சீரியம்(III) புரோமைடு

வேதிச் சேர்மம்

சீரியம்(III) புரோமைடு (Cerium(III) bromide) என்பது CeBr3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் நீருறிஞ்சும் பண்பு கொண்ட ஒரு திண்மமாக இது காணப்படுகிறது. மிளிர்வெண்ணிகளில் ஒரு பகுதிப்பொருளாக சீரியம்(III) புரோமைடு பயன்படுத்தப்படுகிறது.

சீரியம்(III) புரோமைடு
Cerium(III) bromide
நீரிலி சீரியம்(III) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
சீரியம்(III) புரோமைடு
சீரியம் முப்புரோமைடு
வேறு பெயர்கள்
சீரசு புரோமைடு
இனங்காட்டிகள்
14457-87-5 Y
ChemSpider76185 Y
EC number238-447-0
InChI
  • InChI=1S/3BrH.Ce/h3*1H;/q;;;+3/p-3 Y
    Key: MOOUSOJAOQPDEH-UHFFFAOYSA-K Y
  • InChI=1/3BrH.Ce/h3*1H;/q;;;+3/p-3
    Key: MOOUSOJAOQPDEH-DFZHHIFOAB
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்292780
  • [Ce+3].[Br-].[Br-].[Br-]
UNIIGEM75FEL39 Y
பண்புகள்
CeBr3
வாய்ப்பாட்டு எடை379.828 கி/மோல்
தோற்றம்சாம்பல் கலந்த வெண்மை, நீர் உறிஞ்சும் திறன்
அடர்த்தி5.1 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 722 °C (1,332 °F; 995 K)
கொதிநிலை 1,457 °C (2,655 °F; 1,730 K)
4.56 மோல் கி.கி−1 (153.8 கி/100 கி)[1]
கட்டமைப்பு
படிக அமைப்புஅறுகோணப் படிகம் (UCl3 type), hP8
புறவெளித் தொகுதிP63/m, No. 176
ஒருங்கிணைவு
வடிவியல்
மூவுச்சி முக்கோணப் பட்டகம்
(ஒன்பது-ஒருங்கிணைவுகள்)
தீங்குகள்
GHS pictogramsThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal wordஎச்சரிக்கை
H315, H319, H335
தீப்பற்றும் வெப்பநிலைதீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்சீரியம்(III) புளோரைடு
சீரியம்(III) குளோரைடு
சீரியம்(III) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள்இலந்தனம்(III) புரோமைடு
பிரசியோடைமியம்(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

1899 ஆம் ஆண்டிலிருந்தே சீரியம்(III) புரோமைடு சேர்மம் அறியப்படுகிறது. முத்மன் மற்றும் சுடூட்செல் ஆகியோர் சீரியம் சல்பேட்டுடன் ஐதரசன் புரோமைடு வாயு ஆகியவற்றிலிருந்து சீரியம்(III) புரோமைடு தயாரித்தனர்.[2] சீரியம்(III) கார்பனேட்டுடன் ஐதரசன் புரோமைடை வினைபுரியச் செய்தால் சீரியம்(III) புரோமைடின் நீரிய கரைசல் கிடைக்கும். வினைவிளை பொருளான சீரியம்(III) புரோமைடின் நீரிய கரைசலுடன் அமோனியம் புரோமைடைச் சேர்த்து சூடாக்குவதன் மூலமும், தொடர்ந்து எஞ்சிய NH4Br இன் பதங்கமாதல் மூலமும் நீர் நீக்கம் செய்து சீரியம்(III) புரோமைடு பெறப்படுகிறது. ஒரு குவார்ட்சு உருக்குக்கலனில் 875-880 °செல்சியசு வெப்பநிலையில் 0.1 பாசுக்கல் என்ற குறைக்கப்பட்ட அழுத்தத்தில் சீரியம்(III) புரோமைடு வடிகட்டப்படுகிறது.[3] தொடர்புடைய உப்பான CeCl3 போலவே, இப்புரோமைடும் ஈரமான காற்றின் வெளிப்பாட்டின் போது தண்ணீரை உறிஞ்சுகிறது. இச்சேர்மம் 722 °செல்சியசு வெப்பநிலையில் உருகும். மேலும் பிரிட்சுமேன் அல்லது சோக்ரால்சுகி போன்ற நிலையான படிக வளர்ச்சி முறைகளைப் பயன்படுத்தி நன்கு வரிசைப்படுத்தப்பட்ட ஒற்றை படிகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

கட்டமைப்பு

P63/m என்ற இடக்குழுவுடன் அறுகோண் UCl3 படிக வடிவத்தில் சீரியம்(III) புரோமைடு படிகமாகிறது.[4][5] சீரியம் அயனிகள் 9-ஒருங்கிணைப்புகளுடன் ஒரு மூவுச்சி முக்கோணப் பட்டக வடிவவியலைப் பின்பற்றுகின்றன. சீரியம்-புரோமின் பிணைப்பின் பிணைப்பு நீளங்கள் 3.11 Å மற்றும் 3.16 Å ஆக் உள்ளன.[6] The cerium–bromine bond lengths are 3.11 Å and 3.16 Å.[7]

பயன்கள்

CeBr3-மாசிட்ட இலந்தனம் புரோமைடு ஒற்றைப் படிகங்கள் பாதுகாப்பு, மருத்துவப் படமுறையாக்கம் மற்றும் புவி இயற்பியல் கண்டறிதல் ஆகியவற்றில் உள்ள பயன்பாடுகளுக்கு சிறந்த மிளிர்வுப் பண்புகளை வெளிப்படுத்துவதாக அறியப்படுகிறது.[8][9]

CeBr3 சேர்மத்தின் மாசிடப்படாத ஒற்றைப் படிகங்கள் அணுப் பரவல் அல்லாத சோதனை, மருத்துவப் படமுறையாக்கம், சுற்றுச்சூழல் தீர்வாக்கம் மற்றும் எண்ணெய் ஆய்வு ஆகியவற்றில் γ-கதிர் மிளிர்வு உணரிகளாக உறுதியளித்துள்ளன.[10]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சீரியம்(III)_புரோமைடு&oldid=3937412" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்