எகிப்தின் முதல் வம்சம்

எகிப்தின் முதல் வம்சம் (First Dynasty of Egypt அல்லது Dynasty I) பண்டைய எகிப்தை கிமு 3100 முதல் கிமு 2900 முடிய 200 ஆண்டுகள் ஆண்டது.[2] இம்முதல் வம்ச மன்னர் நார்மெர் ஆட்சியில் மேல் எகிப்தின் நிலப்பரப்புகளையும், கீழ் எகிப்தின் நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து பண்டைய எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இவ்வம்சத்தினர் ஆட்சியின் போது பாபிரஸ் எனும் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

பண்டைய எகிப்து
கிமு 3100–கிமு 2900
தலைநகரம்தினீஸ்[1]
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 3100
• முடிவு
கிமு 2900
முந்தையது
பின்னையது
முதல் வம்ச ஆட்சிக்கு முந்தைய எகிப்து
[[எகிப்தின் இரண்டாம் வம்சம்]]
எகிப்தின் முதல் வம்ச மன்னர் நார்மெர் நிறுவிய நார்மெர் கற்பலகை

முதல் வம்ச மன்னர்களின் ஆட்சியில் பண்டைய எகிப்தின் தலைநகராக தினீஸ் நகரம் விளங்கியது. 2013-இல் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்ககரிமக் காலக்கணிப்பின் படி, எகிப்தின் முதல் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஹோர்-அகா-வின்[3] ஆட்சிக் காலம் (கிமு 3218–3035) முதல் துவங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.[4]

எகிப்தின் முதல் வம்ச ஆட்சியாளர்கள்

பண்டைய எகிப்தின் வரலாற்றின் படி, எகிப்தின் முதல் வம்சத்தின் ஆட்சியாளர்கள் கீழ் வருமாறு:

பெயர்உருவம்குறிப்புகள்ஆட்சிக் காலம்
நார்மெர்
கீழ் எகிப்தையும், மேல் எகிப்தையும் ஒன்றிணைத்தவராக கருதப்படுகிறார்.
கிமு 3100
ஹோர்-ஆகா
கிமு 3050
ஜெர்
54 ஆண்டுகள்[5]
ஜெத்
பட்டத்து அரசி மெர்நெய்த்
10 ஆண்டுகள்[6]
டென்
இரு முடிகள் அணிந்தவன்
42 ஆண்டுகள்[6]
அட்ஜிப்
கிரேக்க வடிவம்:மிபிடோஸ்[7]
10 ஆண்டுகள்
செமெர்கெத்
கிரேக்கப் பெயர்: செமெம்பிசெஸ்.
8½ ஆண்டுகள்[6]
குவா
கிரேக்கப் பெயர்: பினெட்ச்சஸ், 33 ஆண்டுகள் எகிப்தை ஆண்டவர்
34 ஆண்டுகள்
நெபர்கா
மிகக் குறைந்த காலம் ஆட்சி செய்தவர்.
கிமு 2900
ஹோரஸ் பேர்டு
குறைந்த காலம் ஆட்சி செய்தவர்
கிமு 2900

எகிப்தின் முதல் வம்சத்தின் பார்வோன்கள் குறித்த செய்திகள் சில தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் மூலமே அறிய முடிகிறது.[8][9][10] அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பலெர்மோ கல்லின்[11] குறிப்புகள் மூலமே எகிப்தின் முதல் வம்சத்தின் நான்கு ஆட்சியாளர்களின் வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமே அறியமுடிகிறது. [12]


படக்காட்சிகள்

மனித பலி

முதல் வம்சத்தின் பார்வோன்கள் இறப்பின் ஈமச்சடங்கின் போது நரபலி இடுவது வழக்கமாக இருந்தது.[13] இறந்த மன்னர்களின் சவத்தை பெரும் கல்லறை கட்டி அடக்கம் செய்யும் போது, கழுதை போன்ற சில விலங்கினங்களையும் பலி கொடுத்தனர்.

மறு உலக வாழ்க்கையின் பொருட்டு பார்வோன் டிஜெர் கல்லறையில் 338 மனிதர்கள் மற்றும் விலங்குகள் பலி கொடுத்திருப்பது தொல்லியல் ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளது. [13] என்ன காரணத்தினாலோ இம்முதல் வம்ச மன்னர்களின் காலத்திற்குப் பின்னர் பார்வோன்களின் கல்லறையில் நரபலி மற்றும் விலங்களை பலி கொடுப்பதை நிறுத்தப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

முன்னர்
முதல் வம்சத்திற்கு முந்திய எகிப்து
எகிப்தின் முதல் வம்சம்
கிமு 3100 – கிமு 2890
பின்னர்
எகிப்தின் இரண்டாம் வம்சம்



🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை