எண்ணிம ஆவணச் சுட்டி

எண்ணிம ஆவணச் சுட்டி (digital object identifier) அல்லது எ.ஆ.சு. (:DOI) என்பது ஒரு உருச் சரமாகும். இது எண்ணிம முறையில் உள்ள ஆவணங்கள் அல்லது பொருள்களைத் தனித்துவமாக சுட்டிட பயன்படும் சுட்டியாகும். இணைந்துள்ள ஆவணத்தின் மேனிலைத் தரவுகள் எ.ஆ.சு பெயருடன் சேமிக்கப்படுகிறது. இந்த மேனிலைத் தரவுகளில் ஆவணம் சேமிக்கப்பட்டுள்ள இடம், உரலி போன்றவை, குறிக்கப்பட்டிருக்கும். ஓர் ஆவணத்திற்கான உரலியும் பிற மேனிலை தரவுகளும் மாறலாம்; ஆனால் எ.ஆ.சு மாறாது நிலைத்திருக்கும். எனவே எளிய உரலிகள் மூலம் சுட்டப்படுவதை விட எ.ஆ.சு மூலமாக தொடர்புகள் இணைக்கப்படும்போது அவை நிலையாக இருக்கும். உரலி மாறினால் பதிப்பித்தவர் மேனிலைத் தரவுகளில் மட்டுமே மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.[1][2][3]

பயன்பாடு

எ. ஆ. சுவை பின்வருமிடங்களில் பயன்படுத்துகின்றனர்:

  • மேற்கொள் தேவைப்படும் இடங்களில் (நூல், இதழில் வெளியாகும் கட்டுரைகள்) இவை 3,000-க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
  • ஆராய்ச்சி கட்டுரைகள், தொழில்நுட்ப தகவல் வழங்குமிடங்கள் மற்றும் அறிவியல் தரவுக் கூடங்களில்;
  • ஐரோப்பிய ஒன்றிய அரசாங்க வெளியீட்டாளர்கள்;[4]
  • கேளிக்கைச் சுட்டிப் பதிவு.

மேலும் பார்க்க

  • எண்ணிம சுட்டி
  • ஆவணச் சுட்டி

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை