மலை முகடு

மலை முகடு (Summit) என்பது உயரத்தில் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களையும் விட உயர்ந்த இடமாகும். கணித முறையில், உயர அளவீட்டில் அண்மித்த பெருமம் ஆகும். இட அமைப்பியலில் சிகரம், "வான் உச்சி", "acme", "apex", "peak", summit என்பன ஒத்த சொற்களாம்.

உலகின் மிக உயரமான மலை முகடான எவரெசுட்டு மீது ஏறும் மலையேறிகள்.
சுவிட்சர்லாந்தின் மிக உயரிய ரோசா மலையின் மலை முகட்டிலிருந்து

உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெசுட்டு சிகரம் உள்ளது; இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8844.43 மீட்டர்கள் (29,029 அடி) ஆகும். இதனை அலுவல்முறையாக முதன்முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் இல்லரி. 1953இல் அவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.[1][2] பன்னாட்டு மலையேறுவோர் கூட்டமைப்பின் வரையறைப்படி மலை முகடொன்று 30 மீட்டர்s (98 அடி) மேலிருந்தாலே தனித்துவம் பெற்றதாகக் கொள்ளபடும். குறைந்தது 300 மீட்டர்s (980 அடி) உயர வேறுபாடு இருந்தால் தனி மலையாகக் கொள்ளப்படும். இவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

கலைச்சொல்உயர வேறுபாடு
கீழ் முகடு< 30 மீ
தனித்த மலை முகடு30 மீ அல்லது மேல்
மலை300 மீ அல்லது மேல்
குளிர்காலத்தில் ஈரானின் தாமாவந்து மலையின் முகடு
ஐக்கிய அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள மீயுயர் முகடு ஜெஃப் டேவிசு சிகரம்
எல்பிரஸ் மலையும் அதன் இரு மலை முகடுகளும் (காக்கேசியா, உருசியா)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மலை_முகடு&oldid=2800709" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை