இந்திய சேவகர்கள் சங்கம்

இந்திய சேவகர்கள் சங்கம் (Servants of India Society) என்பது தக்காண கல்விச் சங்கத்தை விட்டு வெளியேறிய கோபால கிருஷ்ண கோகலே 1905 ஆம் ஆண்டு சூன் 12 ஆம் தேதி மகாராட்டிடிராவின் புனேவில் உஎஉவாக்கைய ஓர் சங்கமாகும்.[1]. இவருடன் சமூக மற்றும் மனித வளர்ச்சியை ஊக்குவிக்கவும், இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியை அகற்றவும் விரும்பிய நடேசு அப்பாஜி திராவிட், கோபால கிருஷ்ணா தியோதர் மற்றும் அனந்த் பட்வர்தன் போன்ற படித்த ஒருசில இந்தியர்களும் இருந்தனர்.

கோபால கிருஷ்ண கோகலே

நோக்கம்

கல்வி, சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கும், தீண்டாமை மற்றும் பாகுபாடு, குடிப்பழக்கம், வறுமை, பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் உள்நாட்டு துஷ்பிரயோகம் ஆகியவற்றின் சமூக தீமைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் இந்த சங்கம் பல பிரச்சாரங்களை ஏற்பாடு செய்தது. நாக்பூரிலிருந்து தி கிட்டாவாடா என்ற ஆங்கில பத்திரிக்கை 1911 இல் தொடங்கியது. முக்கிய இந்தியர்கள் அதன் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் இருந்தனர். அரசியல் நடவடிக்கைகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு போன்ற அமைப்புகளிலிருந்து விலகி இருக்க அது முடிவு செய்தது.

அமைப்பு

1915 இல், கோகலே இறந்த பின்னர் சங்கத்தின் அடிப்படை சுருங்கியது, 1920 களில் மகாத்மா காந்தி காங்கிரசின் தலைவர் ஆனவுடன், நாடு முழுவதும் பொதுமக்கள் அளவில் சமூக சீர்திருத்த பிரச்சாரங்களை ஆரம்பித்து, இளம் இந்தியர்களை ஈர்த்தார். இருப்பினும், இது ஒரு குறைவான உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் இதன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது. இது மகாராட்டிடிராவின் புனே நகரில் அதன் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.

கிளைகள்

இது உத்தரப் பிரதேசம், ஒடிசா, அலகாபாத் மற்றும் உத்தராகண்டம் போன்ற பல்வேறு மாநிலங்களில் அதன் கிளைகளைக் கொண்டுள்ளது. இது தொடக்கப் பள்ளிகள், பழங்குடியின சிறுவர்களுக்கான குடியிருப்பு விடுதி, பழங்குடிப் பெண்களுக்கான ஆசிரம வகை பள்ளிகள், குழைந்தை மையங்கள் போன்றவற்றை கவனித்து வருகிறது. ஒடிசாவில் கட்டக், சவுத்வார் மற்றும் ராயகடாவில் இதன் மையங்கள் உள்ளன. [2] இது ஒடிசாவில் ஒரு அனாதை இல்லத்தையும் நடத்துகிறது.

குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்