கோப நாடு

கோபர்கள் நாடு அல்லது கோப இராச்சியம் (Gopa Rashtra or Gopa kingdom) பண்டைய சமசுகிருத இலக்கியங்களில் பரத கண்டத்தின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை, விருஷ்ணி குலத்தில் பிறந்த ஸ்ரீகிருஷ்ணரின் முன்னோர்கள் ஆண்டதாக கூறப்படுகிறது.

கல்வெட்டுக் குறிப்புகளின் கோபா நாடு, சாளுக்கியப் பேரரசில் தற்கால மகாராட்டிரம் மற்றும் கோவா பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. [1] குப்தப் பேரரசர் ஸ்கந்தகுப்தர் மற்றும் சாளுக்கியர் காலத்திய ஜூனாகத் கல்வெட்டுக் குறிப்புகளில், கோப நாடு, ஆடு, மாடுகள் மேய்க்கும் யாதவர்கள் வாழ்ந்த பகுதி என ஆவணப்படுத்தியுள்ளது.[2][3]

கௌடில்யர், கோப இராச்சிய மக்கள் வேளாண்மை, கால் நடைகளை மேய்த்தல் மற்றும் ஆயுதம் தாங்கி போர் புரியும் ஆற்றல் படைத்தவர்கள் என தனது நூலில் குறித்துள்ளார். [2] மகாபாரதத்தின் பீஷ்ம பருவத்தின், அத்தியாயம் 9-இல் குறித்த பாண்டு இராச்சியம், கோப இராச்சியம், மல்ல இராச்சியம், அஸ்மகம் ஆகியவைகள் இணைந்து தற்கால மகாராட்டிரம் உருவாகியுள்ளது.[4] கோவா எனும் சொல் ஆடு, மாடுகள் மேய்க்கும் இனத்தவர்கள் வாழ்ந்த கோப இராச்சியத்திலிருந்து உருவானது.[5]

வரலாறு

பண்டைய பரத கண்டத்தின் கோப இராச்சியம் குறித்து மகாபாரத இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. [6]

முன்னர் கோப இராஷ்டிரத்தின் பகுதியாக கோவா இருந்தது. கோப இராஷ்டிரம் எனும் பெயரே (தற்கால கோவா பகுதி) கோமாந்த், கோமாந்தகம், கோபராஷ்டிரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  • Kisari Mohan Ganguli, The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa Translated into English Prose, 1883-1896.

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோப_நாடு&oldid=2978738" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்