ஆரூர்தாஸ்

தமிழ் திரைப்பட உரையாடல் எழுத்தாளர்
(ஆரூர் தாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆரூர் தாஸ் (Aaroor Dass, 10 செப்டம்பர் 1931 – 20 நவம்பர் 2022) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர் ஆவார்.[1] இவர் எழுதியவற்றில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் அதிகம். மொத்தம் 500 திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார்.

ஆரூர்தாஸ்
பிறப்புயேசுதாஸ்
(1931-09-10)10 செப்டம்பர் 1931
திருவாரூர், நாகப்பட்டினம்,
சென்னை மாகாணம், இந்தியா
(இன்றைய தமிழ்நாடு)
இறப்பு20 நவம்பர் 2022(2022-11-20) (அகவை 91)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ஆரூரான்
பணிகதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்
பெற்றோர்சந்தியாகு
ஆரோக்கியமேரி
வாழ்க்கைத்
துணை
லூர்து மேரி
பிள்ளைகள்தாரா, உசா, ஆசா
ரவிச்சந்திரன்
விருதுகள்கலைமாமணி விருது
கவிஞர் வாலி விருது (2016)
மக்கள் கவிஞர் விருது

திருவாரூரில் 10. செப்டம்பர் 1931 இல் பிறந்தவர் இவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் யேசுதாஸ். யேசுதாஸ் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் எஸ் எஸ் எல் சி தேர்சி பெற்றார். பின்னர் தஞ்சை இராமையாதாசிடம் வந்து சேர்ந்து, அவரிடமிருந்து கதை உரையாடல் கலையைக் கற்றார்.[2] தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாசில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர் தாஸ் என பெயர் வைத்துக்கொண்டார்.

தொழில் வாழ்க்கை

என். டி. ராமராவ், அஞ்சலிதேவி நடித்த தெலுங்கு படம் நாட்டியதாரா என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அந்த படத்திற்கான வசனத்தை எழுதும் பொறுப்பை இராமையாதாஸ் ஏற்றிருந்தார். அப்படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு ஆரூர்தாசைக் கொண்டே அவர் வசனம் எழுதவைத்தார்.[3] மொழிமாற்று படங்களின் உதட்டசைவுக்கு ஏற்ப வசனம் எழுதும் கலையைக் கற்றுத் தேர்ந்த பிறகு 1957 இல் வெளியான கேதி (Qaidi) என்ற படத்தை மகுடம்காத்த மங்கை என்ற பெயரில் தனியொருவராக தமிழாக்கம் செய்தார். இப்படத்தில் தான் வசனம் என்ற இடத்தில் ஆரூர்தாஸ் என்ற இவரது பெயர் முதன்முதலில் இடம்பெற்றது.[3]

மொழிமாற்று படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருத்த ஆரூர் தாசை ஏ. எல். நாராயணன் தன் உதவியாளராக சேர்த்துக் கொண்டார். அவரிடம் ஆரூர்தாஸ் நேரடி தமிழ்ப் படங்களுக்கு உரையாடல் எழுதும் கலையைக் கற்றார். ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்து 1957 இல் வெளியான நேரடி தமிழ்ப படமான சௌபாக்கியவதி படத்தின் பல காட்சிகளை ஆரூர்தாசைக் கொண்டு உரையாடல் எழுதவைத்தார். அப்படத்தின் உதவி இயக்குநராகவும் ஆரூர்தாஸ் பணியாற்றினார். ஆரூர்தாசின் திறமையைக் கண்ட ஜெமினி கணேசனும், சாவித்திரியும் அவரை சிவாஜி கணேசனிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அதன் வழியாக பாசமலர் படத்திற்கு உரையாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவாஜி கணேசனின் 28 படங்களுக்கு உரையாடல் எழுதினார்.[3] அவற்றில் படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், புதிய பறவை, தெய்வமகன், அன்னை இல்லம் போன்ற படங்கள் குறிப்பிடதக்கன. அத்தனைப் படங்களும் பெரும் வெற்றியை ஈட்டின.

