சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது

சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது (National Film Award for Best Feature Film in Tamil) ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்று. தேசிய திரைப்பட விருதுகள், இந்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்களின் இயக்ககத்தால் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறை தொடர்பான பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. 1954 முதல் வழங்கப்பட்டு வரும் தேசிய திரைப்பட விருதுகள், இந்தியத் திரைப்படங்களின் தரத்தைத் தீர்மானிக்கும் விருதுகளில் முதன்மையானவையாகும். ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் உருவாகும் சிறந்த திரைப்படங்களுக்கு தனித்தனியே விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ராஜத் கமல் எனப்படும் வெள்ளித் தாமரை அளிக்கப்படுகிறது.

சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது
விருது குறித்தத் தகவல்
வகைதேசிய விருது
பகுப்புஇந்தியத் திரைப்படத்துறை
நிறுவியது1955
முதலில் வழங்கப்பட்டது1955
கடைசியாக வழங்கப்பட்டது2018
மொத்தம் வழங்கப்பட்டவை66
வழங்கப்பட்டதுதிரைப்பட விழாக்களின் இயக்ககம்
நிதிப் பரிசு1 இலட்சம் (US$1,300)
பதக்கம்ரஜத் கமல் (வெள்ளித் தாமரை)
விவரம்ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம்
முந்தைய பெயர்(கள்)சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் (1954-1968)
முதல் வெற்றியாளர்(கள்)மலைக்கள்ளன்
கடைசி வெற்றியாளர்(கள்)பாரம்

டிசம்பர் 21, 1955 இல் அளிக்கப்பட்ட இரண்டாவது தேசிய திரைப்பட விருதுகளில், வங்காளம், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு அந்தந்த மொழிகளின் பகுப்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள் முதன்முதலாக வழங்கப்பட்டன. "சிறந்த திரைப்படத்துக்கான குடியசுத்தலைவரின் வெள்ளிப்பதக்கம்", "இரண்டாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்", "மூன்றாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்", என மூன்று விருதுகள் அளிக்கப்பட்டன. ஆனால் 15 ஆவது திரைப்பட விருதுகளிலிருந்து (1967) இந்த தகுதிச் சான்றிதழ்கள் இரண்டும் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.

1954 இல் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த மலைக்கள்ளன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியசுத்தலவரின் வெள்ளிப் பதக்கம் பெற்றது. சிறந்த இரண்டாவது, மூன்றாவது தமிழ்த் திரைப்படங்களுக்கானத் தகுதிச் சான்றிதழ் முறையே அந்த நாள், எதிர்பாராதது ஆகிய இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தது.

