எரியூட்டுங் கிண்ணி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
எரியூட்டுங் கிண்ணி (flash pan அல்லது priming pan) என்பது வாய்வழி குண்டேற்ற துப்பாக்கிகளின் தொடு துளைக்கு அடுத்துள்ள, எரியூட்டும் கலவை/துகள்களை கொண்டிருக்கும், ஒரு சிறு கிண்ணமாகும். கைபீரங்கி, திரியியக்கிகள், சக்கரயியக்கிகள், மற்றும் தீக்கல்லியக்கிகளில், எரியூட்டும் கிண்ணி காணப்படும்.
எரியூட்டுங் கிண்ணியால், முதன்மை வெடிபொருளை பற்றவைத்தல் என்பது உத்திரவாதமில்லா வினை ஆகும். ஒருசில சமயங்களில், தீப்பொறியால் கிண்ணியில் ஒளி உண்டாகும், ஆனால் துப்பாக்கி வெடிக்காமல் இருக்கும். இவ்வகை செயலிழப்பை தான், 17-ஆம் நூற்றாண்டில், "கிண்ணியொளி" என்றனர். ஆங்கிலத்தில், இதை “flash in the pan” என்றனர்.[1]