சிகாம்புட்

கோலாலம்பூர் கூட்டாட்சியில் ஒரு துணை மாவட்டம்

சிகாம்புட், (மலாய்: Segambut; ஆங்கிலம்: Segambut; சீனம்: 泗岩布); என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சி கூட்டமைப்பில், அமைந்து உள்ள ஒரு முக்கிம்; ஒரு புறநகரம். அதே வேளையில் கோலாலம்பூர் கூட்டாட்சியின் துணை மாவட்டமும் ஆகும்.

சிகாம்புட்
Segambut
சிகாம்புட் நகர்ப்பகுதி
சிகாம்புட் நகர்ப்பகுதி
Map
ஆள்கூறுகள்: 3°11′0″N 101°39′0″E / 3.18333°N 101.65000°E / 3.18333; 101.65000
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
அரசு
 • உள்ளாட்சி மன்றம்கோலாலம்பூர் மாநகராட்சி
 • முதல்வர்அமின் நோர்டின் அப்துல் அசீஸ்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
51200
மலேசியத் தொலைபேசி எண்+603-61, +603-62, +603-20
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்W ; V
சிகாம்புட் அர்த்தாமாஸ் நகர்ப்பகுதி

மலேசியாவில் மக்கள் அதிகமாகவும்; நெருக்கமாகவும் வாழும் நகரங்களில் சிகாம்புட் நகரமும் ஒன்றாகும். சிகாம்புட் புறநகர்ப் பகுதி தனி ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

சிகாம்புட் புறநகர்ப்பகுதி

1974-ஆம் ஆண்டுக்கு முன்பு சிகாம்புட் பகுதி பத்துமலை துணை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது கோலாலம்பூர் மாநகரம் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் மாண்ட் கியாரா (Mont Kiara); ஸ்ரீ கியாரா (Sri Kiara) போன்ற உயர்தர மனைவீடுக் கட்டடங்கள் உள்ளன. தாமான் ஸ்ரீ சிகாம்புட் (Taman Sri Segambut); பண்டார் மஞ்சளாரா (Bandar Manjalara) போன்ற நடுத்தர மனைவீடுகள் உள்ளன. சிகாம்புட் டாலாம் (Segambut Dalam); கம்போங் சுங்கை பெஞ்சாலா (Kampung Sungai Penchala) போன்ற கிராமப்புற வீடுகளும் உள்ளன. அந்த வகையில் சிகாம்புட் தொகுதியில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.[1][2][3]

நகரங்கள்

சிகாம்புட் பகுதியில் பின்வரும் புறநகர்க் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.

