இ. இ. சுந்திரிகர்

'இப்ராஹிம் இஸ்மாயில் சுந்திரிகர்(Ismail Ibrahim Chundrigar; [1] ( உருது: ابراہیم اسماعیل;   செப்டம்பர் 15, 1897 -26 செப்டம்பர் 1960), இ. இ. சுந்திரிகர் என்றும் அழைக்கப்படும் இவர் பாக்கிஸ்தானின் ஆறாவது பிரதமர் ஆவார். 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி முதல் பாக்கித்தானின் பிரதமராக பணிபுரிந்தார். 1957 டிசம்பர் 11 அன்று வரை நம்பிக்கையில்லாத் தீர்மானம் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

பம்பாயில் அரசியலமைப்புச் சட்டத்தில் பயிற்சி பெற்றவர், மேலும் பாக்கித்தானின் ஆட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சுந்திரிகரின் பதவிக்காலம் பாகிஸ்தானின் நாடாளுமன்ற வரலாற்றில் 13 நாட்கள் பிரதமராக பணியாற்றிய நூருல் அமினுக்குப் பிறகான இரண்டாவது குறுகிய காலமாகும். சுந்த்ரிகர் தனது பதவிக்காலத்தில் வெறும் 55 நாட்கள் மட்டுமே பணியாற்றினார். :136 [2] :244 [3]

சுயசரிதை

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சட்ட நடைமுறை

இப்ராகிம் இஸ்மாயில் சுந்திரிகர் 1897 செப்டம்பர் 15,அன்று இந்தியாவின் குஜராத்தின் கோத்ராவில் பிறந்தார் :106 :53 [4] அவர் இந்தியாவில் ஒரு முஸ்லிம் சமூகத்தில் குஜராத்தி பேசும் சுந்த்ரிகர் குடும்பத்தின் ஒரே பிள்ளையாவார்.[5] அவரது சுந்திர்கர் சமூகத்திலிருந்து, அவர் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்தவர் . :72 [6]

சுந்திரிகர் ஆரம்பத்தில் அகமதாபாத்தில் கல்வி பயின்றார், அங்கு அவர் மெட்ரிகுலேஷன் முடித்து உயர் படிப்புகளுக்காக பம்பாய்க்கு சென்றார். அவர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவர் தத்துவத்தில் பி.ஏ பட்டம் பெற்றார், பின்னர் 1929 இல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டம் பெற்றார் :101 [7] :111 1929 முதல் 1932 வரை சுந்த்ரிகர் அகமதாபாத் மாநகராட்சியின் வழக்கறிஞராக பணியாற்றினார். :90

1932 முதல் 1937 வரை, சுந்திரிகர் உரிமையியல் சட்டத்தை பயிற்சி செய்யத் தொடங்கினார், மேலும் 1937 ஆம் ஆண்டில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் சட்டப்பயிற்சி மேற்கொண்டார். அங்கு அவர் தனது நற்பெயரை நிலைநாட்டினார். :111 [8] இந்த காலத்தில், அவர் முஹம்மது அலி ஜின்னாவுடன் நெருங்கிப் பழகினார், அவருடன் சித்தாந்தம், பணி நெறிமுறைகள் மற்றும் அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். :321 [9][10]

இந்தியாவில் பிரித்தானிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய அரசு சட்டத்திற்கு பதிலளிப்பதற்காக 1935 ஆம் ஆண்டில், சுந்திரிகரை முஸ்லீம் லீக்பிரதிநிதித்துவப்படுத்தியது. மாநிலத் தலைவராக ஆளுநரின் பங்கு குறித்து, சுந்திரிகர் 1935 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் ஆளுநர் அனுபவித்த அதிகாரங்களுக்கு முரண்பட்டார். :50 [11]

1937 முதல் 1946 வரை, சுந்த்ரிகர் சட்டம் பயிற்சி மேற்கொண்டு மேலும் பயின்று வந்தார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக உரிமையியல் விஷயங்களில் வாதிட பல வழக்குகளை எடுத்துக் கொண்டார். :90 [12]

பாகிஸ்தான் பிரதமர் (1957)

