சீக்கியம்

குருநானக் உருவாக்கிய மதம்

சீக்கியம் (ਸਿੱਖੀ, Sikhism) அல்லது சீக் (சீக்கியர், என்ற சொலுக்கு "சீடர்", அல்லது "கற்பவர்" என்று பொருள்படும்[1][2]) என்பது இந்தியத் துணைக் கண்டத்தின் பஞ்சாப் பகுதியில் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய தர்ம சமயமாகும்.[3][4] உலகில் உள்ள முதன்மை சமயங்களில் இளைய சமயங்களில் இதுவும் ஒன்றாகும். சீக்கிய சமயத்தின் அடிப்படையான நம்பிக்கைகள், குரு கிரந்த் சாஹிப் நூலில் உள்ளன, மனிதகுலத்தின் ஒற்றுமை, தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவது, அனைவரின் நலனுக்கும் சமூக நீதிக்காக போராடுவது, மற்றும் நேர்மையான நடத்தை ஆகியவற்றை பொதுவாக வலியுறுத்துகிறது.[5][6][7] இது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த குரு நானக் அவர்களால் 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சமயமாகும்.[8] இச்சமயம் குரு நானக்கிற்குப் பிறகு தோன்றிய பத்து சீக்கிய குருக்களாலும் முன்னேற்றப்பட்டது. இது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக உள்ளது.[9][10] முதல் நான்கு மதங்களாக முறையே கிறித்தவம், இசுலாம், இந்து, பௌத்தம் போன்ற மதங்கள் இருக்கின்றன.

சீக்கிய சமயம் சிம்ரனை (குரு கிரந்த சாகிப்பின் வார்த்தைகளில் தியானம்) வலியுறுத்துகிறது, இது கீர்த்தனையோ அல்லது உள்மனதில் உச்சாடனை (கடவுளுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுதல்) செய்வதன் மூலம் கடவுளுடைய பிரசன்னத்தை உணரும் வழிமுறை என்கிறது,  மேலும் "ஐந்து திருடர்களான" (காமம், ஆத்திரம், பேராசை, பற்று, அகந்தை) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி,  மதச்சார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்வோடு கை கோர்த்து பிணைக்கப்பட வேண்டும் என்கிறது.[11] குரு நானக் கற்பித்தவை  "செயலில், ஆக்கபூர்வமான, நடைமுறை வாழ்க்கை" அதில்   "உண்மை, விசுவாசம், சுய கட்டுப்பாடு தூய்மை"   மேலும் சிறந்த மனிதர் என்பவர் "கடவுளோடு ஒன்றிணைந்து, அவருடைய விருப்பத்தை அறிந்து, அதைத் தொடருவார்" என்று கூறுகிறார்.[12]

அம்ரித்சர் அருமந்திர் சாகிப் - சீக்கியர்களின் புண்ணியத்தலம்

தத்துவம் மற்றும் போதனைகள்

சீக்கிய மதத்தினை நிறுவியவரும், பதினொரு சீக்கிய குருக்களின் முதல் நபருமான குரு நானக்.

குரு நானக் தேவ் மற்றும் அவரது வழித்தோன்றல்களின் போதனைகளே சீக்கிய சமயத்தின் மூலமாகும். சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தனது 30ம் வயதில் அறிவு விளக்கம் பெற்ற பிறகு, யாருடைய பாதையை நான் பின்பற்ற வேண்டும் இந்து மதமா அல்லது முஸ்லீமா, நான் கடவுளின் பாதையை பின்பற்ற வேண்டும். கடவுள் இந்து மதமும் அல்ல முஸ்லிம் மதமும் அல்ல, நான் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும் என்று மக்களிடையே கூறினார். பின் அவர் தன் கருத்துகளை பயணங்கள் செய்து மக்களிடையே கொண்டு சேர்த்தார். இவருக்குப் பின் தோன்றிய சீக்கிய குருக்கள் சீக்கியத்தினை மேம்படுத்தினர்.

சீக்கியம் அனைத்து மனிதர்களும் சமத்துவமானவர்கள் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. அத்துடன் சாதி, சமயம், பாலினம் போன்ற பாகுபாடுகளை நிராகரித்து இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது.

இரு மத இணைப்பு

சீக்கியத்தின் கொள்கையை முதலில் மொழிந்தவரான குரு நானக்கு இந்து நூல்கள், குரான் இரண்டிலுமே உண்மைகள் இருக்கின்றன எனவும் இரண்டையும் சேர்த்தே மக்கள் பின்பற்றலாம் எனவும் கூறினார். இந்துக்களையும் முசுலீம்களையும் ஒற்றுமையாக வாழ வைப்பதே தன் நோக்கம் என கூறினார். இராமன், கிருட்டிணன், நபிகள் போன்றவர்கள் அனைவரும் இறைவனின் தூதர்கள் எனவும் உலக வாழ்க்கையைத் துறந்த துறவியையும் மனையறம் பூண்ட மக்களையும் கடவுள் ஒன்றாகவே பாவிப்பார் எனவும் கூறினார்.

பத்து குருக்கள் மற்றும் சமய அதிகாரம்

10 சீக்கிய குருக்களைக் காட்டும் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் அரிதான தஞ்சாவூர் ஓவியம். குரு நானக் தேவ் நடுவில் காணப்படுகிறார்.

குரு என்ற சொல்லானது சமஸ்கிருதத்தின் குரு என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். இச்சொல்லானது ஆசிரியர், வழிகாட்டுனர் மற்றும் அறிவுரையாளர் என்று பொருள்தருவதாகும். பொ.ஊ. 1469 முதல் 1708 வரையில் சீக்கியத்தின் மரபுகள் மற்றும் தத்துவங்கள் பத்து குருக்களால் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு குருவும் சீக்கிய மதத்தின் கோட்பாடுகளினை வரையரை செய்து அதன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தனர். சீக்கிய சமயத்தினை தோற்றுவித்த குரு நானக் முதல் குருவாவர். அவருக்குப்பின் ஒன்பது குருக்கள் தோன்றினர். பத்தாவது குருவான கோவிந்த சிங் தனக்குப் பின் குருவாக சீக்கிய குருக்களின் போதனைகளை எழுத்துவடிவமாக தொகுக்கப்பட்ட நூலினை அறிவித்தார். அதனால் குரு கிரந்த் சாகிப் என்று அழைக்கப்படும் அந்நூலானது பதினோராவது குருவாக சீக்கியர்களால் மதிக்கப்படுகிறது. இந்நூல்  சீக்கியர்களுக்கான ஆன்மீக வழிகாட்டியாக வேதா வாக்காக, தனித்துவமான குருவின் நேரடி உருவகமாக மாறியது.[13][14][15]

குருநானக் முதல் குரு கிரந்த சாகிப் வரையான சீக்கியகுருக்களின் பட்டியல்:[16]

  1. குரு நானக் சாகிப்
  2. குரு அங்கட் சாகிப்
  3. குரு அமர் தாஸ் சாகிப்
  4. குரு ராம் தாஸ் சாகிப்
  5. குரு அர்ஜூன் சாகிப்
  6. குரு அர்கோவிந்த் சாகிப்
  7. குரு ஹர் ராய் சாகிப்
  8. குரு ஹர் கிருஷ்ணன் சாகிப்
  9. குரு தேக் பகதூர் சாகிப்
  10. குரு கோபிந்த் சிங் சாகிப்
  11. குரு கிரந்த சாகிப்

சீக்கிய அடையாளங்கள்

சீக்கிய சமயத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில், எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களும் (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமாக ஐந்து பொருட்களை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை “ஐந்து கே” க்கள், அல்லது “பஞ்ச காக்கர்/காக்கி” என்று சொல்கிறார்கள்.

இந்த ஐந்து சின்னங்களாவன

1. கேஷ் (வெட்டப்படாத முடி, இதை பொதுவாக சுருட்டி சீக்கிய தலைப்பாகையான, டாஸ்டர் என்பதன் உள்ளே வைக்கப்படும்.)2. கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக தலைப்பாகையின் கீழ் அணியப்படும்.)3. கச்சாஹெரா (இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.)4. கடா (இரும்பாலானா கைவளையம், இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை தலைப்பாகையில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.)5. கிர்ப்பான் (வளைந்த கத்தி)

முகலாயரும் சீக்கியரும்

முகலாய அரசர்களில் சிலர் சீக்கியர்களோடு நட்புறவு கொண்டும் சிலர் எதிர்த்தும் சீக்கிய குருக்களை கொன்றும் இருக்கின்றனர்.

