சோரவார் சிங் (சீக்கியம்)

சாகிப்தா சோரவார் சிங் (Zorawar Singh ) (பிறப்பு:28 நவம்பர் 1695 - இறப்பு 26 டிசம்பர் 1705) சீக்கிய சமயத்தின் பத்தாவது மற்றும் இறுதி குருவான குரு கோவிந்த் சிங்கின் நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர் ஆவார். சீக்கிய சமயத்தில் சோரவார் சிங்கும் அவரது இளைய சகோதரர் பதே சிங்கும் மிகவும் புனிதமான தியாகிகள் என்ற புகழைப் பெற்றவர்கள். சீக்கியர்கள் இவரது பெயருக்கு முன்னாள் சாகிப்சதா (இளவரசன்) இட்டு அழைப்பர்.

சாகிப்சதா

சோரவார் சிங்
ਜ਼ੋਰਾਵਰ ਸਿੰਘ
Baba Fateh Singh Ji in blue
குரு கோவிந்த் சிங்குடன் அவரது நான்கு மகன்கள்
பதவிசாகிப்சதா
சுய தரவுகள்
பிறப்பு(1695-11-28)28 நவம்பர் 1695
இறப்பு26 திசம்பர் 1705(1705-12-26) (அகவை 10)
இறப்பிற்கான காரணம்சட்டத்துக்கு புறம்பான கொலை
சமயம்சீக்கியம்
பெற்றோர்கள்

வரலாறு

சிர்இந்த்-பதேகர் குருத்துவாரில் கட்டப்பட்ட சோரவார் சிங் மற்றும் பதே சிங்கின் நினைவிடம்

மே 1705-இல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆனையின் படி, சீக்கியர்களின் அனந்த்பூர் சாஹிப் நகரம் பல மாதங்களாக முற்றுகை இடப்பட்டது. பல மாதங்கள் சீக்கியர்கள் தாக்குதல்களையும் முற்றுகைகளையும் தாங்கினர், ஆனால் இறுதியில் நகரத்தில் உணவு இருப்பு தீர்ந்துவிட்டது. சீக்கியர்கள் ஆனந்த்பூரை விட்டு வெளியேறினால், முகலாயர்கள் பாதுகாப்பான வெளியேற்றத்தை வழங்குவதாக கூறினர். அதனை குரு கோவிந்த் சிங் சம்மதித்து, தனது குடும்பத்தினருடனும் ஒரு சிறிய குழுவினருடனும் நகரத்தை காலி செய்தார். குரு கோவிந்த் சிங்கின் தாயான மாதா குஜாரி, தனது இரண்டு பேரன்களான சோரவார் சிங், பதே சிங் மற்றும் குடும்ப வேலைக்காரர் கங்குவை உடன் அழைத்துக் கொண்டு தனது சொந்த கிராமமான சஹேதிக்கு சென்று கொண்டிருந்தார். முகலாயர்களால் லஞ்சம் பெற்ற வேலைக்காரர் கங்கு, குரு கோவிந்த் சிங்கின் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களையும் சிர்இந்த்-பதேகர் என்ற இடத்தின் நவாப் வசீர் கான் முன்னிலையில் அழைத்துச் சென்றார்.

குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்களான பதே சிங் (வயது 6) மற்றும் சோரவார் சிங் (வயது 10) இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறினால் உயிருடன் விட்டுவிடுவதாக நவாப் வசீர் கான் கூறினார். ஆனால் இரண்டு சிறுவர்களும் இசுலாம் சமயத்திற்கு மதம் மாற மறுத்தனர். வசீர் கான் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். குழந்தைகள் இருவரையும் உயிருடன் வைத்து செங்கல் சுவரை எழுப்பி மூடி கொல்லப்பட்டனர்.[1]பதேசிங் குருத்துவார் கோயிலில் இக்குழந்தைகள் உயிருடன் கொல்லப்பட்ட செங்கல் சுவர் அடையாளம் இன்றும் காணப்படுகிறது.

குரு கோவிந்த் சிங்கின் மறைவிற்குப் பின்னர் கால்சா சீக்கிய இராணுவத்தில் பணியாற்றிய பண்டா சிங் பகதூர் என்பவர் இரண்டு சீக்கிய குழந்தைகளை உயிருடன் கொன்ற வசீர் கானை சிர்இந்த்-பதேகர் போரில் தலையை துண்டித்துக் கொன்றார்.[2]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்