சன் நெக்ட்ஸ்

சன் நெக்ட்ஸ் என்பது சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தால் நடத்தும் ஒரு கோரிய நேரத்து ஒளித சேவையாகும். இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் போன்ற ஐந்து மொழிகளில் உள்ளடக்கத்துடன் ஜூன் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.[3][4] சன் நெக்ட்ஸ் வலை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் நவீன தொலைக்காட்சி சாதனங்களில் கிடைக்கிறது.

சன் நெக்ட்ஸ்
தலைமையிடம்சென்னை, தமிழ்நாடு
ஹைதராபாத், தெலுங்கானா
சேவை பகுதி
தொழில்மகிழ்கலை, மக்கள் ஊடகம்
உரிமையாளர்சன் டிவி நெட்வொர்க்
(சன் குழுமம்)
வலைத்தளம்www.sunnxt.com
வலைத்தள வகைOTT Platform
ஊடக ஓடை
கோரிய நேரத்து ஒளிதம்
பதிகைதேவை
பதிந்த பயனர்கள்20 - 25 மில்லியன்
மொழிகள்தமிழ்
தெலுங்கு
மலையாளம் கன்னடம்
வங்காளம்
துவக்கம்ஜூன் 2017
தற்போதைய நிலைசெயலில்
[1][2]

வரலாறு

இந்த சேவை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் போன்ற மொழிகளின் உள்ளடக்கத்துடன் ஜூன் 2017 இல் தொடங்கப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு நாட்களுக்குள், 1.1 மில்லியன் மக்களால் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. நவம்பர் மாதத்திற்குள் அது ஏழு மில்லியனாக இருந்தது.[5] ஆகஸ்ட் 2019 இல் சன் டிவி நெட்வொர்க் 18 மாதங்களில் ₹150 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டது.[6]

பிப்ரவரி 2020 இல் தளத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 15 மில்லியன் பயனர்களாக வளர்ந்து லாபம் ஈட்டத் தொடங்கியது.[7] ஆனால் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் 20 மில்லியன் சந்தாதார்களை கொள்வது என்பது இவர்களின் இலக்காக இருந்தது.[8]

உள்ளடக்கம்

சன் நெக்ட்ஸ் ஆரம்பிக்கும்போது 4000 திரைப்படங்கள் மற்றும் 40 அலைவரிசைகளுடன் நான்கு மொழிகளில் ஆரம்பிக்கட்டது.[9] அலைவரிசைகள் மற்றும் திரைப்படங்கள் தவிர செய்திகள், நாடகத் தொடர்கள், நகைச்சுவை காட்சிகள், நிகழ்ச்சிகள் மாற்றம் பாடல்கள் என பல வகையான பொழுது போக்கு அம்சங்களை கொண்டுள்ளது.[10] பிப்ரவரி 2020 நிலவரப்படி, இத் தளத்தில் 390 நிகழ்ச்சிகளையும் 4087 திரைப்படங்களையும் இருக்கின்றன.[11]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சன்_நெக்ட்ஸ்&oldid=3394411" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்