உரையாடல் ஆசிரியராக மட்டுமே இருந்த இவரை எம். எம். ஏ. சின்னப்பா தேவர் வாழவைத்த தெய்வம் படத்தின் வழியாக கதை வசனம் எழுதும் வாய்ப்பை முதலில் அளித்தார்.[3] அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேவர் பிலிம்சின் ஆஸ்தான கதை வசன ஆசிரியராக ஆனார். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ம. கோ. இராமச்சந்திரன் நடுத்த தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், தாய்க்குத் தலைமகன், குடும்பத்தலைவன், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி போன்ற படங்களுக்கு கதை, உரையாடல் எழுதி மா. கோ. இராமச்சந்திரனின் அன்புக்குப் பாத்திரமானார். அன்றைய தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த அனைத்து முன்னணி திரைப்பட நிறுவனங்களின் திரைப்படங்களிலும் பணியாற்றினார்.[3]

படித்த பெண் (1956) என்ற படத்தில் என். எல். கானசரஸ்வதி பாடிய ‘வாழ்வினிலே காணேனே இன்பம்’ என்ற பாடலை இவர் எழுதியுள்ளார்.

திரைப்படவியல்

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

எழுத்தாளராக

ஆண்டுதிரைப்படம்நடிகர்குறிப்பு
1954நாட்டிய தாராஎன். டி. ராமராவ், அஞ்சலிதேவிதெலுங்கி இருந்து மொழிமாற்றபட்ட இப்படத்திற்கு தஞ்சை இராமையாதாசுடன் இணைந்து உரையாடல் எழுதினார்.
1957கேதிசுரேஷ், பத்மினிகேதி என்ற இந்தி திரைப்படத்தின் மொழிமாற்று திரைப்படம் மகுடம்காத்த மங்கை என்ற பெயரில் வெளியானது
1957சத்தியவான் சாவித்திரிநாகேஸ்வர ராவ்
1958சிம்போஆசாத், சித்ராசிம்போ என்ற இந்தி திரைப்படத்தின் மொழிமாற்று திரைப்படம் அதே பெயரில் வெளியானது
1959வாழவைத்த தெய்வம்ஜெமினி கணேசன்நேரடி தமிழ் அறிமுகப் படம்[4]
1959நள தமயந்திபானுமதி ராமகிருஷ்ணா
1960உத்தமி பெற்ற ரத்தினம்
1961பாசமலர்சிவாஜி கணேசன்
1961கொங்கு நாட்டு தங்கம்சி. எல். ஆனந்தன்
1961தாய் சொல்லைத் தட்டாதேம. கோ. இராமச்சந்திரன்
1962குடும்பத்தலைவன்ம. கோ. இராமச்சந்திரன்
1962பார்த்தால் பசி தீரும்சிவாஜி கணேசன்
1962படித்தால் மட்டும் போதுமாசிவாஜி கணேசன்
1962தாயைக்காத்த தனயன்ம. கோ. இராமச்சந்திரன்
1963அன்னை இல்லம்சிவாஜி கணேசன்
1963நீதிக்குப்பின் பாசம்ம. கோ. இராமச்சந்திரன்
1963பார் மகளே பார்சிவாஜி கணேசன்
1963பரிசும. கோ. இராமச்சந்திரன்
1964தொழிலாளிம. கோ. இராமச்சந்திரன்
1964புதிய பறவைசிவாஜி கணேசன்
1964வேட்டைக்காரன்ம. கோ. இராமச்சந்திரன்
1965ஆசை முகம்ம. கோ. இராமச்சந்திரன்
