குடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டி

கேரளத்தில் நடக்கும் ஒரு படகுப் போட்டி

குடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டி ( மலையாளம்: പ്രസിഡന്റ്'സ് ട്രോഫി വള്ളം കളി ) என்பது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் நாள் கேரளத்தின், கொல்லம் நகரில் உள்ள அஷ்டமுடி ஏரியில் நடைபெறும் பிரபலமான படகுப் போட்டியாகும். கேரள பிறவி என்று அழைக்கப்படும் நாளான இது இந்திய மாநிலமாக கேரளத்தின் பிறப்பை (உருவாக்கம்) குறிக்கிறது. கொல்லம் அஷ்டமுடி ஏரியில் இலையுதிர்காலத்தில் ஓணம் என்னும் அறுவடை திருநாள் காலத்தில் நடைபெறும் இந்தப் போட்டி மிகவும் பிரபலமானது. சுண்டன் வல்லம் (பாம்பு-படகுகள்), வேப்பு வள்ளத்தின் இரண்டு வடிவங்கள், மற்றும் இருத்துக்குடி வள்ளத்தின் இரண்டு வடிவங்களில் என ஐந்து பிரிவுகளில் போட்டி நடக்கும். பதினாறு பாம்பு-படகுகள் நான்கு துணைப்பந்தய ஆட்டங்களில் போட்டியிடும். இந்த கோப்பை இந்திய ஜனாதிபதியின் பெயரில் நிறுவப்பட்டது. இந்திய ஜனாதிபதி இந்தப் போட்டடியைக் காண வருவார், மேலும் கோப்பையையும் ரொக்கப் பரிசையும் வென்ற அணிக்கு வழங்குவார். 2019 முதல் ஐபிஎல்- மாதிரியாக கொண்டு கேரளத்தின் படகு பந்தய லீக்கின் ஒரு பகுதியாக இந்தப் போட்டி மாற்றப்படும். வாகையர் படகு லீக்கின் இறுதி நிகழ்வாக ஜனாதிபதி கோப்பை படகுப் போட்டியை உருவாக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. [1]

ஜனாதிபதி கோப்பை படகுப் போட்டி
ஜனாதிபதி கோப்பை படகுப் போட்டி 2016
முதல் ஆண்டு நிகழ்வு2011
நடப்பு வாகையர்நடுபகம் சுண்டன் (2019)
நடக்குமிடம்கேரளம், கொல்லம் அஷ்டமுடி ஏரி
கோப்பைஜனாதிபதி கோப்பை

நிகழ்வு பற்றி

கொல்லம் என்பது கேரளத்தின் ஒரு சிறு வடிவம் போன்றது ஆகும். அஷ்டமுடி ஏரி - சுற்றிலும் மயங்கவைக்கும் பசுமையும், அழகும் அமைதியுமான நீர் பரப்புமாக உள்ளது. கடல், ஏரிகள், சமவெளி, நினைவுச்சின்னங்கள், ஆறுகள், நீரோடைகள், உப்பங்கழிகள், காடுகள், பரந்த பசுமையான வயல்கள் போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்டதாக கொல்லம் பகுதி உள்ளது.

போட்டிக்கான இடம் அஷ்டமுடியின் நுழைவாயிலில் உள்ளது. தெவலி அரண்மனைக்கு அருகிலுள்ள நீர்த்தம்பத்தில் இருந்து போட்டி தொடங்கும். போட்டி முடியும் இடமானது படகு முனையத்தின் முன் பகுதியாகும். இந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையில் 1250 மீ நீளமுள்ள நீர்நிலையானது போட்டிக்கான பாதையாக திட்டமிடப்பட்டுள்ளது.

வஞ்சிப்பாட்டின் (படகோட்டிகளின் பாடல்) வேகமான தாளத்துக்கு ஏற்றவாறு ஓர்மையுடன் படகோட்டிகள் தங்கள் துடுப்புகளை துழாவுகின்றனர். பிரமாண்டமான கறுப்புப் படகுகள் அஷ்டமுடி ஏரியின் அழகிய பந்தயப் பாதை வழியாக சீறிப் பாய்கின்றன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள், ஏரியின் முன்புறம் திரண்டு வந்து பார்ப்பது, படகோட்டிகளின் உற்சாகத்தைத் தூண்டுகிறது.

டிடி நேஷனல் மற்றும் டிடி மலையாளம் தொலைக்காட்சி அலைவரிசைகளில் படகுப் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

வாகையர்

குடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டியின் முதல் பதிப்பின் வெற்றியாளர்கள் - ஸ்ரீ கணேசன் சுண்டன் ( செயின்ட் பிரான்சிஸ் படகு கிளப், கொல்லம் ). [2] இரண்டாம் இடம் - தேவாஸ் சுண்டன் ( இயேசு படகு கிளப், கொல்லம் ).

இந்தியாவின் குடியரசு தலைவர் திருமதி. பிரதிபா தேவிசிங் பாட்டீல் குடியரசுத் தலைவர் வெற்றியாளர்களுக்கு கோப்பையையும் ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்.

கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகை

தங்கமுலாம் பூசப்பட்ட கோப்பை மற்றும் ரூபாய் 10 லட்சம் ரொக்கப் பரிசு.

வெற்றியாளர்கள்

ஆண்டுவெற்றியாளர்கள்சங்கம்படகின் தலைர்
2011ஸ்ரீ கணேஷ் சுண்டன்செயிண்ட் பிரான்சிஸ் படகு கிளப்கே அருண்குமார்
2012ஜவஹர் தயங்கரிசங்கம் கண்ணெட்டி
2013கரிச்சல் சுண்டன்இயேசு படகு கிளப்-கொல்லம்
2014அனரிகுமாரகம் டவுன் படகு கிளப்
2015நடத்தப்படவில்லை
2016கட்டில் தெக்கெதில்புதிய அலாபி டவுன் படகு கிளப்
2017செயின்ட் பியஸ் எக்ஸதுஎஸ்.எஃப்.பி.சி.
2018நடத்தப்படவில்லை
2019நடுபகம்பல்லதுருதி படகு கிளப் (பிபிசி)நாராயணங்குட்டி

புரவலர்கள்

  • தலைமைப் புரவலர்: கேரள முதல்வர்
  • தலைவர்: கொல்லம் மாவட்ட ஆட்சியர்
  • பொதுக் குழுத்தலைவர்: கொல்லம் மாவட்ட நீதித்துறை நடுவர்
  • மேயர், கொல்லம் மாநகராட்சி

கேரளாவில் குறிப்பிடத்தக்க பிற படகுப் போட்டிகள்

நகரத்தில் பிற குறிப்பிடத்தக்க ஈர்ப்புகள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்