கார்மோ மலை

கார்மோ மலை (தாஜிக் மொழி: Қуллаи Гармо, குல்லை கார்மோ, உருசிய மொழி: пик Гармо, பீக் கார்மோ)மத்திய ஆசியாவில் தஜிகிஸ்தானில் உள்ள பாமிர் மலைத் தொடரில் உள்ள ஒரு மலையாகும். இந்த மலையின் உயரமானது 6,595 மீட்டர்கள் முதல் 6,602 மீட்டர்கள் வரையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

கார்மோ மலைச்சிகரம்
The Pamirs
உயர்ந்த இடம்
உயரம்6,595 m (21,637 அடி)
இடவியல் புடைப்பு1,265 m (4,150 அடி) Edit on Wikidata
ஆள்கூறு38°48′N 72°4′E / 38.800°N 72.067°E / 38.800; 72.067[1]
புவியியல்
கார்மோ மலைச்சிகரம் is located in தஜிகிஸ்தான்
கார்மோ மலைச்சிகரம்
Location in Tajikistan
அமைவிடம்தஜிகிஸ்தான், வடமேற்குகோர்னோ-படாக்சான்
மூலத் தொடர்பாமிர் மலைகள்

கார்மோ மலையில் பனியாறு ஒன்று உள்ளது. இந்த மலையின் கிழக்காக பெட்செங்கோ பனியாறு (உலகில் துருவப் பகுதிகள் தவிர்த்த இடங்களில் உள்ள பனியாறுகளில் மிக நீளமானது) பாய்கிறது. இம்மலைப்பகுதிக்கு அருகாமையில் உள்ள குடியேற்றப் பகுதியானது, இந்த மலையிலிருந்து தெற்காக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. (38° 39' 10 N, 71° 58' 2 E), இந்த குடியேற்றப்பகுதியின் உயரமானது 2785 மீட்டர்களாகும்.

இந்த மலைச்சிகரத்தின் இருப்பிடம் மற்றும் உயரம் பற்றிய நிச்சயமற்ற தன்மையே இந்தப் பெயரைத் தாங்கி நிற்பதன் காரணமாக உள்ளது. தற்போதைய ஒருமித்த கருத்தின் படி 6,595 மீட்டர்களாக உள்ளது. 1973 ஆம் ஆண்டுவாக்கில், அமெரிக்க அல்பைன் பருவ இதழ் இம்மலைச்சிகரத்தின் உயரத்தை 21,703 அடி(6,615 மீ) என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.[3]

வரலாறு

முன்னதாக, சோவியத் ஒன்றியத்தில் கார்மோ அறிவியல் தொடரின் கல்விசார் அமைப்பின் பகுதியாக கார்மோ அமைந்துள்ளது.(உருசியம்: Хребет Академии Наук; தாஜிக் மொழி|க்வாடோரகுகி அகாதெமியாய் பான்கோ) இது இந்த இடத்தில் தார்வோஸ் மலைத் தொடருடன் இணைகிறது.

1928 ஆம் ஆண்டு உருசிய படையெடுப்பின் போது லெனின் சிகரத்தின் முதல் ஏற்றத்தை அடைந்தது. அந்த இடம் வரையிலான உயரத்தை அளக்கவும் செய்தனர். தற்போது அது அலுவல்ரீதியாகவே இசுமாயில் சோமோனி சிகரம் எனவும் அழைக்கப்பட்டது. இந்த சிகரமே முதலில் தவறுதலாக கார்மோ என அடையாளப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் இந்த இடமானது தற்போதைய கார்மோவிற்கு பதினாறு கிலோமீட்டர்கள் வடக்கு திசையில் அமைந்துள்ளது.

சூலை 1962 இல் இரண்டு பிரித்தானிய மலையேற்ற வீரர்கள் வில்பிரிட் நாய்ஸ் மற்றும் இளைஞரான இசுகாட்டிய மலையேற்ற வீரர் இராபின் சுமித் இருவரும் இசுமாயில் சோமோனியில் (கம்யூனிச சிகரம் என அப்போது அழைக்கப்பட்டது) சோவியத்-பிரித்தானிய சாதனைக்கு தயாராகி, 4000 அடி (1200 மீட்டர்) உயர சிகரத்தை அடைந்த பிறகு இறந்து போயினர்.[4][5]

