ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நகரங்களின் பட்டியல் (List of cities in Andhra Pradesh) என்ற இக்கட்டுரையில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள நகரங்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கு ஆணையரின் அலுவலகம் நடத்திய 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்புகளின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நகரப் புள்ளி விவரங்கள்

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,00,000 மற்றும் அதற்கு மேலான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் நகரங்கள் என அழைக்கப்படுகின்றன [1]. மாநிலத் தலைநகரான அமராவதி உட்பட மொத்தம் 31 நகரங்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ளன [2]. இந்நகரங்களில் 14 மாநகராட்சிகள், 16 நகராட்சிகள் உள்ளடங்கியுள்ளன [3]. மாநிலத்தின் பதின்மூன்று மாவட்ட தலைநகரங்களும் நகரங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவையாவும் மாநகராட்சி தரநிலையில் உள்ளவையாகும். , சுற்றியுள்ள கிராமங்களையும் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இணைத்த பிறகான கணக்கெடுப்பின்படி விசாகப்பட்டினத்தின் மக்கள் தொகை 20,35,922 பேர் ஆகும். இம்மாநிலத்தில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமாக விசாகப்பட்டினம் கருதப்படுகிறது. 1,25,939 பேரை மக்கள்தொகையாகக் கொண்ட சிறீகாகுளம், குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியாகவும் கருதப்படுகிறது [3] விசாகப்பட்டினம் மற்றும் அமராவதி ஆகிய இரண்டு நகரங்களும் மக்கள் தொகை மிகுந்த பெரு நகரங்களாகக் கருதப்படுகின்றன.[4]. பரப்பளவின் அடிப்படையில் கணக்கிட்டால் விசாகப்பட்டினம் 681.96 கி.மீ 2 பரப்பளவைக் கொண்டு மிகப்பெரிய மாநகராட்சியாகத் திகழ்கிறது. இதற்கு அடுத்ததாக மாநிலத்தின் தலைநகரம் அமராவதி இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. 7.12 கி.மீ 2 பரப்பளவைக் கொண்ட புரோத்தாதூர் நகரம் மிகச்சிறிய நகராட்சியாகும்.ஆந்திரப் பிரதேசத்தில் மக்களடர்த்தி குறைந்த நகரமாக விசாகப்பட்டினமும், மக்களடர்த்தி மிகுந்த நகரமாக ஏலூரு நகரமும் கருதப்படுகின்றன. மாநகராட்சிகளில் 14.55 கி.மீ 2 பரப்பளவைக் கொண்ட ஏலூரு நகரம் சிறிய மாநகராட்சியாகக் கருதப்படுகிறது [3].

நகரங்களின் பட்டியல்

குறிப்பு

மச்சிலிப்பட்டினம், விசயநகரம் முதலியன மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்டு நகராட்சியாகவே உள்ளன [5][6].

வ.எண்.பெயர்மாவட்டம் வகை மக்கள் தொகை
(2011)[3][7]
பரப்பளவு
(sq.km.)[3]
மேற்கோள்
1விசாகப்பட்டினம்[8]விசாகப்பட்டினம்மாநகராட்சி2,035,922540.00
2விசயவாடாஎன் டி ஆர்மாநகராட்சி (அமராவதி)1,048,240110.44[9]
3குண்டூர்குண்டூர்மாநகராட்சி (அமராவதி)743,354164.48[10]
4நெல்லூர்நெல்லூர்மாநகராட்சி600,869230.41[11][12]
5ராசமுந்திரிகிழக்கு கோதாவரிமாநகராட்சி434,920144.73[13]
6கடப்பாகடப்பாமாநகராட்சி343,054164.08[14]
7கர்னூல்கர்னூல்மாநகராட்சி430,21449.50
8காக்கிநாடாகிழக்கு கோதாவரிமாநகராட்சி312,53830.51
9திருப்பதிதிருப்பதிமாநகராட்சி287,48227.44
10அனந்தபூர்அனந்தபூர்மாநகராட்சி261,00447.50
11விசயநகரம்விசயநகரம்நகராட்சி228,02527.90[6]
12ஏலூருமேற்கு கோதாவரிமாநகராட்சி217,87614.50[15]
13ஓங்கோல்பிரகாசம்மாநகராட்சி204,74625.00[16]
14நந்தியால்நந்தியால்நகராட்சி200,74619.00[17]
15மச்சிலிப்பட்டினம்கிருட்டிணாநகராட்சி169,89226.67[6]
16ஆதோனிகர்னூல்நகராட்சி166,53732.71[18]
17தெனாலிகுண்டூர்நகராட்சி164,93715.12
18புரோட்டத்தூர்கடப்பாநகராட்சி162,7177.12
19சித்தூர்சித்தூர்மாநகராட்சி153,76695.97[19]
20இந்துப்பூர்ஸ்ரீசத்ய சாய்நகராட்சி151,83524.06[20]
21பீமவரம்மேற்கு கோதாவரிநகராட்சி142,28025.60[21]
22மதனப்பள்ளிஅன்னமய்யாநகராட்சி135,66914.20[22]
23குண்டக்கல்அனந்தபூர்நகராட்சி126,27040.87[23]
24சிறீகாகுளம்சிறீகாகுளம்மாநகராட்சி125,93920.89[6][24]
25தர்மவரம்ஸ்ரீசத்ய சாய்நகராட்சி121,87440.50
26குடிவாடாகிருட்டிணாநகராட்சி118,16712.67
27நரசராவ்பேட்டைகுண்டூர்நகராட்சி116,2507.65[25]
28தாடிபத்திரிஅனந்தபூர்நகராட்சி108,1717.46[26]
29காவலிநெல்லூர்நகராட்சி104,00061.09
30தாடேபள்ளிகூடம்மேற்கு கோதாவரிநகராட்சி103,90620.71
31அமராவதிகுண்டூர்வகைப்படுத்தப்படவில்லை103,000217.23[27][28]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்