இந்திய வரலாற்றுப் பேராயம்

சட்டமுறை அமைப்புக்குழு

இந்திய வரலாற்றுப் பேராயம் (Indian History Congress) என்பது மிகப்பெரிய இந்திய தொழில்முறை, கல்வியியில் வரலாற்றாசிரியர்களின் அமைப்பாகும். இதில் 35,000 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பானது 1935 இல் நிறுவப்பட்டது. [1] இந்த அமைப்பில் புதியதாக ஒருவர் உறுப்பினராக வேண்டுமானால் புதிய விண்ணப்பதாரரின் பெயரை, ஏற்கனவே உள்ள சாதாரண அல்லது ஆயுள் கால உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசிம். [2]

வரலாறு

பிரித்தானியர் ஆட்சியின் போது பூனா வரலாற்றாசிரியர்களால் அகில இந்திய தேசிய வரலாற்றாசிரியர்கள் பேராயம் நிறுவுவப்பட்டது. இதன் முதல் அமர்வு பூனாவில் உள்ள பாரத் இதிகாஸ் சன்சோதக் மண்டலில் 1935 இல் கூடியது. வரலாற்றாசிரியர்களான டத்தோ வாமன் போட்டார், சுரேந்திர நாத் சென் (பின்னர் இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகத்தின் முதல் இயக்குநரானார்), சர் ஷஃபாத் அகமது கான் ஆகியோர் முதல் அமர்வில் கலந்து கொண்டனர். [3]

வரலாற்றாசிரியர்களான முகமது அபீப், சுசோபன் சர்க்கார், சையித் நூருல் அசன், ராம் சரண் சர்மா, ராதா கிருஷ்ண சவுத்ரி, சத்தீஷ் சந்திரா, பிபன் சந்திரா, ரூமிலா தாப்பர், இர்பன் அபீப், அதர் அலி, பருண் டே, இக்திதார் ஆலம் கான், பி. என். முகர்ஜி, கே. என். பணிக்கர், பிரஜாதுலால் சட்டோபாதயாய், திவிஜேந்திர நாராயண் ஜா, சுமித் சர்க்கார், சப்யசாச்சி பட்டாச்சார்யா, பிரீதம் சைனி [4] ஆகியோர் இந்திய இந்திய வரலாற்றுப் பேராயத்துடன் நீண்ட காலம் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். [5]

விருதுகள்

எச். கே. பர்புஜாரி விருது

விஸ்வநாத் காசிநாத் ராஜ்வாடே விருது (இந்திய வரலாற்றில் பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனை)

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்