கோவா ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கோவா ஆளுநர்களின் பட்டியல், கோவா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பனஜியில் உள்ள ராஜ்பவன் (கோவா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கோவாவின் ஆளுநராக பி. எஸ். சிறீதரன் பிள்ளை உள்ளார்.

கோவா ஆளுநர்
ராஜ் பவன், கோவா
தற்போது
பி. எஸ். சிறீதரன் பிள்ளை

7 சூலை 2021 முதல்
வாழுமிடம்ராஜ்பவன், பனஜி (கோவா)
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்கோபால் சிங்
உருவாக்கம்30 மே 1987; 36 ஆண்டுகள் முன்னர் (1987-05-30)
இணையதளம்www.goa.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள கோவா மாநிலம்.

கோவா 30 ஜூலை, 1987-க்கு முன்புவரை இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது. அதன் பின் மாநிலமாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரவரம்பு மற்றும் செயற்பாடுகள்

ஆளுநரின் அதிகாரங்கள் பல வகைகளில் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

  • செயலாட்சி அதிகராங்கள் நிருவாகம், நியமனம் மற்றும் நீக்கல் அதிகாரங்கள்,
  • சட்டமன்ற அதிகாரங்கள் மாநிலங்களின் சட்டமன்றம் மூலம் சட்டங்களை உருவாக்குதல். (சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற கீழவை)
  • வரையறைக்குட்பட்ட அதிகாரங்கள் ஆளுநரின் அதிகார வரம்பிற்குள் (அ) வரையறைக்குட்படுத்தப்பட்ட அதிகாரங்களின்படி செயல்படும் அதிகாரங்கள்.

அலுவல்நிலை அதிகாரங்கள்

  • ஆளுநர் அம்மாநில பல்கலைக்கழக வேந்தராக அவரின் அலுவல்நிலை அதிகாரங்களின்படியும், கோவா பல்கலைக்கழக சட்டம், 1984 இன்படியும் அப்பொருப்பை வகிக்கின்றார்.
  • ஆளுநர் அலுவல்நிலை அதிகாரத்தின்படி (ex-officio-எக்ஸ் அபிசியோ) இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கோவா மாநிலக் கிளைத் தலைவராக பொறுப்பு வகிக்கின்றார். கோவா மாநில செஞ்சிலுவைச் சங்கத்தின் கூட்டத் தலைவர் (chairman-சேர்மேன்) மற்றும் சிறப்புச் செயலாளர்கள (Hon. Secretary-ஆனரரி செக்ரட்டரி) ஆளுநரால் தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
  • ஆளுநர் கோவா மாநில சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் குழுத்தலைவராக செயல்படுகின்றார். இக்குழுவில் அரசு செயலர்கள் மற்றும் அரசு சாரா அலுவலர்கள் இடம்பெற்று ஆறு மாதத்திற்கொருமுறை இக்குழுக் கூட்டபெற்று கோவா மாநிலத்தின் சுற்றுச்சூழல், சூழிலியல் இவைகளை ஆராய்ந்து முடிவெடுக்கின்றது.
  • ஆளுநர் ஒய்வுபெற்ற இராணுத்தினர், மற்றும் விதவைகளுக்கான மறுவாழ்வு நிதியத்தின் கூட்டத் தலைவராக செயல்படுகின்றார்.

கோவா முன்னாள் ஆளுநர்களின் பட்டியல்

போர்ச்சுகீசியத் தலைமை ஆளுநர்கள்

முதல் போர்ச்சுகீசியத் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) 1505 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கோ டி அல்மீதா வும் கடைசித் தலைமை ஆளுநராக மனுவல் அன்டோனியோ ஒசலோ இ சில்வா 1961 வரை பொறுப்ப வகித்தனர். கோவாவில் மொத்தம் 163 தலைமை ஆளுநர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். மொத்தப்பட்டியலைக் காண இத்தளத்தை தொடர்பு கொள்ளவும்; ராஜ்பவன் கோவா அரசு இணையம் பரணிடப்பட்டது 2005-02-09 at the வந்தவழி இயந்திரம்.

