எடக்கல் குகைகள்

எடக்கல் குகைகள் (Edakkal Caves) (மலையாளம்: ഇടക്കൽ ഗുഹകൾ), இந்தியாவின் கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான கல்பெட்டா நகரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் மேற்கு தொடர்மலையில், எடக்கல் எனுமிடத்தில், கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில், கிமு 4,000 ஆயிரமாண்டுகளுக்கு முன் அமைந்த இரண்டு இயற்கையான குகைகள் ஆகும். [1][2]இக்குகைப் பகுதிகளில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்துள்ளது.[3] தென்னிந்தியாவின் கற்காலத்திய ஒரே பாறை ஓவியம் எடக்கல்லில் கண்டெடுக்கப்பட்டதாகும். [4]எடக்கல் குகைகள், கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலமாக உள்ளது. [5]

எடக்கல் குகைகள்
ഇടക്കൽ ഗുഹകൾ
Edakkal Caves
Edakkal Caves
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எடக்கல் குகைகளின் அமைவிடம்
இருப்பிடம்கேரள மாநிலத்தின் வயநாடு
பகுதிஇந்தியா
ஆயத்தொலைகள்11°37′28.81″N 76°14′8.88″E / 11.6246694°N 76.2358000°E / 11.6246694; 76.2358000
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 4 ஆயிரம் - கிமு 1700

எடக்கல் குகைகள்

தொழில்நுட்ப வரையறையின்படி எடக்கல்லில் இருப்பன குகைகள் அல்ல எனினும், பாறைப் பிளவுகளால் ஆன இரண்டடுக்கு கொண்ட இக்குகையின் கீழடுக்கு 18 நீளம், 12 அடி அகலம், 18 உயரம் கொண்டது. மேலடுக்கு 96 அடி நீளம், 22 அடி அகலம், 18 அடி உயரம் கொண்டது. இக்குகைச் சுவர்களில் கிமு 10,000 முதல் கிமு 5,000 வரையான காலப்பகுதிகளில் வரையப்பட்ட மனிதர்கள், விலங்குகள் மற்றும் வேட்டைக் கருவிகளின் பாறைச் செதுக்கல்களைக் கொண்டு, இப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனித குடியிருப்புகள் இருந்தன என அறிய முடிகிறது.[6]

மூன்று வகையான இப்பாறைப் பிளவுகள் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகும். எடக்கல் குகைகளில் மனிதர்கள் வரலாற்றில் வேறுபாட்ட காலப் பகுதிகளில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.[7]

பிரித்தானிய இந்தியாவின் மலபார் பகுதிகளில்1890-இல் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய பிரட் பாவ்செட் என்பவர் எடக்கல் குகைகளைக் கண்டுபிடித்தார்.[8]

எடக்கல் பாறை ஓவியங்கள்

இதனையும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edakkal Caves
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எடக்கல்_குகைகள்&oldid=3586325" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்