சற்குணம்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

சற்குணம் (ஆங்கில மொழி: Sarkunam) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். விமல், ஓவியா நடித்த களவாணி திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். வாகை சூட வா, நையாண்டி முதலான திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது அதர்வா நடிக்கும் சண்டி வீரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சற்குணம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ஏ.சற்குணம்
A. Sarkunam
படப்பிடிப்பில் சற்குணம்
பிறப்பு23 ஏப்ரல் 1975 (1975-04-23) (அகவை 49)[1]
ஆம்பலாப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2010–முதல்

திரை வாழ்க்கை

2009 ஆவது ஆண்டில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான, காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான களவாணி திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும்.இத்திரைப்படம் ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது.[2][3] 2011 ஆவது ஆண்டில் வெளியான வாகை சூட வா திரைப்படம் இவரது இரண்டாவது திரைப்படமாகும். இப்படத்தில், களவாணி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த விமல் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.[4][5] வாகை சூட வா திரைப்படம் இவரது கனவுத் திரைப்படம் என்கிறார் இயக்குநர் சற்குணம்.[6] அதற்குப் பிறகு இவர் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான நையாண்டி திரைப்படத்தை இயக்கினார்.[7] இத்திரைப்படத்தில் தனுஷ், நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[8][9] அதர்வா, ஆனந்தி நடிப்பில் பாலாவின் தயாரிப்பில் 2015ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் சண்டி வீரன் திரைப்படம் இவர் இயக்கும் நான்காவது திரைப்படமாகும்.[10]

2014 ஆவது ஆண்டில் சற்குணம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, இவரது சகோதரர் ஏ. நந்தகுமாரை திரைப்படத் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தினார். சற்குணத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய என். ராகவன் இயக்கிய மஞ்சப்பை திரைப்படம் இவர்களது நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாகும்.[11]

திரைப்பட விபரம்

ஆண்டுதிரைப்படம்பங்காற்றியதுகுறிப்புகள்
இயக்குநர்கதாசிரியர்
2010களவாணி Y Y
2011வாகை சூட வா Y Yசிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2013நையாண்டி Y Y
2015சண்டி வீரன் (திரைப்படம்) Y Y

தயாரித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சற்குணம்&oldid=3957227" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்