கண்ணூர் கடற்கரை

கேரள கடற்கரை

கண்ணூர் கடற்கரை (Kannur Beach) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், கண்ணூர் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஐந்து கடற்கரைகளின் குழுவாகும். அவை

  1. பயம்பலம் கடற்கரை
  2. மீன்குனு கடற்கரை
  3. ஆதிகடலாய் கடற்கரை
  4. பேபி கடற்கரை
  5. தாயில் கடற்கரை
கண்ணூரைச் சேர்ந்த சமூக சேவகர் அஜிகோடன் ராகவனின் கல்லறை
பயம்பலம் கடற்கரையில் மக்கள்
பயம்பலம் கடற்கரை - பதனா தோடுவுடன் இணைதல்
முன்னாள் முதல்வர் ஈ.கே.நயனரின் கல்லறை
சாலத் சாலில் பகவதி கோயில்

கண்ணோட்டம்

கனாயி குஞ்ஞிராமன் உருவாக்கிய அம்மா (தாய்) என்ற சிற்பம் கடற்கரை தோட்டத்தில் கவரும் அம்சமாகும். [1] தோட்டத்தின் ஒரு பகுதி குழந்தைகளுக்கானதாக உள்ளது. மணிரத்னத்தின் திரைப்படமான அலைபாயுதே உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்த இடத்தில் படமாக்கப்பட்டுள்ளன. [2] ஏ. ஆர். ரகுமான் நடித்த வேர்ல்ட்ஸ்பேஸ் விளம்பரமும் இங்கே படமாக்கப்பட்டது.

முக்கிய நபர்களின் கல்லறைகள்

கண்ணூர் கடற்கரையானது கேரளத்தின் சில முக்கிய சமூகத் தலைவர்களின் கல்லறைகளுக்காக பிரபலமானது. இந்த கடற்கரைக்கு அருகே எ. கி. நாயனார், [3] சுதேசாபிமானி இராமகிருட்டிண பிள்ளை, ஏ. கே. கோபாலன், பாம்பன் மாதவன், சுகுமார் அழீக்கோடு, கே. ஜி. மாறார் ஆகிய தலைவர்களின் கல்லறைகள் உள்ளன. [1]

முழப்பிலங்காடு டிரைவ்-இன் பீச்

முழப்பிலங்காடு கடற்கரை அதன் கடினமான மேற்பரப்பு காரணமாக வாகனம் ஓட்ட பிரபலமா இடமாக உள்ளது. மகிழுந்துகள், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு தொடர்ந்தாற்போல ஐந்து கிலோமீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. தலசேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான டிரைவ்-இன் கடற்கரையாகும்.

தோட்டடா கடற்கரை

தோட்டாடா கடற்கரை என்பது ஒரு அழகான கடற்கரை   கண்ணூருக்கு தெற்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள இந்த கடற்கரை 800 மீட்டர் நீளம் கொண்டது. பல சுற்றுலா பயணிகள் இங்கு சூரிய குளியல் எடுக்க வருகிறார்கள். தோட்டாடா ஆறு கடற்கரையில் பாய்கிறது.

மீன்குன்னு கடற்கரை

மீன்குன்னு கடற்கரையானது அழீக்கோடு செல்லும் பாதையில் உள்ளது. இந்த கடற்கரை ஐரோப்பியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு கடற்கரையில் வசதிகள் இல்லை. ஒளிப்படம் எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகளுக்கு இது மிகவும் பிடித்த இடம்.

புனித ஏஞ்சலோ கோட்டை

கண்ணூர் கோட்டை அல்லது புனித ஏஞ்சலோ கோட்டையானது கண்ணூர் நகரத்தின் தெற்கே மூன்று கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கோட்டை 1505 இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. டச்சுக்காரர்கள் 1663 இல் கோட்டையைக் கைப்பற்றி நவீனப்படுத்தினர். 2015 ஆம் ஆண்டில், அகழ்வாய்வின் போது கோட்டையில் இருந்து கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மாப்பிளா விரிகுடா

மாப்பிளா விரிகுடா துறைமுகம், அரக்கல் அருங்காட்சியகம் ஆகியவை நகரத்திற்கு அருகில் உள்ளன. இந்த பகுதியில் பல அழகான பள்ளிவாசல்கள் உள்ளன.

மேலும் காண்க

குறிப்புகள்

காட்சியகம்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கண்ணூர்_கடற்கரை&oldid=3037573" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்