  • புக்கிட் டாமன்சாரா (Bukit Damansara)
  • புக்கிட் கியாரா (Bukit Kiara)
  • புக்கிட் சிகாம்பு (Bukit Segambut)
  • புக்கிட் துங்கு (Bukit Tunku)
  • டேசா பார்க் சிட்டி (Desa Park City)
  • ஸ்ரீ அர்த்தாமாஸ் (Sri Hartamas)
  • டூத்தா மாஸ் (Dutamas)
  • கம்போங் கோன்கிரீன் (Kampung Concrene)
  • கம்போங் காசிப்பிள்ளை (Kampung Kasipillay)
  • கம்போங் பாசிர் சிகாம்புட் (Kampung Pasir Segambut)
  • கம்போங் சுங்கை பெஞ்சாலா (Kampung Sungai Pencala)
  • கம்போங் சுங்கை ஊடாங் (Kampung Sungai Udang)
  • கே.எல். டிஜிட்டல் சிட்டி (KL Digital City)
  • மேடான் டாமன்சாரா (Medan Damansara)
  • மாண்ட் கியாரா (Mont Kiara)
  • டாமன்சாரா நகர மையம் (Damansara Town Centre)
  • சிகாம்புட் அமான் (Segambut Aman)
  • சிகாம்புட் பகாகியா (Segambut Bahagia)
  • சிகாம்புட் டாலாம் (Segambut Dalam)
  • சிகாம்புட் டாமாய் (Segambut Damai)
  • சிகாம்புட் ஜெயா (Segambut Jaya)
  • சிகாம்புட் லுவார் (Segambut Luar)
  • சிகாம்புட் மூடா (Segambut Muda)
  • சிகாம்புட் பெர்மாய் (Segambut Permai)
  • சிகாம்புட் தம்பாகான் (Segambut Tambahan)
  • சிகாம்புட் தெங்கா (Segambut Tengah)
  • சிகாம்புட் தொழிற்பூங்கா (Segambut Industrial Park)
  • அர்த்தாமாஸ் (Hartamas)
  • தாமான் பம்பூ (Bamboo Garden)
  • தாமான் பூங்கா (Taman Bunga)
  • தாமான் சிட்டி (Taman City)
  • தாமான் சிட்டி கானான் (Taman City Kanan)
  • தாமான் டேசா சிகாம்புட் (Taman Desa Segambut)
  • தாமான் டூத்தா (Taman Duta)
  • தாமான் கோ நாம் உவாட் (Taman Goh Nam Huat)
  • தாமான் கோல்டன் (Taman Golden)
  • தாமான் கோக் டோ (Taman Kok Doh)
  • தாமான் லாவா (Taman Lawa)
  • தாமான் மில்லியன் (Taman Million)
  • தாமான் நியாகா வாரிஸ் (Taman Niaga Waris)
  • தாமான் பிரைமா இம்பியான் (Taman Prima Impian)
  • தாமான் சிகாம்பு (Taman Segambut)
  • தாமான் ஸ்ரீ பிந்தாங் (Taman Sri Bintang)
  • தாமான் ஸ்ரீ கூட்டிங் (Taman Sri Kuching)
  • தாமான் ஸ்ரீ சிகாம்புட் (Taman Sri Segambut)
  • தாமான் ஸ்ரீ சினார் (Taman Sri Sinar)
  • தாமான் சிகாம்புட் (Taman Segambut)
  • தாமான் சிகாம்புட் இண்டா (Taman Segambut Indah)
  • தாமான் செஜாத்திரா (Taman Sejahtera)
  • தாமான் எஸ்.பி.பி.கே. சிகாம்புட் (Taman SPPK Segambut)
  • தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (தெற்கு) (Taman Tun Dr Ismail Selatan)
  • தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (வடக்கு) (Taman Tun Dr Ismail Utara)

அரசியல்

சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மலேசியப் பொதுத் தேர்தல், 2004 வரை பாரிசான் நேசனல் கட்சியின் பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. இருப்பினும், 2008; 2018; பொதுத் தேர்தல்களில் கெராக்கான் கட்சி வெற்றி பெற்றது.

2018-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், பாக்காத்தான் அரப்பான் - ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த அன்னா இயோ வெற்றி பெற்றார்.

மலேசியாவின் முதல் பெண் சபாநாயகர்

சிகாம்புட்டின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பாக்காத்தான் அரப்பான் - ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த அன்னா இயோ (Hannah Yeoh). சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்.[4]

இவர் மலேசியாவின் முதல் பெண் சபாநாயகர். 34 வயதில் மலேசியாவின் வரலாற்றில் இளைய சபாநாயகரும் இவரே ஆவார். இவர் சிலாங்கூர், சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சர்

முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமதுவின், பாக்காத்தான் அரப்பான் நிர்வாகத்தின் கீழ், மலேசியாவின் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சராகப் பணியாற்றியவர்.[5][6]

இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். இவருடைய கணவரின் பெயர் ராமசந்திரன் முனியாண்டி. இரு பெண்பிள்ளைகள்; கயிலை, சாய் ஆதரா.[7]

சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 317 மாணவர்கள் பயில்கிறார்கள். 27 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம்பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடுவட்டாரம்மாணவர்கள்ஆசிரியர்கள்
WBD0192சிகாம்புட்
Segambut
SJK(T) Segambut[8][9]சிகாம்புட் தமிழ்ப்பள்ளி51200கோலாலம்பூர்31727

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிகாம்புட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிகாம்புட்&oldid=3961246" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்