உள்ளடக்கத்துக்குச் செல்

நெய்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறைந்த கவலைப்படவேண்டிய உயிரினம்
நெய் மீன்

நெய்மீன், ராஜாமீன், சீர்மீன் மற்றும் ராஜா கானாங்கெளுத்தி (கிங் மாக்ரல்) (Scomberomorus cavalla)) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த மீன் 50 கிலோ வரை எடை இருக்கும். மற்ற மீன்களை இது உணவாக உண்டு வழும் மீனாகும். இது ஹிஸ்டோன் நஞ்சிற்கு மிகவும் பெயர்போனதாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் உள்ள இம்மீன் சுவையாக இருக்கும். இம் மீன்கள் பொழுதுபோக்கு மற்றும் வியாபார நோக்கத்திற்காக பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதியான கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் (லட்சதீவுக்கடல், இந்தியப்பெருங்கடல், மற்றும் மன்னார்வளைகுடா) உள்ள கடல்களில் அதிக அளவில் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இது இடம் பெயரக்கூடிய மீன் வகைகளில் ஒன்றாகும். மேற்கு அட்லாண்டிக் பெருங்கடல் மெக்சிகோ வளைகுடா பகுதிகளிலிருந்து இடம் பெயர்தலை காணலாம்.

ஊட்டச்சத்து

இந்த வகை மீன்கள் மற்ற வகை மீன்களை உணவாக உட்கொள்வதால் இதில் பாதரசம் உணவுச் சங்கிலியில் அடுத்து அடுத்த நிலைகளில் அதிக அளவில் சேமிக்கப்பட்டு (biomagnification) மீதைல் பாதரசமாக (methyl mercury), பாதரசத்தின் அதிகப்படியான நஞ்சாக (நரம்பு நஞ்சாக) மாற்றப்படுவதால் இதைத் தாய்மார்கள்,குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டும்[1].

ஆதாரம்

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=நெய்மீன்&oldid=2039839" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்