ஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர்

ஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர் அல்லது அமைதி குழாய்த்தொடர் என்பது ஈரானிலிருந்து பாக்கித்தான் வழியாக இந்தியா வரை இயற்கை எரிவாயுவை கொண்டுசெல்லும் குழாய்த்தொடராகும்.

ஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர்
ஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர் அமைவிடம்
Location
நாடுஈரான், பாக்கித்தான், இந்தியா
தொடக்கம்Asalouyeh
Passes throughபந்தர் அப்பாஸ், ஈரான்சாகர், குசுதர், சூயி, முல்தான்
முடிவுதில்லி
General information
வகைஇயற்கை எரிவாயு
பங்குதாரர்ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனம், Sui Northern Gas Pipeline Limited, Sui Southern Gas Company Limited
எதிர்பார்க்கப்படுவது2013
Technical information
நீளம்2,775 km (1,724 mi)
Maximum discharge40 பில்லியன் கன சதுர மீட்டர்கள் (1.4×10^12 cu ft)
விட்டம்56 அங் (1,422 mm)


காலக்கோடு

ஈரான் மற்றும் பாக்கித்தான் நாடுகள் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை 1994ல் தொடங்கின[1] இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 1995ல் இருநாடுகளும் ஆரம்பகட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி தெற்கு பார்சு எரிவாயு வயலிருந்து பாக்கித்தானின் கராச்சி நகருக்கு குழாய்த்தொடர் அமைப்பது குறிந்து ஆராயப்பட்டன. பின்பு ஈரான் பாக்கித்தானிலிருந்து இந்தியாவரை நீட்டிக்க விருப்பம் தெரிவித்தது. 1999 பெப்ரவரியில் ஈரானுக்கும் இந்தியாவிற்கும் முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.[2]

2007 பெப்ரவரியில், இந்தியாவும் பாக்கித்தானும் ஈரானுக்கு US$4.93 per million British thermal units (US$4.67/GJ) தர ஒப்பந்தம் செய்தன. ஆனால் விலை மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் தொடர்ந்தன.[3]

ஏப்ரல் 2008ல் சீன மக்கள் குடியரசும் இத்திட்டத்தில் பங்குபெற ஈரான் விரும்பியது.[4] ஆகஸ்டு 2010ல் பங்களாதேசும் கலந்துகொள்ள ஈரான் அழைப்புவிடுத்தது.[5]

2008ல் ஐக்கிய அமெரிக்காவுடன் குடிசார் அணுவாற்றல் ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து 2009ல் விலை மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் கூறி (குழாய்த்தொடர்) இத்திட்டத்திலிருந்து இந்தியா பின்வாங்கியது.[6][7] எனினும், மார்ச்சு 2010ல் பாக்கித்தானும் ஈரானும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த இந்தியா அழைத்தது. அது மே 2010ல் தெஹ்ரானில் நடந்தது.[8]

சனவரி 2010ல் பாக்கித்தான் இத்திட்டத்தை கைவிட அமெரிக்கா வலியுறுத்தியது. இத்திட்டத்தை அந்நாடு கைவிடும்பட்சத்தில் பாக்கித்தானில் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்கவும், ஆப்கானித்தான் வழியாக தஜிகிஸ்தானிலிருந்து மின்சாரம் பெற்றுத்தரவும் உதவி புரிவதாக தெரிவித்தது.[9] எனினும், இதனை பாக்கித்தான் பொருட்படுத்தாமல் ஈரானும் பாக்கித்தானும் எரிவாயு குழாய்த்தொடர் அமைக்க மார்ச்சு 16, 2010ல் அங்காராவில் கையெழுத்திட்டன.[6] சூலை 2011ல் கட்டுமானப் பகுதி நிறைவடைந்துள்ளதாக ஈரான் அறிவித்தது.[10]

இதனையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்