கூம்பு வடிவ கருவிழி

கூம்பு வடிவ கருவிழி (Keratoconus), கண்ணின் முன்பகுதியான கருவிழியானது மெலிந்து, கூம்பு வடிவத்தில் துருத்திக் கொண்டு இருக்கும்.[1] இது ஆரம்ப நிலையில் தீவிரமாக இருக்காது. ஆனால் நாளடைவில் பார்வையைப் பாதிக்கும். உடல் வளர்ச்சி பெறும்போது இந்த குறைபாடு வெளியில் தெரியும்.

கூம்பு வடிவ கருவிழி

காரணங்கள்

கூம்பு வடிவ கருவிழிக்கு சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

அறிகுறிகள்

  • மங்கலான பார்வை
  • வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுதல்
  • கண் கண்ணாடியின் சக்தியை அடிக்கடி மாற்றும் தேவை
  • கருவிழி வீக்கமடைதல். வீக்கமடைவதால் கிட்டப் பார்வை மற்றும் சமச்சீரற்ற பார்வை (astigmatism) உண்டாகும். கண் தசையில் தழும்பு உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

சிகிச்சை

இக்குறைபாடு ஆரம்ப நிலைகளில் இருக்கும்போது கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்படுகிறது. குறைபாடு தீவிரமடைந்த நிலையில், நோயாளிகளுக்கு பொருந்தும் வகையில் பிரத்யேக காண்டாக்ட் லென்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் பார்வை மேம்படுவதுடன் ஒளியைப் பார்த்தால் கண் கூசும் நிலையும் சரி செய்யப்படும். C3-R எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களின் சதவீதம் மிகவும் குறைவு. C3-R எனப்படும் புதிய வகை, துளையிடாத அறுவை சிகிச்சை மூலம் கருவிழியின் பலம் அதிகரிக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை மூலம் ஏற்கனேவே உள்ள வீக்கத்தைக் குறைக்க முடியாது. ஆனால் மேலும் மோசமடையாமல் தடுக்க உதவும். கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் சரியாக பொருந்தாமல் இருப்பவர்களுக்கு, கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிந்தும் தெளிவான பார்வை கிடைக்காதவர்களுக்கு கருவிழி அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்