விருதுபெற்ற தமிழ்த் திரைப்படங்கள்

விருதுகள்
*
சிறந்த திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்
*
இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
*
மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
*
சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
ஆண்டுதிரைப்படம்தயாரிப்பாளர்இயக்குனர்
1955மலைக்கள்ளன் [1]பட்சிராஜா ஸ்டுடியோஸ்எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
1955அந்த நாள் [1]ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ்சுந்தரம் பாலசந்தர்
1955எதிர்பாராதது [1] • சரவணபவ
 • யூனிட்டி பிக்ஸர்ஸ்
சி. ஹெச். நாராயண மூர்த்தி
1956மங்கையர் திலகம் [2]வைத்யா பிலிம்ஸ்எல். வி. பிரசாத்
1957குலதெய்வம் [3]எஸ். கே. பிக்சர்ஸ்கிருஷ்ணன்–பஞ்சு
1958முதலாளி [4]எம். ஏ. வி. பிக்சர்ஸ்வி. ஸ்ரீனிவாசன்
1959தங்கப்பதுமை [5]ஜுபிடர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.எ. எஸ். ஏ. சாமி
1959அன்னையின் ஆணை [5]ஏ. எம். எம். இஸ்மாயில்சி. ஹெச். நாராயண மூர்த்தி
1960பாகப்பிரிவினை [6]ஜி. என். வேலுமணிஏ. பீம்சிங்
1960வீரபாண்டிய கட்டபொம்மன் [6]பி. ஆர். பந்துலுபி. ஆர். பந்துலு
1960கல்யாணப் பரிசு [6] • சர்வஸ்ரீ எஸ். கிருஷ்ணமூர்த்தி
 • டி. கோவிந்தராஜன்
 • சி. வி. ஸ்ரீதர்
சி. வி. ஸ்ரீதர்
1961பார்த்திபன் கனவு [7]ஜூப்ளி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டி. யோகானாந்த்
1961பாதை தெரியுது பார் [7]குமாரி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்நிர்மல் கோஷ்
1961களத்தூர் கண்ணம்மா [7]ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ்ஏ. பீம்சிங்
1962கப்பலோட்டிய தமிழன் [8]பத்மினி பிக்சர்ஸ்பி ஆர். பந்துலு
1962பாசமலர் [8]ராஜாமணி பிக்சர்ஸ்ஏ. பீம்சிங்
1962குமுதம் [8]மாடர்ன் தியேட்டர்ஸ்அடுர்த்தி சுப்பா ராவ் (Adurthi Subba Rao)
1963நெஞ்சில் ஓர் ஆலயம் [9]சித்ராலயாசி. வி. ஸ்ரீதர்
1963அன்னை [9]ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ்கிருஷ்ணன்–பஞ்சு
1963சாரதா [9]ஏஎல். ஸ்ரீனிவாசன்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
1964நானும் ஒரு பெண் [10]முருகன் பிரதர்ஸ்ஏ. சி. திருலோகசந்தர்
1964கற்பகம் [10]கே. எஸ். சபரிநாதன்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
1964கர்ணன் [10]பி. ஆர். பந்துலுபி. ஆர். பந்துலு
1965
சர்வர் சுந்தரம் [11]ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ்கிருஷ்ணன்–பஞ்சு
1966குழந்தையும் தெய்வமும் [12]ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ்ஆர். கிருஷ்ணன்
1966திருவிளையாடல் [12]ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்ஏ. பி. நாகராஜன்
1967
1968ஆலயம் [13]M/s. சன்பீம் • திருமலை
 • மகாலிங்கம்
1969தில்லானா மோகனாம்பாள் [14]விஜயலட்சுமிஏ. பி. நாகராஜன்
1970இரு கோடுகள் [15] • என். செல்வராஜ்
 • பி. துரைசாமி
 • என். கிருஷ்ணன்
 • வி. கோவிந்தராஜன்
கே. பாலசந்தர்
1971ராமன் எத்தனை ராமனடி [16]பி. மாதவன்பி. மாதவன்
1972
1973பட்டிக்காடா பட்டணமா [17]பி. மாதவன்பி. மாதவன்
1974திக்கற்ற பார்வதி [18] • எம். லக்ஷ்மிகாந்த ரெட்டி
 • ஹெச். எம். சஞ்சீவ ரெட்டி
சிங்கீதம் சீனிவாச ராவ்
1975விருது இல்லை [19]
