சோபியா ஒகுனேவ்ஸ்கா

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று ஆஸ்திரியா-ஹங்கேரியில் மருத்துவரான முதல் பெண், முதல் உக்ரேனி

சோபியா ஒகுனெவ்சுக்கா (Sofia Okunevska, உக்ரைனியம்: Софі́я Атанасівна Окуне́вська-Мораче́вська, 12 மே 1865 – 24 பிப்ரவரி 1926) என்பவர் ஒரு உக்ரைனிய மருத்துவரும், கல்வியாளரும், பெண்ணியவாதியும் ஆவார். கலீசியாவில் உள்ள ஜிம்னாசியம் பட்டைய மற்றும் பல்கலைக்கழகத்தில் கல்வியைப் பெற்ற முதல் பெண்ணும்,[1] ஆத்திரியா-அங்கேரியின் முதல் பெண் மருத்துவரும் ஆவார்.[1][2][3] கலீசியா மற்றும் ஆத்திரியா-அங்கேரியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் கதிர்வீச்சு சிகிச்சையைப் பயன்படுத்துவதில் இவர் ஒரு முன்னோடியாக இருந்தார்.[4] இவர் செவிலிய சகோதரிகள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான படிப்புகளை ஏற்பாடு செய்தார். முதல் மருத்துவ தொழிற்சங்கத்தை நிறுவுவதற்கு இணைந்து நிதியுதவி செய்தார். மேலும் உக்ரேனிய மருத்துவ சொற்களின் அகராதியைத் தொகுத்தார். லிவிவில் மருத்துவப் பணி மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், இவர் முதலாம் உலகப் போரின்போது சுவிட்சர்லாந்து, செக்கியா, ஆத்திரியா ஆகிய முகாம்களில் பணியாற்றினார்.

சோபியா ஒகுனேவ்சுக்கா
Sofia Okunevska
பிறப்புசோஃபியா அத்தனாசொவ்னா அக்குனெவ்சுக்கயா-மொரச்சேவ்சுக்கயா
(1865-05-12)மே 12, 1865
தோவ்சாங்கா, கலீசியா, ஆத்திரியா-அங்கேரி
இறப்புபெப்ரவரி 24, 1926(1926-02-24) (அகவை 60)
லிவீவ், உக்ரைன்
Resting placeலிச்சாகிவ் கல்லறைத் தோட்டம்
துறைமருத்துவம்
கல்வி கற்ற இடங்கள்சூரிக் பல்கலைக்கழகம் (மருத்துவம்)
அறியப்படுவதுஆத்திரியா-அங்கேரியில் முதல் பெண் மருத்துவர்

ஒகுனெவ்ஸ்கா ஒரு சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவர் கலீசியா மற்றும் ஆத்திரியா-அங்கேரியில் பெண்ணிய இயக்கத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தார்.[5] இவர் இலக்கியத்திலும் அறிமுகமானார்-முதல் பெண்கள் பஞ்சாங்கம் "முதல் மாலை" (உக்ரைனியன்: «Перший вінок»), நகர்ப்புற வாழ்க்கையைப் பற்றிய "மணல். மணல்!" (உக்ரைனியன்: «Пісок. Пісок!») என்ற புதினம், "பாடல்களிலும் திருமண விழாக்களிலும் குடும்ப அடிமைத்தனம்" (உக்ரைனியன்: «Родинна неволя в піснях і обрядах весільних») ஆகியவற்றை வெளியிட்டார். தன் கடைசி ஆண்டுகளை இவர் லிவீவ் நகரில் கழித்தார். அங்கு இவர் ஒரு சிறிய மருத்துவமனையை வழிநடத்தினார். ஒகுனேவ்ஸ்கா குடல்வாலழற்சியால் மருத்துவமனையில் இறந்தார். பின்னர் எல்விவில் உள்ள லிச்சாகிவ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

ஒகுனெவ்ஸ்கா 12, மே, 1865 அன்று, தெர்னோபிலுக்கு அருகிலுள்ள டோவ்ஜங்கா என்ற சிற்றூரில்[1][6][2] அட்டனாஸ் டானிலோவிச் ஒகுனெவ்ஸ்கி மற்றும் கரோலினா லுச்சகோவ்ஸ்கா ஆகியோரின் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவரது தாயார் 1870 இல் காலமானார், அதன் பின்னர், சோபியா ஒகுனெவ்ஸ்காவை அவரது அத்தை தியோஃபிலி ஒகுனெவ்ஸ்கா-ஓசர்கெவிச்சால் வளர்க்கபட்டார்.[1] அங்கே இவர் தனது உறவினரான வருங்கால எழுத்தாளரான நடாலியா கோப்ரின்ஸ்காவை சந்தித்து நட்பு கொண்டார்.[3]

1884 ஆம் ஆண்டில், ஒகுனெவ்ஸ்கா ஜிம்னாசியம் பாடத்தைப் பயில அனுமதிக்கபட்டார். மேலும் 1885 ஆம் ஆண்டில், இவர் அதில் லிவிவ் அகாதமிக் ஜிம்னாசியத்தில் அற்புதமாக தேர்ச்சி பெற்றார், இது கலீசியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.[4]

ஆத்திரியா-அங்கேரியில் 1900 வரை பல்கலைக்கழகங்களில் படிக்க பெண்களுக்கு உரிமை வழங்கப்படாத நிலை இருந்ததால், 1887 இல் சோபியாவும் அவரது உறவினர் நடாலியா கோப்ரின்ஸ்காவும் சுவிட்சர்லாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர் .[7] கோப்ரின்ஸ்கா பொருளாதாரம் படித்தார், அதே நேரத்தில் ஒகுனெவ்ஸ்கா சூரிச் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பயின்றார். இவர் 1896 சனவரியில் படிப்பை முடித்தார். ஆத்திரியா-அங்கேரியில் முதல் பெண் மருத்துவராகவும், கலீசியாவில் பல்கலைக்கழக மருத்துவக் கல்வியைப் பெற்ற முதல் உக்ரேனிய பெண் என்ற பெருமையையும் பெற்றார்.[1]

சூரிக்குவில், சோபியா ஒகுனெவ்ஸ்கா வார்சாவாவைச் சேர்ந்த வக்லாவ் மொராக்ஸெவ்ஸ்கி என்ற மாணவனைச் சந்தித்தார். அவர் உக்ரேனிய சார்பு உணர்வுகளுக்கு பெயர் பெற்றவர். 1890 இல், இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.[8] 1896 பிப்ரவரியில், ஒகுனெவ்ஸ்கா-மொராக்ஸெவ்ஸ்கா யூரி என்ற மகனைப் பெற்றெடுத்தார்.[9] அதே ஆண்டில், இவர் இரத்த சோகையினால் ஏற்படும் இரத்த மாற்றங்கள் குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை வெளியிட்டார், சூரிச் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.[3] இவர் உக்ரேனிய பெண்களில் முதல் மருத்துவராகவும், முன்னாள் ஆத்திரியாவின் முதல் பெண் மருத்துவராகவும் புகழ்பெற்றார்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சோபியா_ஒகுனேவ்ஸ்கா&oldid=3915042" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்