  1. பாபர் பஞ்சாப்பில் இருக்கும் போது குரு நானக்கை சந்தித்து பரிசுகளை அளித்தார். ஆனால் குரு நானக் அதை வாங்கிக் கொள்ளவில்லை.
  2. சீக்கியர்களின் நான்காவது குருவான இராமதாசுடன் அக்பர் வெகுவாகவே நட்பு பாராட்டினார். அக்பர் இராமதாசுக்கு கொடுத்த நிலத்தில் ஒரு குளம் அமைத்தார் இராமதாசு. அது அமிர்தசரசு என்று தற்போது அழைக்கப்படுகிறது. அதில் ஹர்மந்திர்சாகிப் கருவறை கட்டப்பட்டிருந்தது.
  3. ஐந்தாவது சீக்கிய குருவான அர்சுனரின் காலத்தில் இருந்து முகலாயர்களும் சீக்கியர்களும் பகைமை கொண்டார்கள். அக்காலத்தில் முகலாய மன்னனான சகாங்கீர் அர்சுனரை சிறையில் அடைத்தார்.
  4. ஆறாவது சீக்கிய குருவான அரி கோவிந்தர் சீக்கியர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததுடன் முகலாய போர் வீரர்களுடன் சமர்களிலும் ஈடுபட்டார்.
  5. ஒன்பதாம் சீக்கிய குருவான தேகு பகதூர் என்பவரை அவுரங்கசீப் தில்லிக்கு அழைத்து கொலை செய்தார்.
  6. ஒன்பதாம் சீக்கிய குருவான தேகு பகதூரின் மகனும் பத்தாம் சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் அவுரங்கசீப்புடன் போரிட்டார் .

சீக்கிய அரசாங்கம்

முகலாயப் பேரரசர்களின் ஆட்சியில் சீக்கியர்கள் பெருமளவு நிலங்களை வைத்திருக்காவிட்டாலும் அவுரங்கசீப் ஆட்சியின் முடிவில் முகலாயப் பேரரசு சரிவுற்றதால் அதிலிருந்து பலம் பெறத் தொடங்கினர். அதன் பிறகு வந்த சில முகமதிய அரசர்களோடு நட்பு பாராட்டினர். அகமது ஷா என்னும் முகமதிய அரசனின் ஆட்சியில் அவனைத் துரத்திவிட்டு பஞ்சாப்பையும் சட்லெஜ் யமுனை ஆற்றாங்கரையோர நாடுகளையும் ஆண்டனர். தங்களது அரசாங்கத்தை 12 பிரிவுகளாக பிரித்துக் கொண்டனர். ஒவ்வொரு பகுதிக்கும் மிச்செல் எனப்பெயரிட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு சிற்றரசரை நியமித்தனர். நாளடைவில் சுகர்சியா மிச்செலின் சர்தாராய் இருந்த இரஞ்சித் சிங்கு பஞ்சாப்பின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி பேரரசர் ஆனார்.

குருக்களும் கலைகளும்

சீக்கிய இசை என்பது பொ.ஊ. 16ஆம் நூற்றாண்டில் குரு நானக்கால் துவக்கப்பட்ட ஒரு இசை வகை ஆகும். குரு அர்சுனர் நானக்கின் நீதிமொழிகளையும் பிற குருக்களின் நீதி மொழிகளையும் சேர்த்து ஆதி கிரந்தம் என்னும் நூலை வெளியிட்டார். சீக்கியர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு காணிக்கை செய்யுமாறு செய்தார். குரு அரி கோவிந்தர் ஊன் உண்பதை அங்கீகரித்தார். சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்தர் சீக்கியர்களை ஏற்றத்தாழ்வின்றி நடத்தினார். சாதியால் தாழ்ந்தவன் உயர்ந்தவன் எனப் பாகுபாடுக்கு உள்ளாக்காமல் எல்லோரையும் சமமாக இருக்குமாறு செய்தார். சீக்கியர் எல்லோரும் தாடி வளர்க்க வேண்டும் குத்துவாளை தரித்திருக்க வேண்டும் என்றும் முகமதியர்களை எதிர்க்க வேண்டும் எனவும் வேண்டினார்.

சீக்கிய மக்கள்

உலகளவில் 25.8 மில்லியன் சீக்கியர்கள் காணப்படுகின்றனர். இது மொத்த உலக மக்கள்தொகையில் 0.39% ஆகும். இந்தியாவைத் தவிர இங்கிலாந்து, கனடா, யு.எஸ், மலேசியா, கிழக்கு ஆப்ரிக்கா போன்ற மற்ற நாடுகளில் அதிக அளவில் சீக்கியர்கள் உள்ளனர். இந்தியாவில் 19 மில்லியன் சீக்கியர்கள் உள்ளனர். இது இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 2% ஆகும். இதில் 75% ஆன சீக்கியர்கள் பஞ்சாப்பில் வாழ்கின்றனர்.[17][18]

இதனையும் காண்க

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சீக்கியம்&oldid=3644792" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை