சாகிரானா கேரளென்சிசு

சாகிரானா கேரளென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டைகுரோகுளோசிடே
பேரினம்:
சாகிரானா
இனம்:
சா. கேரளென்சிசு
இருசொற் பெயரீடு
சாகிரானா கேரளென்சிசு
துபாய்சு, 1881
மேற்குத் தொடர்ச்சி மலையில் சா. கெரலென்சிஸ் பரவல்
வேறு பெயர்கள்

ரானா வெருக்கோசா கூண்தர், 1876
ரானா கெரலென்சிசு துபாய்சு, 1981
லிம்னொக்டிசு கெரலென்சிசு (துபாய்சு, 1981)
பெசிர்வாரியா கெரலென்சிசு (துபாய்சு, 1981)

சாகிரானா கேரளென்சிசு (Zakerana keralensis) பொதுவாக வெர்ருகோசு தவளை, கேரள மரு தவளை, அல்லது துபோயிசின் மலைத் தவளை என அறியப்படுகிறது. இது இந்திய தவளை இனமாகும். 1876ஆம் ஆண்டில் ஆல்பர்ட் குந்தர் இத்தவளையினை விவரித்து கூறியிருந்தார். இதனுடைய பெயரிலுள்ள கேரளென்சிசு இது காணப்படும் கேரளாவினைக் குறிப்பதாக உள்ளது. இப்பெயரானது 1981ஆம் ஆண்டில் அலைன் டுபோயிசால் மாற்றியமைத்து இடப்பட்டதாகும்.[2]

விளக்கம்

இத்தவளையில் இருவரிசையில் தடித்த தட்டையான சாய்வு பற்கள், சோமனின் உள் முன்புற மூலைகளிலிருந்து தொடங்கி காணப்படும். நடுத்தரமான தலைப்பகுதி துருத்திய மூக்குப்பகுதியுடன் காணப்படும். கண்ணிமை அகலத்தின் மூன்றில் இரண்டு பங்கு விழியக இடைவெளி கொண்டது. தெளிவாகத் தெரியும் செவிப்பறை கண்ணின் விட்ட அளவில் முக்கால்வாசி அளவிலானது. விரல்கள் மிதமானவை, மழுங்கிய முனையுடையது. முதலாவது விரல் இரண்டாவது விரலைவிட நீளமானது. நன்கு வளர்ந்த கால்விரல்கள், விரலிடைச் சவ்வுடன் காணப்படும். பின்னங்காலை முன்னோக்கி இழுக்கும்போது, கால் முன்னெலும்பு-கவக்கால் எலும்பு அசைவுப்பகுதி தலையின் நுனிப்பகுதி வரை நீள்கிறது. தவளையின் மேல் பகுதி முழுவதும் ஏராளமான மருக்கள் மற்றும் சிறு சுரப்பி மடிப்புகள் காணப்படும். சாம்பல் அல்லது பழுப்பு, கருநிற புள்ளிகள்; தொடைகள் கருப்பு, வெள்ளை-பளிங்கு; சில நேரங்களில் ஒரு பரந்த வெண்மையான முதுகெலும்பு பட்டைகள் காணப்படும். ஆண்களில் இரண்டு குரல் எழுப்பும் பைகளை கொண்டுள்து.[3]

இத்தவளை தலையின் நுனிப்பகுதியிலிருந்து பின்பகுதியில் உள்ள புழை வரை சுமார் 2.75 அங் (7.0 cm) நீளமுடையது. .

பரவல் மற்றும் வாழ்விடம்

சாகேரானா கெரலென்சிஸ் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது. மலபார் பகுதிகளில் காணப்படும் இந்த தவளைகள் வடமேற்கு இந்தியாவின் குஜராத்திலும், மத்திய நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியாவிலிருந்தும் காணப்படுகிறது. இருப்பினும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடருக்கு வெளிப்பகுதியில் காணப்படும் தவளைகள் ஜ. கெரலென்சிஸ் இனத்தைச் சார்ந்தவையா என்பதை உறுதிபடுத்த வேண்டியுள்ளது.[2]

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஜகேரானா கெரலென்சிஸ் பரவலாக பசுமையான காடுகள், ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் காணப்படுகிறது. விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்ட மலைப்பகுதிகளிலும் இவை வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தற்காலிக குளங்களில் இனப்பெருக்கம் செய்கிறது.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zakerana keralensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்