சிட்டகொங் போர்க் கல்லறை

இரண்டாம் உலகப் போரின் போது இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம்

சிட்டகொங் பொதுநலவாய போர் கல்லறை (Chittagong Commonwealth War Cemetery) அல்லது சிட்டகொங் போர்க் கல்லறை என்பது வங்காளதேசத்தின் சிட்டகொங்கில் அமைந்துள்ளது. இது இரண்டாம் உலகப் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுநலவாய போர் கல்லறைகள் ஆணையத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டது. [1]

சிட்டகொங் போர்க் கல்லறை
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
பொதுநலவாய போர் கல்லறைகள் ஆணையம்
நுழைவாயில்
இறந்தவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது
நிறுவப்பட்டதுஇரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் (1939-1945)
அமைவிடம்22°21′26″N 91°49′43″E / 22.35730°N 91.82850°E / 22.35730; 91.82850 (Chittagong Commonwealth War Cemetery)
பாட்சா மியா சௌத்ரி சாலை

சிட்டகொங் அருகில்
அடக்க
எண்ணிக்கை
715
தெரியாத
அடக்கங்கள்
17
நாடு வாரியாக அடக்கம்
போர் வாரியாக அடக்கம்
புள்ளிவிவரங்கள்
ஆதாரம்: CWGC

வரலாறு

இரண்டாம் உலகப் போரில் இறந்த பொதுநலவாய நாடுகளின் வீரர்களையும், மற்றவர்களையும் கௌரவிப்பதற்காக இந்த கல்லறை நிறுவப்பட்டது. கல்லறை ஐக்கிய இராச்சியத்தின் இராணுவத்தால் உருவாக்கப்பட்டது. முதலில் சுமார் 400 புதைகுழிகள் இருந்தன. இலுசாய் மலைகளிலிருந்தும் ( அசாம் ), பிற தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்தும், சிட்டகொங் பொதுக் கல்லறையிலிருந்தும் கல்லறைகள் இந்தக் கல்லறைக்கு மாற்றப்பட்டன; சந்திரகோனா பாப்டிஸ்ட் மறைபணியாளர்கள் கல்லறை; சிரிங்கா இராணுவக் கல்லறை; காக்ஸ் பஜார் புதிய இராணுவக் கல்லறை, பொதுக் (முஹம்மதன்) கல்லறைகள்; சிட்டகொங் (பஞ்சாலைஷ்) புதைகுழி; டாக்கா இராணுவக் கல்லறை; தேமகிரி மயானம்; துவாபோலாங் முஸ்லிம் புதைகுழி; துவாபோலாங் கிறிஸ்தவ இராணுவ கல்லறை; தோஹாசாரி இராணுவக் கல்லறைகள்; ஜெஸ்சூர் கிறுத்துவக் கல்லறை; குல்னா கல்லறை; குருஷ்குல் தீவு கிறிஸ்தவ மற்றும் முகமது கல்லறைகள்; லூங்லே கல்லறை (அசாம்); நவாபரா கல்லறை ( அசாம் ); பாட்டியா இராணுவ மயானம், இரங்கமதி கல்லறை; தேஜ்கான் உரோமன் கத்தோலிக்க கல்லறை; தும்ரு காட் இராணுவக் கல்லறை, தும்ரு மருத்துவமனைக் கல்லறை போன்றவை இதில் அடங்கும்.

1939-45 போரின் இறந்த 731 பொதுநல வாய நாடுகளின் வீரர்களின் புதைகுழிகள் இப்போது இங்கு உள்ளன. அவற்றில் 17 அடையாளம் காணப்படவில்லை. மேலும் 20 வெளிநாட்டு தேசிய புதைகுழிகள் உள்ளன. 1 டச்சு கடற்படையின் மாலுமியும், 19 ஜப்பானிய வீரர்களும் அடங்குவர். அவர்களில் ஒருவர் அடையாளம் காணப்படவில்லை. 4 போர் அல்லாத மக்களின் இங்கிலாந்து இராணுவ புதைகுழிகளும் உள்ளன.

அமைவிடம்

கல்லறையின் அகலப் பரப்புக் காட்சி

விமான நிலையத்திற்கு வடக்கே 22 கிலோமீட்டர் தூரத்திலும், துறைமுகத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள 19 பாட்சா மியா சாலையில் உள்ள தாம்பாராவில் சிட்டகொங் போர்க் கல்லறை அமைந்துள்ளது. முன்பு நெல் வயல்களாக இருந்த இடம், தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது. [2] இது கலைக் கல்லூரிக்கு அருகில் உள்ளது. சட்டேசுவரி சாலைக்கு அருகிலுள்ள பின்லேயின் விருந்தினர் மாளிகையால் மூடப்படுகிறது.

புதைகுழி பகுதியானது பின்லேயின் விருந்தினர் மாளிகைகளுக்குப் பின்னால் நேரடியாக ஒரு சாய்வின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், காட்டு மரங்கள், பழ மரங்கள், பூக்கும் மரங்களின் கலவையுடன் நடப்பட்ட ஒரு பெரிய பகுதியால் சூழப்பட்டுள்ளது. நுழைவு வாயிலிலிருந்து புதைகுழி பகுதிக்கு ஒரு தார் பாதை செல்கிறது. இது இரண்டு சிறிய செங்கல் தேவாலயங்களால் சூழப்பட்ட உலோக வாயில் வழியாக நுழைகிறது.

அடக்க விவரங்கள்

அரச கழக விமானப்படையின் (611201) விமானி ஜே. ஹைடின் கல்லறை
இந்தியக் குடிமைப்பணி அலுவலர் வில்லியம் எல். டொனால்ட்சனின் கல்லறை

இரண்டாம் உலகப் போரின் (1939-45) இறந்த பொதுநலவாய நாடுகளின் 731 வீரர்களின் புதைகுழிகள் இப்போது இங்கு உள்ளன. அவற்றில் 17 அடையாளம் காணப்படவில்லை. [3]

நாடு வாரியாகக் கல்லறை

பொதுநலவாய நாடுகளின் வீரர்களின் கல்லறைகளுடன், மேலும் 19 ஜப்பானிய வீரர்களும், ஒரு டச்சு கடற்படை மாலுமி உட்பட 20 வெளிநாட்டு பிரஜைகளின் கல்லறைகளும் உள்ளன. [5]

புகைப்பட வரிசை

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்