டையைசோநோனைல் தாலேட்டு

வேதிச் சேர்மம்

டையைசோநோனைல் தாலேட்டு (Diisononyl phthalate) என்பது C26H42O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நெகிழியாக்கியாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாலேட்டு சேர்மம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. தாலிக் அமிலத்தின் ஐசோநோனைல் எசுத்தர்களின் கலவையாக டையைசோநோனைல் தாலேட்டு காணப்படுகிறது. பலவகையான நெகிழிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

டையைசோநோனைல் தாலேட்டு[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிசு(7-மெத்திலாக்டைல்) பென்சீன்-1,2-டைகார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
பிசு(7-மெத்திலாக்டைல்) தாலேட்டு
இனங்காட்டிகள்
28553-12-0 Y
68515-48-0 Y
AbbreviationsDINP
ChEBICHEBI:35459 Y
ChemSpider513622 Y
InChI
  • InChI=1S/C26H42O4/c1-21(2)15-9-5-7-13-19-29-25(27)23-17-11-12-18-24(23)26(28)30-20-14-8-6-10-16-22(3)4/h11-12,17-18,21-22H,5-10,13-16,19-20H2,1-4H3 Y
    Key: HBGGXOJOCNVPFY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C26H42O4/c1-21(2)15-9-5-7-13-19-29-25(27)23-17-11-12-18-24(23)26(28)30-20-14-8-6-10-16-22(3)4/h11-12,17-18,21-22H,5-10,13-16,19-20H2,1-4H3
    Key: HBGGXOJOCNVPFY-UHFFFAOYAX
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்590836
  • O=C(OCCCCCCC(C)C)c1ccccc1C(=O)OCCCCCCC(C)C
UNII4010KIX4CK N
பண்புகள்
C26H42O4
வாய்ப்பாட்டு எடை418.62 g·mol−1
தோற்றம்எண்ணெய் தன்மை கொண்ட பாகியல் நீர்மம்
அடர்த்தி0.98 கி/செ.மீ3
உருகுநிலை −43 °C (−45 °F; 230 K)
கொதிநிலை 244 முதல் 252 °C (471 முதல் 486 °F; 517 முதல் 525 K) 0.7 கிலோ பாசுக்கலில்
20 °செல்சியசில் <0.01 கி/மி.லி
பிசுக்குமை64 to 265 mPa•s
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 221 °C (430 °F; 494 K) (c.c.)
Autoignition
temperature
380 °C (716 °F; 653 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

டையைசோநோனைல் தாலேட்டு, டையைசோடெசைல் தாலேட்டுகளை 9 மி.கி/கிலோ அளவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் உணவு தொடர்பு பொருட்களிலிருந்து அதிகபட்ச குறிப்பிட்ட இடம்பெயர்வு வரம்பாக நிர்ணயித்துள்ளது. [2]முன்மொழிவு சட்ட வரைவு 65 இன் கீழ் டையைசோநோனைல் தாலேட்டு புற்றுநோயை ஏற்படுத்தும் ஓர் அறியப்பட்ட வேதிப்பொருள் என கலிபோர்னியா மாநிலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. [3]

சுற்றுச்சூழலுடன் தொடர்பு கொண்டுள்ள டையைசோநோனைல் தாலேட்டு சேர்மத்தின் செறிவு வரிக்குதிரை மீன் இனத்தின் உள்ளமைப்புகளை சீர்குலைத்து, பாலின முறை இனப்பெருக்கத்தை பாதிக்கிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. [4] நீர்வாழ் உயிரினங்களில் புற நரம்பு மண்டலத்தைப் பாதித்து மேலும் பல தீய விளைவுகளை உண்டாக்கவும் இது காரணமாகிறது. இதைத் தவிர கொழுப்புமிகு ஈரல் போன்ற கொழுப்பு வளர்சிதை மாற்ற சிக்கல்களும் இதனால் உண்டாகிறது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. [5]

ஐரோப்பிய ஒன்றியத்தின் இடர் மதிப்பீட்டுக் குழு 2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அந்நாட்டு ஒழுங்குமுறை சட்ட்த்தின் கீழ் டையைசோநோனைல் தாலேட்டு சேர்மம் இனப்பெருக்க விளைவுகளுக்கான வகைப்படுத்தலுக்கு உட்பட்டதென உத்தரவாதம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. [6]

இதையும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்