தா புரோம்

தா புரோம் (Ta Prohm, கெமர்: ប្រាសាទតាព្រហ្ម, ஒலிப்பு: பிரசாத் தாப்ரோம்) என்பது கம்போடியாவில் சியேம்ரீப் மாகாணத்தின் அங்கோர் நகரில் அமைந்துள்ள ஒரு கோவிலின் தற்போதைய பெயராகும். கெமர் மொழியில் ராஜவிகாரை என வழங்கப்பட்டு வந்த இக்கோவில் பாயோன் வடிவமைப்பில் கிபி 12ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. இது கெமர் பேரரசர் ஏழாம் செயவர்மன் காலத்தில்[1]:125[2]:388 மகாயாண பௌத்த மடமாகவும், பல்கலைக்க்ழகமாகவும் கட்டப்பட்டது. ஏனைய அங்கோர் கோவில்களைப் போலல்லாமல், தா புரோம் கோவில் அது கண்டுபிடிக்கப்பட்ட அதே நிலையில் தற்போதும் உள்ளது. இடிபாடுகள் மற்றும் காட்டு சூழலில் வளரும் மரங்கள் இக்கோவிலை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது. 1992 ஆம் ஆண்டில் இக்கோவில் பகுதியை யுனெசுக்கோ நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்த்தது. தா புரோம் கோவிலின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புத் தொடர்பான திட்டத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அப்சரா என அழைக்கப்படும் அங்கோர் சியெம்ரீப் நிறுவனம் ஒன்றின் கூட்டுடன் நிருவகித்து வருகிறது.[3][4]

தா புரோம்
Ta Prohm
தா புரோம் கோவில் கட்டடத்தில் வளர்ந்துள்ள மரம்
தா புரோம் Ta Prohm is located in கம்போடியா
தா புரோம் Ta Prohm
தா புரோம்
Ta Prohm
கம்போடியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்:13°26′06″N 103°53′21″E / 13.43500°N 103.88917°E / 13.43500; 103.88917
பெயர்
பெயர்:தா புரோம் (ராஜவிகாரை)
அமைவிடம்
நாடு:கம்போடியா
மாகாணம்:சியேம்ரீப்
அமைவு:அங்கோர்
கோயில் தகவல்கள்
மூலவர்:பிராக்னபரமித்தா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கெமர்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கிபி 1186
அமைத்தவர்:ஏழாம் செயவர்மன்

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தா புரோம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தா_புரோம்&oldid=3810346" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்