துணைநிலை ஆளுநர்கள்

கோவா, தாமன் டையூவுடன் இணைந்து இந்தியாவின் ஆட்சிப்பகுதியாக 30 மே, 1987 வரை செயல்பட்டது. அதுவரை அப்பகுதியை துணைநிலை ஆளுநர்களே கோவாவின் அட்சி பொறுப்பை ஏற்றிருந்தனர்.[1]

கோவாவின் முன்னாள் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
வ.எண்துணைநிலை ஆளுநர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1கே. பி. கேன்டித் (இராணுவ ஆளுநர்)19 டிசம்பர் 19616 சூன் 1962
2டி. சிவசங்கர்7 சூன் 19621 செப்டம்பர் 1963
3எம். ஆர். சச்தேவ்2 செப்டம்பர் 19638 டிசம்பர் 1964
4ஹரி சர்மா12 டிசம்பர் 196423 பெப்ரவரி 1965
5கே. ஆர். டம்லே24 பெப்ரவரி 196517 ஏப்ரல் 1967
6நகுல் சென்18 ஏப்ரல் 196715 நவம்பர் 1972
7எஸ். கே. பானர்ஜி16 நவம்பர் 197215 நவம்பர் 1977
8பி. எஸ். கில்16 நவம்பர் 197730 மார்ச் 1981
9ஜக்மோகன்31 மார்ச் 198129 ஆகத்து 1982
10ஐ. எச். லத்திப்30 ஆகத்து 198223 பெப்ரவரி 1983
11கே. டி. சத்தரவாலா24 பெப்ரவரி 19833 சூலை 1984
12ஐ. எச். லத்திப்4 சூலை 198423 செப்டம்பர் 1984
13கோபால் சிங்24 செப்டம்பர் 198429 மே 1987

1987-க்குப்பின் பொறுப்பேற்ற ஆளுநர்கள்

கோவா 1987 முதல் ஆட்சிப்பகுதியிலுருந்து மாநிலமாக அறிவிக்கப்பட்டது அதுமுதல் பொறுப்பேற்ற மாநில ஆளுநர்கள்;

கோவாவின் (1987க்குப்பின்) முன்னாள் மாநில ஆளுநர்களின் பட்டியல்
வ.எண்ஆளுநர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1கோபால் சிங்30 மே 198717 சூலை 1989
2குர்ஷத் ஆலம் கான்18 சூலை 198917 மார்ச் 1991
3பானு பிரக்காஷ் சிங்18 மார்ச் 19913 ஏப்ரல் 1994
4பி. ராச்சையா4 ஏப்ரல் 19943 ஆகத்து 1994
5கோபால ராமானுஜம்4 ஆகத்து 199415 சூன் 1995
6ரோமேஷ் பண்டாரி16 சூன் 199518 சூலை1996
7பி. சி. அலெக்சாண்டர்19 சூலை 199615 சனவரி 1998
8டி. ஆர். சத்தீஷ் சந்திரன்16 சனவரி 199818 ஏப்ரல் 1998
9ஜே. எப். ஆர். ஜேக்கப்19 ஏப்ரல் 199826 நவம்பர் 1999
10முகம்மது பசூல்26 நவம்பர் 199925 அக்டோபர் 2002
11கிதார் நாத் சகானி26 அக்டோபர் 20022 சூலை 2004
12முகம்மது பசூல்3 சூலை 200416 சூலை 2004
13எஸ். சி. ஜமீர்17 சூலை 200421 சூலை 2008
14சிவிந்தர் சிங் சித்து21 சூலை 200829 ஏப்ரல் 2012
15பி. வி. வாஞ்சூ29 ஏப்ரல் 201212 சூலை 2014
16மார்கரட் ஆல்வா12 சூலை 20147 ஆகத்து 2014
17ஓம்.பிரகாஷ் கோலி7 ஆகத்து 201426 ஆகத்து 2014
18மிருதுளா சின்கா[2]26 ஆகத்து 201425 அக்டோபர் 2019
19சத்யபால் மாலிக்25 அக்டோபர் 201918 ஆகத்து 2020
20பகத்சிங் கோசியாரி18 ஆகத்து 20206 சூலை 2021
21பி. எஸ். சிறீதரன் பிள்ளை7 சூலை 2021தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்