அஷ்டமுடி ஏரி


அஷ்டமுடி ஏரி (Ashtamudi Lake) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இரண்டாவது ஆழமான மற்றும் பெரிய ஏரியாகும். அஷ்டமுடி என்பதற்கு எட்டு மகுடம் என்று மலையாளம் மொழியில் பொருள். (அஷ்டம்=எட்டு , முடி= மகுடம்) . இந்த ஏரியை மேலே இருந்து பார்த்தால் பல்வேறு கிளைகளுடன் எட்டு மகுடங்களைக் கொண்டுள்ளது போல் தோற்றமளிக்கும். மேலும் இது கேரளாவின் கழிமுகங்களின் (காயல்) நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.[1][2][3][4] இக்கழிமுகத்தின் இருபுறங்களிலும் தென்னை மற்றும் பனை மரங்கள் உள்ளன. இவற்றினூடே கிராமங்கள் அமைந்துள்ளன. கொல்லம் படகுச் சங்கம் மூலம் இயக்கப்படும் படகுகள் பொதுமக்களின் சவாரிக்காக இக்கழிமுகத்தில் இயக்கப்படுகிறது. இதைத்தவிர சொகுசுப் படகுகளும் இயக்கப்படுகின்றன. இச் சொகுசுப் படகில் பயணம் 8 மணி நேரங்கள் ஆகும். இச்சொகுசுப் படகானது காயல்கள், மற்றும் கிராமங்களின் வழியாகச் செல்லுவதால் அக்கழிமுகத்தின் சுற்றுப்புறங்களை முழுவதும் ரசிக்க முடியும்.

அஷ்டமுடி ஏரி
அமைவிடம்கொல்லம், கேரளா
ஆள்கூறுகள்8°59′N 76°36′E / 8.983°N 76.600°E / 8.983; 76.600
வகைEndorheic
உப்புநீர்
வடிநிலப் பரப்பு1,700 km2 (660 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச ஆழம்6.4 m (21 அடி)
நீர்க் கனவளவு76,000,000,000 km3 (1.8×1010 cu mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்10 m (33 அடி)
உறைவு19 ஆகஸ்டு 2002

வர்த்தகம்

இந்த ஏரி இப்பகுதி மக்களின் முக்கிய வருவாய்த் தலமாக அமைந்துள்ளது. மீன்பிடித்தல் மற்றும் தென்னை நார்க் கயிறு தயாரித்தல் ஆகியவை இந்த ஏரியைச் சார்ந்து நடக்கும் தொழில்களாகும்.

சுற்றுலா

இந்த ஏரியில் படகுச் சவாரி முக்கிய சுற்றுலா ஆகும். மேலும் சொகுசுப் படகுகளும் முக்கிய சுற்றுலாவாக அமைகின்றன.

மேற்கோள்கள்

புகைப்படங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அஷ்டமுடி_ஏரி&oldid=3542315" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்