பிரதமராக குறுகிய காலம்

1956 ல், பிரதமர் உசைன் சகீத் சுராவர்தியின் பதவி விலகலுக்குப் பிறகு அவாமி லீக் கட்சியின் ஆதரவுடன் சுந்திரிகர் பிரதமராக பரிந்துரைக்கப்பட்டார். கிருஷக் ஸ்ராமிக் கட்சி, நிஜெம்-இ-இஸ்லாம் கட்சி, குடியரசுக் கட்சி ஆகியவையும் இவரை ஆதரித்தன.[13] எவ்வாறாயினும், கலப்புக் கட்சிகளின் இந்த கூட்டணி, மத்திய அரசை நடத்துவதற்கான தனது அதிகாரத்தைப் பயன்படுத்த அவரை விடவில்லை, பாக்கித்தானின் தேர்தல் நடைமுறையில் திருத்தம் செய்ய குடியரசுக் கட்சி அதன் தலைவர்களான ஃபெரோஸ் கான் மற்றும் இஸ்கந்தர் மிர்சா தலைமையிய் சமரசத்தை எட்டியது.[7] அக்டோபர் 18, 1957 அன்று, சுண்ட்ரிகர் தலைமை நீதிபதி எம். முனீர் தலைமயில் பாக்கித்தான் பிரதமராக பதவியேற்றார் .

தேசிய சட்டமன்றத்தின் முதல் அமர்வில், குடியரசுக் கட்சி மற்றும் அவாமி லீக்கின் அமைச்சரவை அமைச்சர்களால் கூட பெரும் நாடாளுமன்ற எதிர்ப்பை சந்தித்த தேர்தல் நடைமுறையை சீர்திருத்துவதற்கான தனது திட்டங்களை சுந்த்ரிகர் முன்வைத்தார். :62 [13][14] அதிபர் இஸ்கந்தர் மிர்சாவும் அவரது குடியரசுக் கட்சியும் முஸ்லீம் லீக்கின் எதிர் தரப்பினரை கையாண்டு, குடியரசுக் கட்சியினரும் அவாமி கட்சியும் சேர்ந்து தேசிய சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அதில் வெற்ரி பெற்றனர். இதனையடுத்து 1957 டிசம்பர் 11 அன்று சுந்த்ரிகர் தனது பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டு பிரதமர் பதவியை துறந்தார். :62 :62

பாக்கித்தானில் பணியாற்றிய எந்தவொரு பிரதமர்களின் பதவிக் காலத்தை விடவும் சுந்திரிகர் மிகக் குறுகிய காலமே பணியாற்றினார்: 1957 - 17 அக்டோபர் முதல் 1957 திசம்பர் 11 வரை 55 நாட்கள் அவர் பதவியிலிருந்தார். :244 [15] :136 [16]

இறப்பு மற்றும் நற்பெயர்

1958 ஆம் ஆண்டில், சுந்த்ரிகர் உச்ச நீதிமன்ற வழக்கரிஞர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார், அவர் இறக்கும் வரை அப்பதவியில் இருந்தார். 1960 ஆம் ஆண்டில், சுந்திரிகர் ஆம்பர்க்குக்கு சென்று அங்கு சர்வதேச சட்ட மாநாட்டில் உரையாற்றினார் பின்னர், லண்டனுக்குச் சென்றபோது அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது

1960 இல், Chundrigar பயணம் அவர் சர்வதேச சட்டம் மாநாடு உரையாற்றினார் மற்றும் ஒரு சந்தித்தன உள்ள சென்றிருந்தபோது லண்டன் . சிகிச்சைக்காக, அவர் ராயல் வடக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு திடீரென இறந்தார். அவரது உடல் பாக்கிஸ்தானிலுள்ள உள்ள கராச்சிக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது, அங்கு அவர் உள்ளூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவரது நினைவாக, பாக்கித்தான் அரசு கராச்சியில் உள்ள மெக்லியோட் சாலையை அவரது பெயரை வைத்தது.[17]

மேலும் காண்க

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இ._இ._சுந்திரிகர்&oldid=3416288" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்