நாய்ஸ் மற்றும் சுமித் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகு உருசியர்களுக்கும், பிரித்தானியர்களுக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட்டன. சர் ஜான் அன்ட், படையெடுப்பின் இணைத் தலைவர், பிரிட்டனுக்குத் திரும்பினார். 1964 ஆம் ஆண்டில், பிரித்தானிய பத்திரிக்கைகள் கார்மோவை "21,800-அடி கார்மோ சிகரம்"எனக் குறிப்பிட்டிருந்தது.[6]

பெயர் குழப்பம்

பாமீர் மலைத்தொடரின் வடக்குப் பகுதி

1920கள் மற்றும் 1930களிலிருந்து, இம்மலையானது மற்றுமொரு உயர்ந்த சிகரமான இசுமாயில் சோமோனியுடன் இணைத்து குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இது சல ஆண்டுகளுக்கு ஸ்டாலின் சிகரம் என்றோ அல்லது இன்னும் சிறப்பாக கம்யூனிச சிகரம் என்றோ அழைக்கப்பட்டது. பிபிசி நடத்திய இணைய வழி வினாடி வினாப் போட்டி ஒன்றில் ”தஜிகிஸ்தானில் காணப்படும் கார்மோ சிகரம் சோவியத் ஒன்றியத்தின் மிக உயர்ந்த சிகரமாக இருந்த போது எந்தப் பெயரில் அழைக்கப்பட்டது?” என்ற வினாவிற்கான பதிலாக கம்யூனிச சிகரம் என்ற பதிலைத் தந்தது.[7]

1937 ஆம் ஆண்டு ஸ்டாலின் சிகரத்தின் ஏற்றத்தின் போது மைக்கேல் ரோம்ன் மற்றும் அலெக் பிரௌன் ஆகியோர் "தார்வாஸ் என்பது கார்மோ சிகரம்  என்றும் கார்மோவானது ஸ்டாலின் சிகரம் என்றும் பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டது”  என்று கூறினர். இதற்கான காரணங்கள் திருப்திப்படுத்தும் விதத்தில் இல்லை.[8] பிரித்தானிய ஆட்சி அலுவலக உபயோகத்திற்காக புவியியல் பெயர்களைப் பரிந்துரைக்கும் நிலைக்குழுவின் ஆய்வறிக்கையானது தஜிகிஸ்தான், பாமீர் மலைத்தொடரின் உயரமான நீடித்த தன்மையை (நவம்பர் 2001) பின்வருமாறு கூறுகிறது:

இறுதியான ஆர்வமூட்டக்கூடிய கருத்தானது தஜிகிஸ்தானின் உயரமான மலைச் சிகரத்தைப் பற்றியது; உண்மையில், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் முழுமைக்குமான உயரமான மலைப்பகுதியாகும். இந்த சிகரமானது(3857N 7201E) 7495 மீட்டர் உயரத்தை உடையதாகும். 1933, வரையிலும் இது கார்மோ சிகரம் எனப்பட்டது. ஒரு நாளில் இந்தப் பெயர் தெற்கிலிருந்த மற்றொரு உயரம் குறைந்த சிகரத்திற்கு (3848N 7204E) மாற்றி வைக்கப்பட்டது. அந்தப் பெயர் இன்னும் நிலைத்திருக்கிறது. உயரமான சிகரத்திற்கான புதிய பெயரானது ஸ்டாலின் சிகரம் என 1962 ஆம் ஆண்டு வரையிலும் நிலைத்திருந்தது. அதன் பிறகு ஸ்டாலின் சிகரமானது கம்யூனிசத்தின் சிகரம் என்றழைக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டில், பல விதமான மூலங்கள் கார்மோவை பாமீர் மலைத்தொடரின் உயரமான மலைச்சிகரமாக அடையாளப்படுத்தின அல்லது இதன் உயரத்தை 7000 மீட்டர்கள் எனத் தந்தன.[10][11][12][13][14][15][16]

புகழ் பெற்ற கலாச்சாரம்

கார்மோ மலைச்சிகரமானது டெக்சாஸ் கருவிகள் TI-99/4A தனிநபர் கணினி விளையாட்டில் குறிப்பிடப்படும் ஆறு மலைச்சிகரங்களில் ஒன்றாக உள்ளது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கார்மோ_மலை&oldid=3792670" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்