கம்மெலினேசியே

கம்மெலினேசியே (தாவரவியல் பெயர்:Commelinaceae[2], dayflower family அல்லது spiderwort family) என்பது பன்னாட்டு தாவரவியல் அமைப்பினர், ஏற்றுக்கொண்டு அறிவித்த, தனித்துவமுள்ள தாவரக் குடும்பங்களில் ஒன்றாகும். இக்குடும்பத்தைக் கண்டறிந்த தாவரவியலாளர், Mirb. ஆவார். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இக்குடும்பத்தைக் குறித்து வெளியிட்ட, முதல் ஆவணக் குறிப்பும், ஆண்டும் வருமாறு: Hist. Nat. Pl. 8: 177. 1804 (as "Commelinae"). இக்குடும்பத்தின், வரிசை கம்மெலினேல்சு (Commelinales) ஆகும். இக்குடும்பத்தில், 41 பேரினங்களும், 731 இனங்களும் உள்ளன.[3] இவற்றில் கம்மெலினா (Commelina = dayflowers = 'பகல் பொழுது பூக்கள்'), திராடெசுகன்டியா (Tradescantia = spiderworts) என்ற இரண்டு பேரினங்கள் முக்கியமானவையாக் கருதப்படுகின்றன.

கம்மெலினேசியே
Aneilema aequinoctiale
Commelina communis
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
Commelinales
குடும்பம்:
Commelinaceae

Mirb.[1]
பேரினங்கள்

கட்டுரையில் காண்க

வளர் இயல்புகள்

இவை நிலத்தில் வாழும் இயல்புடையன. இக்குடும்பத்தின் பல இனங்கள், அலங்காரப் பயிர்களாக வளர்க்கப்படுகின்றன. இந்தத் தாவரங்களின், தண்டுகள், பொதுவாக நன்கு வளர்ச்சியடைந்து, முனைகளில் பல நேரங்களில் பருத்துக் காணப்படுகின்றன. இலைகள் தண்டினைச்சுற்றி மாறி மாறி, எதிர்புறமாக அமைந்துள்ளன. மலர்கள் பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் அல்லது அதற்கும் குறைவான நேரமே, உதிராமல் இருக்கின்றன. மலர்களில் தேன் இல்லாமலும்,  மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளுக்கு, மகரந்தத் தூள்களை மட்டுமே வழங்குகின்றன. ஒவ்வொரு பூவிலும் ஆண், பெண் இன உறுப்புகள் (hermaphroditic) இருக்கின்றன.

இதன் பேரினங்கள்

  • இத்தாவரக்குடும்பத்தில், 36 பேரினங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கம்மெலினேசியே&oldid=3932218" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்