சக்காரா மன்னர்கள் பட்டியல்

சக்காரா மன்னர்கள் பட்டியல் (Saqqara Tablet), புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆடசிக் காலத்தில் (கிமு 1279 - கிமு 1213), சக்காரா நகரத்தில், 58 எகிப்திய மன்னர்கள் பட்டியல் செவ்வக வடிவலான கற்பலகையில், குறுங்கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1861-ஆம் ஆண்டில் சக்காரா தொல்லியல் களத்தில் கணடுபிடிக்கப்பட்ட இம்மன்னர்கள் பட்டியல், தற்போது எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளது.[1]

மன்னர் இரண்டாம் ராமேசஸ் வடித்த அபிதோஸ் மன்னர்கள் பட்டியல், கர்னாக் மன்னர்கள் பட்டியல் துரின் மன்னர்கள் பட்டியல்களில், முதல் வம்ச மன்னர்கள் தொடங்கி, இறுதியாக 19-ஆம் வம்ச மன்னர்கள் வரை பெயர்கள் பொறிக்கப்பட்டது. ஆனால் சக்காரா மன்னர்கள் பட்டியலில் 19-ஆம் வம்ச மன்னர்கள் பெயர்கள் தொடங்கி, இறுதியாக முதல் வம்ச மன்னர்கள் பெயர்கள் வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இரண்டாம் இடைநிலைக் காலத்தில் எகிப்தை ஆண்ட எகிப்தியர் அல்லாத ஐக்சோஸ் போன்ற இன மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்படவில்லை. மேலும் எகிப்தின் இறை நம்பிக்கையை மீறி ஆட்சி செய்த எகிப்திய மன்னர் அக்கெனதெனின் பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. [2]

செவ்வக வடிவிலான கற்பலகையில், 58 மன்னர்களின் பெயரும் குறுங்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பல மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள்து. [3] [4]

சக்காரா மன்னர்கள் பட்டியலின் வரைபடம், ஆண்டு 1864-65. வெள்ளை நிறப்பகுதிகள் சிதிலமடைந்துள்ளது.

சக்காரா மன்னர்கள் பட்டியல்

சக்காரா மன்னர்களின் பட்டியலில் 19-ஆம் வம்ச மன்னர்களின் பெயரிலிருந்து, முதல் வம்ச மன்னர்கள் பெயர் வரை 58 பார்வோன்கள் பெயர்கள் குறிக்கப்பட்டடுள்ளது. இப்பட்டியலை மேல் வரிசையின் வலது புறத்திலிருந்து, கீழ் வரிசையின் இடது புறமாக படிக்க வேன்டும்.

மேல் வரிசைகீழ் வரிசை
எண்பார்வோன் பெயர்கல்வெட்டில் பெயர்எண்பார்வோன் பெயர்கல்வெட்டில் பெயர்
1இரண்டாம் ராமேசஸ்யுசர்-மாத்-செதெப்-இன்-ரா30நெபரேப்பிரேகா-நெபர்-ரா
2முதலாம் சேத்திமென்-மாத்-ரா31செப்செஸ்கரெசெப்செஸ்-கா-ரா
3முதலாம் ராமேசஸ்மென்-பெஹ்தி-ரா32நெபரிர்கரே ககைநெபர்-இர்-க-ரா
4ஹொரெம்ஹெப்ஜேசெர்-கெபெரு-ரா-செதெப்-இன்-ரா33சகுராசகுரா
5மூன்றாம் அமெனம்ஹத்நெப்-மாத்-ரா34யுசர்காப்யுசர்-கா-இப்
6நான்காம் தூத்மோஸ்மென்-கெப்பெரு-ரா35தம்திஸ்?பெயர் அழிந்துள்ளது
7இரண்டாம் அமென்கோதேப்ஆ-கெபெரு-ரா36பிச்செரிஸ்?பெயர் அழிந்துள்ளது
8மூன்றாம் தூத்மோஸ்மென்-கெபெர்-ரா37ஜெத்தெப்பிதாபெயர் அழிந்துள்ளது
9இரண்டாம் தூத்மோஸ்ஆ-கெப்பெர்-இன்-ரா38செப்செஸ்காப்பெயர் அழிந்துள்ளது
10முதலாம் தூத்மோஸ்ஆ-கெப்பெர்-கா-ரா39மென்கௌரேபெயர் அழிந்துள்ளது
11முதலாம் அமென்கோதேப்ஜெசெர்-கா-ரா40காப்ராகாப்-ரா
12முதலாம் அக்மோஸ்நெப்-பெஹ்தி-ரா41ஜெதெப்பிரேஜெத்-எப்-ரா
13இரண்டாம் மெண்டுகொதேப்நெப்ஹெப்பெத்ரே42கூபுகூபு
14மூன்றாம் மெண்டுகொதேப்செ-ஆங்க்-கா-ரா43சினெபெருசினெபெரு
15முதலாம் அமெனம்ஹத்செ-ஹெதெப்-இப்-ரா44ஹுனிஹுனி
16முதலாம் செனுஸ்ரெத்கெப்பர்-கா-ரா45நெப்காநெப்-கா-ரா
17இரண்டாம் அமெனம்ஹத்நூப்-கௌ-ரா46செகெம்கெத்ஜோசெர்-தேத்தி
18இரண்டாம் செனுஸ்ரெத்கா-கெப்பர்-ரா47ஜோசெர்ஜோசெர்
19மூன்றாம் செனுஸ்ரெத்கா-கௌ-ரா48காசெகெம்விபேபி
20மூன்றாம் அமெனம்ஹத்நி-மாத்- ரா49ஹட்ஜெபாபெயர் அழிந்துள்ளது.
21நான்காம் அமெனம்ஹத்மாத்-கெரு-ரா50செக்கெமிப்-பெரென்மாத்?நெபர்-கா-சோகர்
22சோபெக்நெபரு (இராணி)சோபெக்-கா-ரா51சேத்-பெரிப்சென்?நெபர்-கா-ரா
23இரண்டாம் பெப்பிநெபர்-கா-ரா52செனெத்ஜ்செனெத்ஜ்
24மெரென்ரே நெம்தியம்சாப் Iமெர்-என்-ரா53வெனெக்வாத்ஜ்லாஸ்
25முதலாம் பெப்பிபெப்பி54நய்நெத்செர்பா-நெத்-ஜெரு
26தேத்திதேத்தி55ரனெப்காகௌ
27உனாஸ்உனீஸ்56ஹோதெப்செகெம்விபவ்-நெத்-ஜெர்
28ஜெத்கரே இசேசிமாத்-கா-ரா57குவாகியு-பெகு
29மென்கௌஹோர் கையூமென்-கௌ-ஹோர்58அனெத்ஜிப்மெர்பாபென்

புது எகிப்து இராச்சியத்தினரின் பிற மன்னர்கள் பட்டியல்

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

  • Auguste Mariette: La table de Saqqarah in Revue Archeologique Vol 10, Paris 1864, p. 168-186, Pl. 17
  • Emmanuel de Rougé: Album photographique de la mission remplie en Égypte, Paris 1865, Photographs, No. 143-145
  • Auguste Mariette: Monuments divers recueillis en Égypte et en Nubie (Tables), Paris 1872, Vol. II, Pl. 58
  • Eduard Meyer: Ägyptische Chronologie, Pl. 1, (Berlin 1904)


🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்