இன்சுலினோமா

இன்சுலினோமா (insulinoma) என்பது கணையத்தில் தோன்றும் ஒரு கட்டி ஆகும். இது மூளைத்தண்டு வடநரம்புக் கட்டியின் ஓர் அரிய வடிவமாகும். பெரும்பாலான இன்சுலினோமாக்கள் தீங்கற்றவை ஆகும். கணையத்திற்குள் குறிப்பாக அவற்றின் பிறப்பிடத்தில் வளர்கின்றன, ஆனால் இவற்றில் சில பரவும் புற்றுகள் ஆகும்.[1][2] கணையத்தில் அதிக அளவு இன்சுலின் சுரக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோசு உள்ள நிலையில் அதனை சரிசெய்ய அதிக அளவு இன்சுலின் சுரக்கிறது.

இன்சுலினோமா
Insulinoma
கணைய நாளமில்லா கட்டியின் நோயியல் (இன்சுலினோமா)
சிறப்புபுற்றுநோயியல்

நோய்க்கான காரணம்

வயிற்றுப்பகுதியில் கமைந்துள்ள கணையத்தில் பல நொதிகளும் ஆர்மோன்களும் சுரக்கின்றன. அதில் இன்சுலினும் ஒன்று. பல வேளைகளில் இரத்தச் சர்க்கரை அளவு குறையும் போது இன்சுலின் அளவும் குறைகிறது. இதனால் இரத்தச் சர்க்கரை அளவு சாதாரண நிலைக்கு வந்து விடுகிறது. கணையப்புற்று அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கும் போது அது இன்சுலினோமா எனப்படுகிறது. இரத்தச் சர்க்கரை அளவு குறைந்தாலும் இந்த புற்றுக்கட்டிகள் இன்சுலினைத் தொடர்ந்து சுரந்து கொண்டிருக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவு குறைந்து விடுகிறது.

கணையத்திலுள்ள பீட்டா செல்களில் கணையப்புற்று தோன்றுகிறது. இச்செல்களே இன்சுலினை சுரக்கின்றன.

இதன் விளைவாக, நோயாளிகள் இரத்தச் சர்க்கரைக் குறைவை (ஹைபோகிளைசீமியா) அறிகுறிகளாக முன்வைக்கின்றனர், இவை உணவு உண்பதன் மூலம் மேம்படுத்தப்படுகின்றன. இன்சுலினோமாவைக் கண்டறிவது பொதுவாக குறைந்த இரத்தச் சர்க்கரை, உயர்த்தப்பட்ட இன்சுலின், புரோன்சுலின் மற்றும் சி-பெப்டைட் (C-peptide) அளவுகளுடன் உயிர்வேதியியல் முறையில் செய்யப்படுகிறது/ மேலும் மருத்துவப் படிமவியல் அல்லது குருதிக் குழாய் வரைவி மூலம் கட்டியை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சையே உறுதியான சிகிச்சை முறையாகும்..

அறிகுறிகள்

நோயாளிகளில் பொதுவாக மூளைத்திறனை மாற்றும் இரத்த சர்க்கரை குறை நோய் (neuroglycopenia) அறிகுறிகள் காணப்படுகின்றன. தொடர்ச்சியான தலைவலி, சோம்பல், இரட்டைப் பார்வை, மற்றும் மங்கலான பார்வை (குறிப்பாக உடற்பயிற்சியின் போது) ஆகியவை இதில் அடங்கும். கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவு வலிப்பு நோய், ஆழ்மயக்கம், மற்றும் நிரந்தர நரம்பியல் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இதயத் துடிப்பு மிகைப்பு, வியர்வை, பசி, பதகளிப்பு, குமட்டல், திடீர் எடை அதிகரிப்பு சில நேரங்களில் காணப்படுகிறது.

நோய் முற்றிய நிலையில் மயக்கமும் இறப்பும் கூட நிகழலாம். பிச்சூட்டரி மற்றும் பராதைராய்டு புற்றுடன் 5% இன்சுலினோமா தொடர்புடையதாக உள்ளது. 2 செ.மீ. ஐ விடவும் குறைந்த அளவிலேயே உள்ளது.

மருத்துவம்

அறுவை மருத்துவமே முதல் நிலை மருத்துவமாக உள்ளது, 85% கணையம் வரை அகற்றப்படலாம். சர்க்கரை நோய்க்கு மருந்துகள் உள்ளன. அரிதாகவே இந்நோய் தோன்றுகிறது. வெகு அரிதாகவே குழந்தைகளிடம் காணப்படுகிறது.

90% இன்சுலினோமா புற்றுநோயாக இருப்பதிலை.அவை சாதாரண கட்டியாகவே உள்ளன

அறிதல்

இரத்தச் சர்க்கரை அளவினைக் கணித்தல், இன்சுலின் நிலையினை காணுதல், மீயொலி, வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி, காந்த அதிர்வு அலை வரைவு ஆய்வுகள் உதவும்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

  • Larsen PR, Williams RL (2003). Williams textbook of endocrinology (10th ed.). Philadelphia: WB Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7216-9184-8.
  • "Localization of insulinomas to regions of the pancreas by intra-arterial stimulation with calcium". Annals of Internal Medicine 123 (4): 269–73. Aug 1995. doi:10.7326/0003-4819-123-4-199508150-00004. பப்மெட்:7611592. 
  • Service FJ. Insulinoma. In: UpToDate, Rose, BD (Ed), UpToDate, Waltham, MA, 2005.

வெளி இணைப்புகள்

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இன்சுலினோமா&oldid=2964305" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்