செல்சியசு

செல்சியசு
வெப்பநிலை அலகு மாற்றீடு
செல்சியசு
இலிருந்து
செல்சியசு
இற்கு
பாரன்ஃகைட்[°F] = [°C] × 95 + 32[°C] = ([°F] − 32) × 59
கெல்வின்[K] = [°C] + 273.15[°C] = [K] − 273.15
ரேன்கின்[°R] = ([°C] + 273.15) × 95[°C] = ([°R] − 491.67) × 59
குறிப்பிட்ட வெப்பநிலைகளுக்கு அல்லாது
வெப்பநிலை மாற்றங்களுக்கு,
1°C = 1 K = 95°F = 95°R

பாகை செல்சியசு (°C) வெப்பநிலையை அளக்கும் ஓர் அலகாகும். 1742 ஆம் ஆண்டு செல்சியசு முறைக்கு ஒத்த முறையை முன்மொழிந்த, சுவீடன் வானியலாளர் ஆண்டர்சு செல்சியசு ஐ (1701-1744), (Anders Celsius) நினைவுகூரும் வகையில் இப்பெயர் இடப்பட்டுள்ளது.[1] 1750 தொடக்கத்தில் "செண்டிகிரேட்" அல்லது சென்றிகிரேட் (நூற்றன் பாகை என்னும் பொருளது) என்ற பெயர் பாவனையிலிருந்தது, 1948 ஆம் ஆண்டு இது இவ்வலகு செல்சியசு என மாற்றம் செய்யப்பட்டது.

1954 ஆம் ஆண்டு வரை இருந்த வரையறையின் படி, கடல் மட்டத்தில் உள்ள, தரம் சீர்செய்யப்பட்ட, சூழ் அழுத்த (101.325 கிலோ பாசுக்கல்) நிலையில் நீரானது பனியாய் உறையும் வெப்பநிலையில் இருந்து நீரின் கொதிநிலை வரை உள்ள வெப்ப நிலை வேறுபாட்டை 100 சம பாகைகளாகக் கொண்டது இந்த செல்சியசு வெப்பநிலை அளவீடு. இன்றும் இந்த அளவீடு துல்லியமானதே, எனினும், தற்காலத்தில் தரம் செய்யப்பட்ட செல்சியசு அளவீட்டின் படி நீரின் முந்நிலைக் கூடற்புள்ளி அல்லது முக்கூடற் புள்ளி (நீரானது ஒரே சமையத்தில் திண்ம, நீர்ம, வளிமம் ஆகிய முன்னிலைகளிலும் இணைந்திருக்கும் நிலை) என்பது 0.01 °C என்று கொள்ளப்படுகின்றது.

வெப்பநிலை அலகுகளுக்கிடையேயான தொடர்பு அட்டவணை

கெல்வின்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செல்சியசு&oldid=3711532" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை