ஜான் கிரிஷாம்

ஜான் கிரிஷாம் (ஆங்கில மொழி: John Grisham; பிறப்பு: பிப்ரவரி 8, 1955) ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவரது ஆங்கில சட்டப் பரபரப்புப் புனைவுப் பாணி புதினங்கள் புகழ்பெற்றவை. மிசிசிப்பி மாநிலப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற கிரிஷாம், மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்; பத்தாண்டுகள் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1984-90 காலகட்டத்தில் மிஸ்சிசிப்பி மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] 1984 இல் எழுதத்தொடங்கிய அவரது முதல் புதினமான எ டைம் டூ கில் 1990 இல் வெளியானது. அவரது அடுத்த புதினம் தி ஃபிர்ம் (1991) ஏழு மில்லியன் படிகள் விற்பனையாகி அவருக்குப் புகழைத் தேடித்தந்தது. அமெரிக்க சட்டம், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்படும் அவரது புதினங்கள் உலகெங்கும் உள்ள வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2008 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுதும் 250 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன. உலகில் முதல் பதிப்பே இருபது லட்சம் படிகளுக்குமேல் விற்பனையாகும் எழுத்தாளர்கள் மூவருள் கிரிஷாமும் ஒருவர் (மற்ற இருவர் - டாம் கிளான்சி மற்றும் ஜே. கே. ரௌலிங்). கிரிஷாம் எழுத்தாளர்களுக்கான பிரித்தானிய காலக்சி விருதினை வென்றுள்ளார். அவர் எழுதிய எட்டு புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன; மேலும் 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[2][2][3][4][4]

ஜான் கிரிஷாம்
2008 இல் கிரிஷாம்
2008 இல் கிரிஷாம்
பிறப்புஜான் ரே கிரிஷாம்
பெப்ரவரி 8, 1955 (1955-02-08) (அகவை 69)
ஜோன்ஸ்போரொ, அர்கன்சா, அமெரிக்கா
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கர்
கல்வி நிலையம்மிசிசிப்பி மாநிலப் பல்கலைகழகம்
மிசிசிப்பி மாநிலப் பல்கலைகழகத்தின் சட்டக் கல்லூரி
காலம்1989-நடப்பு
வகைசட்டப் பரபரப்புப் புனைவு
குற்றப் புனைவு
அமெரிக்கக் காற்பந்தாட்டம்
இணையதளம்
http://www.jgrisham.com

தாக்கங்கள்

ஜான் ஸ்டெய்ன்பெக்
ஜான் லே காரீ

வாழ்க்கைக் குறிப்பு

ஜான் கிரிஷாம், ஐந்து குழைந்தைகளில் இரண்டாமவர், ஆர்கன்சா மாநிலத்தின் ஜோன்ஸ்பாரோவில், சுமாரான வாழ்க்கைத் தரம் கொண்ட தெற்கு பாப்டிஸ்ட் சமயத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தார். அவரது தந்தை கட்டுமானப் பணியாளராகவும் பருத்தி விவசாயியாகவும் பணியாற்றினார்.[5] அடிக்கடி இடம் மாறிய அவரது குடும்பம் 1967 ஆம் ஆண்டில் மிசிசிப்பி மாநிலத்தின் டி சோட்டோ கவுண்டியின் சௌத்ஹெவன் நகரில் குடியேறியது. அங்கு க்ரிஷாம் சௌத்ஹெவன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். சிறுவயதில் பேஸ்பால் விளையாட்டு வீரராக விரும்பிய கிரிஷாம் தாயாரின் ஊக்குவிப்பால் கல்லூரியில் சேர்ந்தார்.[1][4]

1977ம் ஆண்டு, கிரிஷாம் மிசிசிப்பி மாநில பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். முதலில் வரிச்சட்டம் படிக்க விரும்பிய அவர், பின் பொது குடிசார் சட்டம் பயிலத் தொடங்கினார். 1983 இல் குற்றவியல் சட்டத்தில் ஜூரிஸ் டாக்டர் (ஜே.டி) பட்டம் பெற்றார்.[4]

கிரிஷாம் தன்னை ஒரு "மிதவாத பாப்டிஸ்ட்" என வருணிக்கிறார். பிரேசிலில் தான் பின்பற்றும் கிறித்தவத் திருச்சபைக்காகச் சமயப் பிரச்சாரம் செய்துள்ளார். மே 8, 1981 இல் ரெனே ஜோன்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு டை, ஷியா என இரு குழுந்தைகள் உள்ளனர். மிசிசிப்பி மாநிலம், ஆக்ஸ்ஃபோர்ட்டிலுள்ள அவர்களின் பண்ணை வீட்டிலும், வெர்ஜீனியா, சார்லோட்ஸ்வில்லில் உள்ள இன்னொரு வீட்டிலும் கிரிஷாம் குடும்பத்தினர் வாழ்கின்றனர்.[6] 2008 ஆம் ஆண்டில், அவரும் ரெனேவும் வட கரொலைனாவின் சேப்பல் ஹில்லில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் ஒரு தனி வீட்டை வாங்கினர்.[7] கிரிஷாமும் அவரது மனைவியும் ஆக்ஸ்ஃபோர்ட் நகரின் முதல் பாப்டிசத் திருச்சபையில் “ஞாயிறு பள்ளி”யில் ஆசிரியர்களாக உள்ளனர்.[8]

தொழில் வாழ்க்கை

சட்டமும் அரசியலும்

பத்தாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் கிரிஷாம், 1983 இல் மிசிசிப்பி பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு 1990 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் நிதி ஒதுக்கீடு மற்றும் தேர்தல்களுக்கான சட்டமன்றக் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்தார்.[1][9] அவருடைய இரண்டாவது புதினமான தி ஃபிர்ம் இன் வெற்றியைத் தொடர்ந்து வழக்கறிஞர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

எழுத்து வாழ்க்கை

1984 ஆம் ஆண்டில் ஹெர்னாண்டோவிலுள்ள டிசோட்டோ கிராமப்புற நீதிமன்றத்தில், க்ரிஷாம் வன்புணர்ச்சியினால் பாதிக்கப்பட்ட பன்னிரெண்டு வயதுடையவரின் மன வேதனையளிக்கும் சாட்சியத்தைக் காணுற்றார்.[6] அச்சம்பவமே அவரது முதல் புதினத்தின் கருவாக அமைந்தது. ”பாதிக்கப்பட்டப் பெண்ணின் தந்தை அவளைத் தாக்கியவர்களை கொன்றிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்” எனபதை அடிப்படையாகக் கொண்டு எ டைம் டு கில் ஐ 1987 இல் எழுதி முடித்தார்.[6] துவக்கத்தில் பல பதிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட இப்புதினம் வின்வூட் பதிப்பகத்தால் வாங்கப்பட்டது; ஜூன் 1988 இல் 5000 படிகள் கொண்ட அதன் முதல் பதிப்பு வெளியானது.[6]

கிரிஷாம் அ டைம் டு கில் லை முடித்த மறு நாள், அடுத்த படைப்புக்கான பணியைத் துவக்கினார். வெளித்தோற்றத்துக்கு முறையான சட்ட நிறுவனம்போல் தோற்றமளிக்கும் ஒரு சட்டவிரோத அமைப்பில் வேலைக்குச் சேரும் ஒரு இளம் வழக்கறிஞரின் கதையான அது தி ஃபிர்ம் என்ற பெயரில் 1991 இல் வெளியானது; பெரு வெற்றி பெற்று 1991 இல் அதிகம் விற்பனையான புதினமாக ஆனது. நியூயார்க் டைம்ஸ் இதழின் அதிக விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் 47 வாரங்கள் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து சட்ட உலகத்தைப் பின்னணியாகக் கொண்டு கிரிஷாம் எழுதிய பிற புதினங்களும் பெரு வெற்றி கண்டன.[6] அவ்வி ரண்டாம் புத்தகம், தி ஃபர்ம் , 1991 ஆம் ஆண்டின் ஏழாவது சிறந்த விற்பனையுள்ள புதினமாக ஆனது.[10]

2001 இல் கிரிஷாம் வழக்கமாகத் தான் எழுதும் சட்டப் பரபரப்புப் புனைவு பாணியிலிருந்து விலகி எ பெயிண்டட் ஹவுஸ் என்ற புதினத்தை எழுதினார். அமெரிக்கத் தெற்குப் பகுதியின் ஊர்ப்புறச் சூழலில் இப்புதினம் அமைந்திருந்தது. இது போன்ற மேலும் சில சட்டப் பரபரப்பல்லாத படைப்புகளைக் கிரிஷாம் எழுதினாலும் தொடர்ந்து சட்டப் பரபரப்பு படைப்புகளை எழுதி வருகிறார். பப்ளிஷர்ஸ் வீக்லி இதழ் கிரிஷாமை "1990ம் ஆண்டுகளின் சிறந்த விற்பனையுடைய புதின எழுத்தராக" அறிவித்தது மேலும் முதல் பதிப்பில் இரு மில்லியன்கள் பிரதிகள் விற்ற ஒரு சில எழுத்தாளர்களில் ஒருவராக உள்ளார்.[11]

