பிரயாக்ராஜ்

(அலகாபாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரயாக்ராஜ் (Prayagraj), அதிகாரப்பூர்வமாக பிரயாக்ராஜ் என அறியப்படுகிறது, இது இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு மாநகராட்சி ஆகும். தற்போது இதன் புதிய பெயர் பிரயாக்ராஜ் ஆகும்.[6] அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும்.

பிரயாக்ராஜ்
அலகாபாத்
மாநகரம்
பிரயாக்ராஜ்
மேல் இடமிருந்து கடிகார திசையில்: அனைத்து புனிதர்கள் பேராலயம், குசுரோ பாக், அலகாபாத் உயர் நீதிமன்றம், சங்கமம் அருகில் புதிய யமுனா பாலம், குடிமை கோடுகளின் வானலை, அலகாபாத் பல்கலைக்கழகம், ஆல்ஃபிரட் பூங்காவில் தோர்ன்ஹில் மேனே நினைவுச்சின்னம் மற்றும் ஆனந்த பவனம்
மேல் இடமிருந்து கடிகார திசையில்: அனைத்து புனிதர்கள் பேராலயம், குசுரோ பாக், அலகாபாத் உயர் நீதிமன்றம், சங்கமம் அருகில் புதிய யமுனா பாலம், குடிமை கோடுகளின் வானலை, அலகாபாத் பல்கலைக்கழகம், ஆல்ஃபிரட் பூங்காவில் தோர்ன்ஹில் மேனே நினைவுச்சின்னம் மற்றும் ஆனந்த பவனம்
அடைபெயர்(கள்): சங்கம நகரம்[1] மற்றும் பிரதமர்களின் நகரம்[2]
பிரயாக்ராஜ் is located in உத்தரப் பிரதேசம்
பிரயாக்ராஜ்
பிரயாக்ராஜ்
உத்தர பிரதேசத்தில் அலகாபாத்தின் அமைவிடம்
பிரயாக்ராஜ் is located in இந்தியா
பிரயாக்ராஜ்
பிரயாக்ராஜ்
இந்தியாவில் அலகாபாத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°26′09″N 81°50′47″E / 25.43583°N 81.84639°E / 25.43583; 81.84639
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
கோட்டம்அலகாபாத்
மாவட்டம்அலகாபாத்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்அலகாபாத் மாநகராட்சி
 • மாநகர முதல்வர்அபிலாசா குப்தா (பா.ஜ.க.)
பரப்பளவு[3]
 • மொத்தம்365 km2 (141 sq mi)
ஏற்றம்98 m (322 ft)
மக்கள்தொகை (2020-2011 கலப்பு)[3]
 • மொத்தம்15,36,218
 • தரவரிசை36வது
 • அடர்த்தி4,200/km2 (11,000/sq mi)
 • மெட்ரோ தரவரிசை40வது
இனங்கள்அலகாபாத்காரன்
மொழி
 • அலுவல்இந்தி[4]
 • கூடுதல் அலுவல்உருது[4]
 • பிராந்தியஅவதி[5]
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அ.கு.எ.211001–211018
தொலைபேசி குறியீடு+91-532
வாகனப் பதிவுUP-70
பாலின விகிதம்852 /1000
இணையதளம்allahabadmc.gov.in
பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றான்டில் அலகாபாத்தில் பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண்

இந்நகரத்தில் இந்து சமய புனித ஆறுகளான யமுனை, கங்கை ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத சரசுவதி ஆறு இங்கு திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் கலக்கிறது.

இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங்) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் இங்கேயே அமைந்துள்ளது. ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் எனும் கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.

திரிவேணி சங்கமத்தை ஒட்டி முகலாயப் பேரரசர் அக்பர் நிறுவிய அலகாபாத் கோட்டை உள்ளது. இந்நகரத்தில் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண் உள்ளது.

போக்குவரத்து

தொடருந்து நிலையம்

கும்பமேளா திருவிழா

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சேருமிடமான திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். [7] 2019-ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா விழா 15 சனவரி 2019 (மகர சங்கராந்தி) தொடங்கி 4 மார்ச் 2019 (சிவராத்திரி) முடிய நடைபெறுகிறது. [8]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85 ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 72 மீட்டர் (236 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு யமுனை ஆறு கங்கை ஆற்றுடன் கூடுகிறது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பிரயாக்ராஜ் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 11,12,544 ஆகும். அதில் ஆண்கள் 6,00,386, பெண்கள் 5,12,158 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,14,439 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 853 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.76% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 8,88,314 (73.03%), இசுலாமியர்கள் 2,56,402 (21.94%), மற்றவர்கள் 20.% ஆகவுள்ளனர்.[10]

தட்ப வெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், அலகாபாத் (அலகாபாத் வானூர்தி நிலையம்) 1981–2010, உச்சநிலை 1901–2012
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)32.8
(91)
36.3
(97.3)
42.5
(108.5)
45.8
(114.4)
48.6
(119.5)
48.9
(120)
45.6
(114.1)
42.7
(108.9)
39.6
(103.3)
40.6
(105.1)
36.0
(96.8)
31.9
(89.4)
48.9
(120)
உயர் சராசரி °C (°F)22.8
(73)
27.1
(80.8)
33.7
(92.7)
39.5
(103.1)
41.2
(106.2)
39.2
(102.6)
34.3
(93.7)
33.2
(91.8)
33.1
(91.6)
33.0
(91.4)
29.7
(85.5)
25.0
(77)
32.6
(90.7)
தாழ் சராசரி °C (°F)9.2
(48.6)
12.3
(54.1)
17.1
(62.8)
22.6
(72.7)
26.5
(79.7)
27.9
(82.2)
26.7
(80.1)
26.3
(79.3)
25.2
(77.4)
20.9
(69.6)
14.8
(58.6)
10.5
(50.9)
20.0
(68)
பதியப்பட்ட தாழ் °C (°F)1.1
(34)
1.1
(34)
7.2
(45)
12.7
(54.9)
17.2
(63)
18.7
(65.7)
18.8
(65.8)
21.1
(70)
18.3
(64.9)
11.7
(53.1)
5.6
(42.1)
-0.7
(30.7)
−0.7
(30.7)
மழைப்பொழிவுmm (inches)17.0
(0.669)
17.6
(0.693)
8.8
(0.346)
7.0
(0.276)
13.9
(0.547)
113.5
(4.469)
268.0
(10.551)
238.5
(9.39)
184.9
(7.28)
34.7
(1.366)
4.6
(0.181)
6.8
(0.268)
915.3
(36.035)
ஈரப்பதம்62493222284671757462586353
சராசரி மழை நாட்கள்1.61.51.00.71.25.512.011.88.41.50.40.546.1
சூரியஒளி நேரம்224.9244.2263.2274.1292.3206.4143.3180.6184.3259.7256.7244.02,773.7
Source #1:
Source #2: NOAA (sun 1971–1990)[14]

இதனையும் காண்க

ஆதாரங்கள்

உசாத்துணை

ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிரயாக்ராஜ்&oldid=3891293" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை