இந்துப்பூர்

இந்துப்பூர் (Hindupur) இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் இந்துப்பூர் மண்டல் மற்றும் இந்துப்பூர் வருவாய் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.[3][2]இந்துபூர் நகரம், மாவட்டத் தலைமையிடமான அனந்தபூரிலிருந்து 98 கிமீ தொலைவில் உள்ளது. இந்துப்பூர் நகரம் ஆந்திர - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது.

இந்துப்பூர்
இந்துப்பூரில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என். டி. இராமாராவின் சிலை
இந்துப்பூரில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என். டி. இராமாராவின் சிலை
இந்துப்பூர் is located in ஆந்திரப் பிரதேசம்
இந்துப்பூர்
இந்துப்பூர்
ஆந்திரபிரதேச மற்றும் கர்நாடக மாநில எல்லையில், அனந்தபூர் மாவட்டத்தில் இந்துப்பூர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°49′48″N 77°29′24″E / 13.8300°N 77.4900°E / 13.8300; 77.4900
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்இந்துப்பூர் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்38.16 km2 (14.73 sq mi)
 • பரப்பளவு தரவரிசைஆந்திரப் பிரதேச அளவில் 20வது இடம்
ஏற்றம்
621 m (2,037 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்1,51,677
 • தரவரிசைஇந்தியா அளவில் 203வது நகரம்
 • அடர்த்தி4,000/km2 (10,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
 • பேச்சு மொழிகன்னடம்
நேர வலயம்ஒசநே5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
Telephone code91–8556
வாகனப் பதிவுAP–02
இணையதளம்hindupur.cdma.ap.gov.in

1920ல் நிறுவப்பட்ட இந்துப்பூர் நகராட்சி மன்றம் 38 உறுப்பினர்களைக் கொண்டது. 38.16 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்துப்பூர் நகராட்சி, 1,51,835 மக்கள்தொகையுடன் சிறப்புநிலை நகராட்சி தகுதி கொண்டது.

மக்கள்தொகையியல்

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்துபூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,51,677 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 76,370 ஆகவும்; பெண்கள் 75307 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 986 பெண்கள் வீதம் உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 980 பெண் குழந்தைகள் வீதம் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டோர் 17,185 ஆகவுள்ளனர். எழுத்தறிவு கொண்டோர் 1,01,176 (75.23 %) ஆகவுள்ளனர்.

இந்துப்பூர் நகர மக்கள்தொகையில் இந்துக்கள் 97,500 (64.28%) ஆகவும்; இசுலாமியர் 52,514 (34.62 %) ஆகவும்; மற்றவர்கள் 1.11% ஆகவுள்ளனர். [4]பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடி மக்கள் முறையே 8.82% மற்றும் 0.57% ஆகவுள்ளனர். இந்நகரம் ஆந்திரப் பிரதேசத்தில் இருப்பினும், மக்களின் பேச்சு மொழி கன்னட மொழியாக உள்ளது.

தொடருந்து சேவைகள்

நான்கு நடைமேடைகள் கொண்ட இந்துப்பூர் தொடருந்து நிலையத்தை நாளொன்றுக்கு 64 தொடருந்துகள் நின்று செல்கிறது.[5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindupur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்துப்பூர்&oldid=2566404" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்