மிசிசிப்பி மாநிலப் பல்கலைக்கழக நூலகத்தின் கைப்பிரதிகள் பிரிவு, ஒரு ஆவண காப்பகத்தை ஜான் க்ரிஷாம் அறை எனும் பெயரில் பராமரிக்கிறது. அதில் கிரிஷாம் மிசிசிப்பி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் எழுதிய ஆவணங்க்ல், படைப்புகள், அவரது எழுத்து வாழ்க்கையோடு தொடர்புடைய கையெழுத்துப் படிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஜான் க்ரிஷாம் அறை பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம்.[12]

மீண்டும் வழக்கறிஞராகத் தோன்றுதல்

கிரிஷாம் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 1996 ஆம் ஆண்டு ஒரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தோன்றினார். சட்டத் துறையிலிருந்து ஓய்வு பெறும் முன் அவரளித்த வாக்குறுதியைச் செயல்படுத்தும் விதமாக ஓய்விலிருந்து மீண்டு நீதிமன்றத்தில் தோன்றியதாக அவரது அதிகாரப்பூர்வ வலைத்தளம் கூறியது. இரு ரயில்வே பெட்டிகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த ஒரு ரயில்வே பிரேக்மேன் பணியாளரின் குடும்பத்தில் சார்பின் தோன்றி வாதிட்ட கிரிஷாம் அவ்வழக்கில் வெற்றி பெற்றார். நடுவர் குழாம் இறந்த பணியாளரின் குடும்பத்துக்கு $6,83,500 நட்ட ஈடு வழங்கித் தீர்ப்பளித்தது.[6]

இது தவிர தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை அளிக்கும் தி இன்னசன்ஸ் பிராஜெக்ட் அமைப்பின் இயக்குநர் குழுவிலும் கிரிஷாம் இடம் பெற்றுள்ளார்.[13]

படைப்புகள் புத்தகங்கள்

சட்டப் பின்னணி கொண்ட புதினங்கள்

  • அ டைம் டு கில் (1989)
  • தி ஃபெர்ம் (1991)
  • தி பெலிக்கன் பிரிஃப் (1992)
  • தி கிளையண்ட் (1993)
  • தி சேம்பர் (1994)
  • தி ரெய்ன்மேக்கர் (1995)
  • தி ரன் அவே ஜூரி (1996)
  • தி பார்ட்னர் (1997)
  • தி ஸ்ட்ரீட் லாயர் (1998)
  • தி டெஸ்டமெண்ட் (1999)
  • தி பிரெத்தரன் (2000)
  • தி சம்மன்ஸ் (2002)
  • தி கிங் ஆஃப் டார்ட்ஸ் (2003)
  • தி லாஸ்ட் ஜூரர் (2004)
  • தி புரோக்கர் (2005)
  • தி அப்பீல் (2008)
  • தி அசோஸியேட் (2009)
  • தியடோர் பூன்: கிட் லாயர் (2010)
  • தி கன்ஃபெஷன் (2010)
  • தியடோர் பூன்: தி அப்டக்‌ஷன் (2010)
  • தி லிட்டிகேட்டர்ஸ் (2011)

சட்டமல்லாத புதினங்கள்

  • அ பெயிண்டெட் ஹவுஸ் (2001)
  • ஸ்கிப்பிங் கிறிஸ்ட்மஸ் (2001)
  • ப்ளீச்சர்ஸ் (2003)
  • ப்ளேயிங் ஃபார் பிஸ்ஸா (2007)

சிறுகதைகள்

  • ஃபோர்ட் கவுண்டி (2009)

அபுனைவு நூல்கள்

  • The Innocent Man: Murder and Injustice in a Small Town (2006)

திரைப்படத் தழுவல்கள்

  • தி ஃபெர்ம் (1993)
  • தி பெலிக்கன் பிரிஃப் (1993)
  • தி கிளையண்ட் (1994)
  • அ டைம் டு கில் (1996)
  • தி சேம்பர் (1996)
  • தி ரெய்ன் மேக்கர் (1997)
  • தி ஜிஞ்சர்பிரெட் மான் (1998) பதிப்பிக்கப்படாத சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது
  • அ பெயிண்டெட் ஹவுஸ் (2003)
  • ரன் அவே ஜூரி (2003)
  • கிறிஸ்ட்மஸ் வித் தி கிராங்க்ஸ் (2004) ஸ்கிப்பிங் கிறிஸ்டமஸ்' புதினத்தை அடிப்படையாகக் கொண்டது
  • தி பார்ட்னர் (2010)
  • தி அசோஸியேட் (2012)
  • தி ட்ரீட்மெண்ட் (2012)

மேற் குறிப்புகள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜான்_கிரிஷாம்&oldid=3637133" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்