தங்குதன் ஈராக்சைடு

கனிம வேதியியல் சேர்மம்

தங்குதன் ஈராக்சைடு (Tungsten dioxide) என்பது WO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்கலம் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இது ஒற்றைச் சரிவில் படிகமாகிறது[1]. உருத்திரிந்த எண்முக WO6 மையங்களுடன் மாற்று குறுகிய W–W பிணைப்புகள் (248 பைகோ மீட்டர்|பை.மீ) அமைந்துள்ள உரூத்தைல் போன்ற அமைப்பு அம்சங்களுடனான அமைப்பை பெற்றுள்ளது.[1] ஒவ்வொரு தங்குதன் மையமும் d2 வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் இச்சேர்மம் உயர் மின்கடத்துகைத் திறன் பெற்றுள்ளது.

தங்குதன் ஈராக்சைடு
Tungsten(IV) oxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
தங்குதன் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
12036-22-5 Y
EC number234-832-7
InChI
  • InChI=1S/2O.W
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்82850
  • O=[W]=O
பண்புகள்
WO2
வாய்ப்பாட்டு எடை215.839 கி/மோல்
தோற்றம்வெண்கல நிற திண்மம்
அடர்த்தி10.8 கி/செ.மீ3
உருகுநிலை 1,700 °C (3,090 °F; 1,970 K) சிதைவடைகிறது
மிகக்குறைவு
5.7×10−5 cm3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்புஉருதிரிந்த உரூத்தைல், (ஒற்ரைச்சரிவு), mP12, Space group P21/c, No 14
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலைஎளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்தங்குதன் இருசல்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள்குரோமியம்(IV) ஆக்சைடு
மாலிப்டினம்(IV) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

900° செல்சியசு வெப்பநிலையில் WO3 சேர்மத்துடன் தங்குதன் பொடியைச் சேர்த்து 40 மணி நேர ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் தங்குதன் ஈராக்சைடைத் தயாரிக்கமுடியும். இவ்வினையில் கலப்பு இணைதிறன் சேர்மமான W18O49 பகுதியாக ஒடுக்கப்படுகிறது.

2 WO3 + W → 3 WO2

மாலிப்டினம் வரிசைச் சேர்மமான MoO2 இம்முறையிலேயே தயாரிக்கப்படுகிறது. வேதியியல் போக்குவரத்து நுணுக்கத்தில் அயோடினைப் பயன்படுத்தி ஒற்றைப் படிகங்கள் தயாரிக்கப்படுகின்றன. WO2 சேர்மத்தை அயோடின் ஆவியாகும் வரிசைச் சேர்மமாகச் செலுத்துகிறது[2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தங்குதன்_ஈராக்சைடு&oldid=2052905" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்