மிருதுளா சின்கா

மிருதுளா சின்கா (Mridula Sinha, 27 நவம்பர் 1942 - 18 நவம்பர் 2020) இந்திய மாநிலம் கோவாவின் முன்னாள் ஆளுநர் ஆவார்.[1] இவர் புகழ்பெற்ற இந்தி இலக்கிய எழுத்தாளரும் அரசியல்வாதியும் ஆவார்.[2][3]

மிருதுளா சின்கா
கோவா கவர்னர்
பதவியில்
26 ஆகத்து 2014 – 25 அக்டோபர் 2019
முன்னையவர்பரத் வீர் வாஞ்சூ
பின்னவர்சத்யபால் மாலிக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 நவம்பர் 1942
முசாஃபர்பூர், பீகார்
இறப்பு18 நவம்பர் 2020
துணைவர்டா.இராம் கிருபால் சின்கா

இளமைப் பருவம்

மிருதுளா பீகார் மாநிலத்திலுள்ள முசாஃபர்பூர் மாவட்டத்தில் சாப்ரா தரம்பூர் யாடு என்ற ஊரில் தந்தை பாபு சாபைல் சிங்கிற்கும் தாயார் அனுபா தேவிக்கும் மகளாக நவம்பர் 27, 1942இல் பிறந்தார். சாப்ராவில் துவக்கக் கல்வியையும் லக்கிசராய் மாவட்டத்திலுள்ள பாலிகா வித்யாபீத்தில் பிந்தையக் கல்வியையும் கற்றார்.[4] சிறு வயதிலிருந்தே மிருதுளாவிற்கு இந்தி இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்டது. பள்ளிக்காலத்திலேயே இந்தி உரைநடை எழுத்தில் சிறந்து விளங்கினார்.

மிருதுளா இளங்கலைப் படிப்பை முடிப்பதற்கு முன்னதாகவே அவரது பெற்றோர், மிருதுளாவுக்கு திருமண ஏற்பாடு செய்தனர்; பீகாரின் முசாஃபர்பூர் நகரத்தில் கல்லூரி விரிவுரையாளராக இருந்த டா.இராம் கிருபால் சின்காவை கரம் பிடித்தார். திருமணத்திற்குப் பின்னரும் தமது கல்வியைத் தொடர்ந்த மிருதுளா உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமது கணவர் பணி புரிந்த அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிக்கமர்ந்தார். ஏழைகளுக்கு சேவை புரிய எண்ணிய இந்த இணையர் பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டதிலிருந்த மிகவும் பிற்பட்ட மோதியரி என்ற சிற்றூருக்கு இடம் பெயர்ந்தனர். இடைவேளையில் ஆசிரியர் பயிற்சியிலும் இளங்கலைப் பட்டம் பெற்ற மிருதுளா[5] அங்கிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

பணி வாழ்வு

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மிருதுளா_சின்கா&oldid=3749202" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்