1965இதயக்கமலம்ரவிச்சந்திரன்
1965காக்கும் கரங்கள்எஸ். எஸ். ராஜேந்திரன்
1965காட்டு ராணிஎஸ். ஏ. அசோகன்
1965தாழம்பூம. கோ. இராமச்சந்திரன்
1966அன்பே வாம. கோ. இராமச்சந்திரன்
1966பெற்றால்தான் பிள்ளையாம. கோ. இராமச்சந்திரன்
1966தாலி பாக்கியம்ம. கோ. இராமச்சந்திரன்
1966தனிப்பிறவிம. கோ. இராமச்சந்திரன்
1967இரு மலர்கள்சிவாஜி கணேசன்
1967தாய்க்குத் தலைமகன்ம. கோ. இராமச்சந்திரன்
1967தங்கைசிவாஜி கணேசன்
1969அக்கா தங்கைஜெய்சங்கர்
1969அன்பளிப்புசிவாஜி கணேசன்
1969தெய்வமகன்சிவாஜி கணேசன்
1971பிராப்தம்சிவாஜி கணேசன்
1974பணத்துக்காகசிவாஜி கணேசன்
1976பத்ரகாளிசிவகுமார்
1977அவன் ஒரு சரித்திரம்சிவாஜி கணேசன்
1978வணக்கத்திற்குரிய காதலியேஇரசினிகாந்து
1979நான் வாழவைப்பேன்சிவாஜி கணேசன், இரசினிகாந்து
1979பட்டாகத்தி பைரவன்சிவாஜி கணேசன்
1983சுமங்கலிசிவாஜி கணேசன்
1984நிரபராதிமோகன்
1984ஓசைமோகன்
1984உன்னை நான் சந்தித்தேன்சிவகுமார்
1984விதிமோகன்
1984மைடியர் குட்டிச்சாத்தான்மைடியர் குட்டிச்சாத்தான் மலையாளப்படத்தின் மொழி மாற்று
1985பந்தம்சிவாஜி கணேசன்
1985மங்கம்மா சபதம்கமலகாசன்
1985பூ ஒன்று புயலானதுவிஜயசாந்திவிஜயசாந்தி நடித்த பிரதிகட்டனா தெலுங்கு திரைப்படத்தின் மொழிமாற்று
1986மருமகள்சுரேசு, ரேவதி
1986விடுதலைஇரசினிகாந்து
1987அன்புள்ள அப்பாசிவாசி கணேசன், நதியா
1987வைராக்கியம்பிரபு
1987குடும்பம் ஒரு கோவில்சிவாசி கணேசன்
1989இதுதாண்டா போலீஸ்மரு இராசசேகர்அங்குசம் தெலுங்கு படத்தின் மொழிமாற்று
1989மன்னிக்க வேண்டுகிறேன்மரு இராசசேகர்யமபாசம் தெலுங்கு படத்தின் மொழிமாற்று
1990வைஜெயந்தி ஐ.பி.எஸ்.விசயசாந்திகர்த்தவ்யம் தெலுங்கு படத்தின் மொழிமாற்று
1992அசோகன்மோகன்லால்யோத்தா மலையாளப் படத்தின் மொழிமாற்று
1993எவனா இருந்தா எனக்கென்னமரு இராசசேகர்ஆக்ரஹம் தெலுங்கு படத்தின் மொழிமாற்று
1994வாட்ச்மேன் வடிவேலுசிவகுமார்
1995தி கிங்மம்முட்டிதி கிங் மலையாளப் படத்தின் மொழிமாற்று
2001பாப்பாவெங்கடேசுதேவி புத்துருடு தெலுங்கு படத்தின் மொழிமாற்று
2004அன்பு சகோதரன்அர்சுன்புட்டின இண்டிக்கி ரா செல்லி தெலுங்கு படத்தின் மொழிமாற்று
2014தெனாலிராமன்வடிவேலு

இயக்குநராக

ஆண்டுதிரைப்படம்நடிகர்குறிப்பு
1967பெண் என்றால் பெண்ஜெமினி கணேசன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆரூர்தாஸ்&oldid=3956958" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்