தர்சன் தர்மராஜ்

தர்சன் தர்மராஜ் (Darshan Dharmaraj, சிங்களம்: දර්ශන් ධර්මරාජ්; 2 மார்ச் 1981 – 2 அக்டோபர் 2022) இலங்கைத் திரைப்பட, நாடக, தொலைக்காட்சி நடிகரும், ஓவியரும்[1] ஆவார்.[2] இவர் சிட்னி சந்திரசேகராவின் ஏ9 என்ற சிங்களத் தொலைக்காட்சி நாடகம் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.[3] 2012 ஆம் ஆண்டில் அசோக அந்தங்கமவின் இனி அவன் திரைப்படத்தில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளியாக நடித்தமைக்காக இவருக்கு பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

தர்சன் தர்மராஜ்
Darshan Dharmaraj
பிறப்புலிங்கநாதன் தர்மராஜ்
(1981-03-02)2 மார்ச்சு 1981
இறக்குவானை, இலங்கை
இறப்பு2 அக்டோபர் 2022(2022-10-02) (அகவை 41)
கொழும்பு, இலங்கை
கல்விசென் ஜோன் தமிழ் வித்தியாலயம், இறக்குவானை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008–2022
வாழ்க்கைத்
துணை
சுபாசிணி
பிள்ளைகள்1
விருதுகள்சிறந்த திரைப்பட நடிகர் 2012

ஆரம்ப வாழ்க்கை

லிங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட தர்சன்[1] இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானை என்ற ஊரில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் பிறந்தார். அங்குள்ள சென் யோன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.[4] தந்தை தர்மராஜ் ஒரு சிறந்த ஓவியக் கலைஞர். தந்தையிடம் ஓவியம் கற்றுக் கொண்டார்.[1] பள்ளிக்க்கூடத்தில் நாடகங்களில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். தந்தை இறந்தபிறகு, இவர் மீது குடும்பப் பொறுப்புகள் சுமத்தப்பட்டன. இதனால் வேலை தேடி கொழும்பு வந்தார். தொடக்கத்தில் மூட்டை சுமக்கும் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றினார்.[1]

நடிப்புப் பணி

பிரபல சிங்கள இயக்குநர் சிட்னி சந்திரசேகராவின் தொலைக்காட்சி நாடகமொன்றில் நடிக்க புதுமுகங்கள் தேவை என்ற விளம்பரம் அவரது கண்களில் பட்டது. அதற்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வின் மூலம் நடிப்பதற்குத் தெரிவானார்.[1] 2008 ஆம் ஆண்டில் இந்நாடகம் ஒளிபரப்பானது. சிங்கள மொழியில் அப்போது சரளமாகப் பேசாவிட்டாலும், மூன்று மாதங்களுக்குள் அந்த மொழியைக் கற்றுக்கொண்டார்.[5] தொடர்ந்து பிரசன்ன விதானகே, அசோகா அந்தகம, பூதி கீர்த்திசேன ஆகிய புகழ்பெற்ற இயக்குநர்களின் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.[1] 2008 ஆம் ஆண்டில் பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம் ஒன்றின் மூலம் சிங்களத் திரையுலகிற்கு அறிமுகமானார்.[6]

இத்தாலியின் சிறந்த தயாரிப்பாளரும், இயக்குநருமான உபெர்ட்டோ பசோலினியின் மச்சான் (2008) என்ற சிங்கள/ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 2008 முதல் 2010 வரை பன்னாட்டுத் திரைப்பட விழாக்கள் அனைத்திலும் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றது.[1]

இறப்பு

தர்சன் தர்மராஜ் 2022 அக்டோபர் 2 இல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மாரடைப்பினால் தனது 41-ஆவது அகவையில் காலமானார்.[7]

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2008பிரபாகரன்விடுதலைப் புலிகளின் தலைவர்சிங்களம்
2008மச்சான்சுரேஷ்சிங்களம், ஆங்கிலம்
2009இரா ஹண்ட யட்டவிடுதலைப் புலிப் போராளிசிங்களம்
2012இனி அவன்அவன்தமிழ்
  • சிறந்த நடிகர் - தெரண லக்சு திரைப்பட விருது (2013)[8]
  • சிறந்த நடிகர் - ஹிரு கோல்டன் திரைப்பட விருது (2014)[9]
2012மாதாயோகாசிங்களம்
2015அட்ரசு நா (முகவரி இல்லை)குப்பயாமெ கோரிங்சிங்களம்
2015இசுபந்தானதர்சன்சிங்களம்
2016உலத் எக்கய் பிலத் எக்கய்கரப்பிட்டிய தர்சன்சிங்களம்
2017அலோக்கோ உடப்படிதட்டியசிங்களம்
2018கோமாளி கிங்ஸ்மோகன்தமிழ்
2018பொரிசதயகளு மாத்தையாசிங்களம்
2018தவென விகாகன்விலங்கு வதையாளர்சிங்களம்
2020சுனாமிசெல்வம்சிங்களம்[10]
2020சுபர்ணாஆயோ 433சிங்களம்
2021கவுருத் தன்னெ நாசிங்களம்[11]
TBDஆகார்சரகுசிங்களம்[12]
TBDபண்டுரசிங்களம்[13]
TBDரிக்கி டீனின் சாகசங்கள்ஓட்டுனர்சிங்களம்
TBDமொனாரா விலக்சிங்களம்[14]
TBDஜீவாசிங்களம்[15]
TBDபாஸ்போர்ட்சிங்களம்[16]
2019நமது தந்தைகளின் வீடுபலமொழி[17]
TBDமரியாசிங்களம்[18]
TBDவழக்கு இல 447அறிவிப்பில்சிங்களம்[19]
2022வித்துக்கள்தமிழ்/சிங்களம்/ஆங்கிலம்[20]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தர்சன்_தர்மராஜ்&oldid=3592696" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்