடுக்கப்படுகிறது.

இங்கு b என்பது மாறிலியாகும். கதிர் தனிமத்தினைப் பொறுத்து அவைகளின் வேகம் 1.45 முதல் 2.2* 107 மீட்டர் வரையில் காணப்படுகிறது. சில ஒளிரும் பொருட்களில் மோதும்போது ஒளித்தெறிப்புகளை (Scintilations ) தோற்றுவிக்கின்றன.

அல்ஃபா கதிர் ஒரு தாளாலும்,
பீட்டா கதிர் அலுமினியத் தகட்டாலும் தடுத்து நிறுத்தப்படுகிறது.

ஊடகம் ஒன்றின் வழிசெல்லும் போது, அயனியாக்கம் நிகழ்கிறது. இக்கதிர்கள் மிகவும் குறைந்த ஊடுருவற்திறன் கொண்டன. ஒரு சாதாரண தாள் அதனைத் தடுத்து நிறுத்திவிடும் அவைகளில் காணப்படும் மின்னூட்டம் காரணமாக இப்படிப்பட்ட துகள்கள் காந்த மின் பலங்களில் விலக்கமுறுகின்றன.

மேற்கோள்கள்

  • B.A.R.C./D.R.P/TC 3.
"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=ஆல்ஃபா_துகள்&oldid=2920015" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்