உள்ளடக்கத்துக்குச் செல்

கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாசுக்கோ-பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்இசுக்கொட்லாந்து அரசு
இயக்குனர்கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம் லிட்.
சேவை புரிவதுகிளாஸ்கோ, பிரெஸ்ட்விக், இசுட்ராத்கிளைடு, இசுக்கொட்லாந்து
அமைவிடம்பிரெஸ்ட்விக், தெற்கு ஐர்சையர்
உயரம் AMSL65 ft / 20 m
இணையத்தளம்glasgowprestwick.com
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
மீட்டர்அடி
12/302,9869,797பைஞ்சுதை/அசுபால்ட்டு
03/211,9056,250அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2013)
பயணியர்1145836
வானூர்தி போக்குவரத்து24305
மூலங்கள்: ஐ.இரா. வான்வழித் தகவல் வெளியீடு - தேசிய வான் போக்குவரத்து சேவைகள்[1]
ஐக்கிய இராச்சிய குடிசார் வான்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் புள்ளிவிவரங்கள்[2]

கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம் (Glasgow Prestwick Airport) கிளாஸ்கோவின் இரண்டாவது வானூர்தி நிலையம் ஆகும். இது கிளாசுக்கோ பெருநகரப் பகுதிகளுக்கும் வானூர்தி நிலையத்திலிருந்து வடகிழக்கில் 1 கடல் மைல் (1.9 km; 1.2 mi) தொலைவிலுள்ள[1] (கிளாசுக்கோவிலிருந்து 32 மைல்கள்) தெற்கு ஐர்சையரின் பிரெஸ்ட்விக் நகருக்கும் சேவையாற்றுகிறது.

பொருண்மிய அளவில் இது இசுக்கொட்லாந்தின் இரண்டாவது பெரிய நிலையமாக இருப்பினும் பயணிகள் போக்குவரத்தின்படி, (எடின்பர்கு வானூர்தி நிலையம், கிளாசுக்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம், அபர்தீன் வானூர்தி நிலையங்களை அடுத்து) நான்காவது இடத்தில் உள்ளது. 2007இல் பயணிகள் போக்குவரத்து உச்சத்தை அடைந்து 2.4 மில்லியன் பேர் பயன்படுத்தினர். குறைந்த கட்டண சேவையாளர்களும் ஒப்பந்த சேவையாளர்களும் இந்த வானூர்தி நிலையத்தை கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். ரயான்ஏர் என்ற குறைந்தக் கட்டணச் சேவை நிறுவனம் இதனை அடித்தளமாகக் கொண்டு தனது பறப்பு சேவைகளை இயக்குகிறது. 2013இல் குறிப்பிடத்தக்க அளவில் பயணிகள் போக்குவரத்து குறைந்து 1.1 மில்லியன் பயணிகள் கடந்து சென்றுள்ளனர்.[2]

மேற்சான்றுகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்