கொம்பு குருத்து நீக்கல்

கால்நடைகளுக்கு கொம்பு குருத்து நீக்குதல் (Livestock dehorning) என்பது கொம்பு உருவாக்கும் செல்களை அழிப்பதாகும். பொதுவாக மாடுகளுக்கு அவை கன்றாக இருக்கும்போதே கொம்பு குருத்தை தீய்த்து கொம்பு வளராமல் தடுக்கப்படுகிறது. கொம்பு குருத்தை நீக்க பல வழிகளை கடைபிடிக்கப்படுகின்றன, இவற்றில் பல சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. பொதுவாக கால்நடைகளின் கொம்பு குருத்தை இரசாயணங்கள் அல்லது சூடான இரும்பை பயன்படுத்தி நீக்கப்படுகிறது. சூடான இரும்பு கொண்டு தேய்ப்பதே சாதாரணமாகக் கையாளப்படும் முறையாக இருந்தாலும் அது மிகவும் வலி ஏற்படுத்தக் கூடியது. மின்சார கொம்பு சுடும்கருவியைப பயன்படுத்தி கொம்பு குருத்து நீக்குதலும் செய்யப்படுகிறது, இதில் மிக அதிகமான வெப்பம் பயன்படுத்தும்போது குருத்துக்குக் கீழ் உள்ள எலும்புகள் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளதால் கவனமாக செய்யவேண்டும்.[1]

நியூசிலாந்தில் கொம்பு நீக்கப்பட்ட ஒரு பசுமாடு

கொம்பு குருத்து நீக்கும் முறை

கொம்பு குருத்து நீக்குவதற்கான சரியான பருவம் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாத வயதுடைய கன்றுகள். முதலில் கொம்பு தோன்றும் இடத்தை அடையாளம் கண்டு அதனை சுற்றியுள்ள முடியை அப்புறபடுத்த வேண்டும் . நோவோகேன் 2 சத மருந்தை முடி வெட்டப்பட்ட இடத்தில் செலுத்தி உணர்ச்சியற்றதாக்க வேண்டும் . பின்பு மின்சாரத்தால் சூடாக்கபட்ட கொம்பு சுடும் கருவியை கொண்டு அடி குருத்தை கருக்கவேண்டும். பின்னர் காயத்திற்கு ஒரு வார காலத்திற்கு களிம்பு இட்டு புண்ணை ஆற்ற வேண்டும்.

கொம்பு குருத்து நீக்குதலின் நன்மைகள்

  1. . கால்நடைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் பொழுது காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
  2. . வெவ்வேறு திசையில் கொம்புகள் வளர்வதை தவிர்க்கலாம்.
  3. . பண்ணையில் உள்ளவர்கள் எளிதாக பயமின்றி கால்நடைகளை பராமரிக்கலாம்.
  4. . கால்நடை உட்கொள்ளும் உணவின் ஒரு பகுதி இந்த கொம்பு வளர்ச்சியில் செலவிடப்படுவதை தடுக்கலாம்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்