தோனா இசுட்டிரிக்குலாண்டு

(டோனா இசுட்டிரிக்குலாண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தோனா இசுட்டிரிக்குலாண்டு (Donna Strickland, பிறப்பு: 27 மே 1959)[1][2][3] என்பவர் கனடிய ஒளி இயற்பியலாளரும் நோபல் விருதாளரும் ஆவார். மிகுந்த அடர்த்தியும் மிகக் குறைவான நீளமும் கொண்ட துடிப்புச் சீரொளி கற்றையை உருவாக்கியதற்காக, இவருக்கும் செரார் மூரு என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசின் மற்றைய அரைப்பங்கு ஆர்தர் ஆசுக்கின் என்பவருக்கு உயர்நுட்ப சீரொளி இடுக்கிகளைக் கண்டுபிடித்தமைக்காக வழங்கப்பட்டது.[4]

தோனா இசுட்டிரிக்குலாண்டு
Donna Strickland
2012 இல் தோனா
பிறப்புதோனா தியோ இசுட்டிரிக்குலாண்டு
27 மே 1959 (1959-05-27) (அகவை 64)
குவெல்ஃபு, கனடா
துறைஇயற்பியல்
ஒளியியல்
சீரொளி
பணியிடங்கள்வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா
கல்விமெக்மாசுடர் பல்கலைக்கழகம் (பிஎசு)
இரோசெச்டர் பல்கலைக்கழகம் (எம்எசு, முனைவர்)
ஆய்வேடுமிகவும் ஒளிச்செறிவு கூடிய சீரொளி லேசர் உருவாக்கம், பல-போட்டான் அயனியாக்கத்திற்கான பயன்பாடு (1988)
ஆய்வு நெறியாளர்செரார் மூரு
அறியப்படுவதுசெறிந்த சீரொளி-பருப்பொருள் இடைவினைகள்
நேரிலி ஒளியியல்
குறுந்துடிப்பு செறிந்த சீரலைத் தொகுதிகள்
ஊடுருவித் துடிப்புப் பெருக்கம்
மிகைவேக ஒளியியல்
விருதுகள்அல்பிரடு சிலோன் ஆய்வு உதவி (1998)
ஒளியியல் கழக ஆய்வாளர் (2008)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2018)
துணைவர்டக் டைக்கார்
பிள்ளைகள்2
இணையதளம்
University website

55 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற பெண்ணான இவர், இந்தத் துறையில் நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் ஆவார்.[5] தோனா தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தை மெக்மாசுடர் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை இரோச்செசுடர் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். தற்போது கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[6]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்