1976அபூர்வ ராகங்கள் [20] • பி. ஆர். கோவிந்தராஜன்
 • ஜே. துரைசாமி
கே. பாலசந்தர்
1977விருது இல்லை
1978அக்ரகாரத்தில் கழுதை [21]ஜான் ஆபிரகாம்
1979விருது இல்லை [22]
1980பசிதுரை
1981நெஞ்சத்தை கிள்ளாதே [23]கே. ராஜகோபால் செட்டிஜே. மகேந்திரன்
1982தண்ணீர் தண்ணீர் [24] • பி. ஆர். கோவிந்தராஜன்
 • ஜே. துரைசாமி
கே. பாலசந்தர்
1983ஏழாவது மனிதன் [25]பாலை என். சண்முகம்கே. ஹரிகரன்
1984ஓர் இந்திய கனவு [26] • டி. பி. வரதராஜன்
 • விஜயலட்சுமி தேசிகன்
கோமல் சுவாமிநாதன்
1985அச்சமில்லை அச்சமில்லை [27] • ராஜம் பாலசந்தர்
 • வி. நடராஜன்
கே. பாலசந்தர்
1986முதல் மரியாதை [28]பாரதிராஜாபாரதிராஜா
1987மௌன ராகம் [29]ஜி. வெங்கடேசன்மணிரத்னம்
1988வீடு [30]Kaladasபாலுமகேந்திரா
1989விருது இல்லை [31]
1990புதிய பாதை [32]ஏ. சுந்தரம்ஆர். பார்த்திபன்
1991அஞ்சலி [33]M/S சுஜாதா புரொடக்‌ஷன்ஸ் (பி) லிமிடெட்மணிரத்னம்
1992வண்ண வண்ண பூக்கள் [34]கலைப்புலி எஸ். தாணுபாலு மகேந்திரா
1993தேவர் மகன் [35]கமலஹாசன்பரதன்
1994மகாநதி [36]கோபால் ரெட்டிசந்தான பாரதி
1995நம்மவர் [37]ஆர். வெங்கடராம ரெட்டிகே. எஸ். சேதுமாதவன்
1996அந்திமந்தாரை [38]திலக கணேஷ்
(Mega Movie Makers)
பாரதிராஜா
1997காதல் கோட்டை [39]சிவசக்தி பாண்டியன்அகத்தியன்
1998த டெரரிஸ்ட் [40]ஏ. ஸ்ரீராம்சந்தோஷ் சிவன்
1999ஹவுஸ்புல் [41]ஆர். பார்த்திபன்ஆர். பார்த்திபன்
2000சேது [42]ஏ. கந்தசாமிபாலா
2001பாரதி [43]மீடியா டிரீம்ஸ் (பி) லிமிடெட்ஞான ராஜசேகரன்
2002ஊருக்கு நூறு பேர் [44]எல். சுரேஷ்பி. லெனின்
2003கன்னத்தில் முத்தமிட்டால் [45] • மணி ரத்தினம்
 • ஜி. சீனிவாசன்
மணி ரத்தினம்
2004இயற்கை [46]வி. ஆர். குமார்எஸ். பி. ஜனநாதன்
2005நவரசா [47]சுனில் தோஷிசந்தோஷ் சிவன்
2006ஆடும் கூத்து [48]லைட் அண்டு ஷேடோ மூவி மேக்கர்ஸ்டி. வி. சந்திரன்
2007வெயில் [49]எஸ். சங்கர்வசந்தபாலன்
2008பெரியார் [50]M/s லிபர்டி கிரியேஷ்ன்ஸ் லிமிடெட்ஞான ராஜசேகரன்
2009வாரணம் ஆயிரம் [51]வேணு ரவிசந்திரன்கௌதம் மேனன்
2010பசங்க [52]எம். சசிகுமார்பாண்டியராஜ்
2011தென்மேற்கு பருவகாற்று [53]ஷிபு ஐசக்சீனு ராமசாமி
2012வாகை சூட வா [54] • எஸ். முருகானந்தம்
 • (N. Puranna)
எ. சற்குணம்
2013வழக்கு எண் 18/9 [55] • என். சுபாஷ் சந்திர போஸ் & ரோனி ஸ்க்ரூவாலா
பாலாஜி சக்திவேல்
2014குற்றம் கடிதல் • கிருசு பிக்சர்சு
 • ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன்
ஜி. பிரம்மா
For the pervasive empathy with which it examines the guilt and the anger that follows upon a school teacher’s impulsive slapping of a student.
[56]
2015விசாரணைஒன்டர்பார் பிலிம்சுவெற்றிமாறன்
A gripping drama about the atrocities thrust on by the police on innocent citizens, based on a true story.
[57]
2016ஜோக்கர்டிரீம் வாரியர் பிக்சர்சுராஜு முருகன்
A Political satire film which criticises the present political absurdities .
[58]
2017டூலெட்பிரேமா செழியன்செழியன்[59]
2018பாரம் • பிரியா கிருஷ்ணசாமி
 • ஆர்திரா சுவரூப்
பிரியா கிருஷ்ணசாமி
A man’s fight to expose the traditional practice of euthanasia in a Tamil village.
[60]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்