திருச்சூர் பூரம்

இந்தியத் திருவிழா
(திரிச்சூர் பூரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருச்சூர் பூரம் (Thrissur Pooram) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள திருச்சூரில் ஆண்டுதோறும் இந்துக் கோயில்களில் நடைபெறும் கோவில் திருவிழா ஆகும். திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூரம் அன்று நடைபெறும். மலையாள நாட்காட்டி மாதமான மேதம் மாதத்தில் (ஏப்ரல்/மே) பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்ற ஒரு விழாவாகும். இவ்விழா இந்தியாவில் உள்ள அனைத்து பூர விழாக்களிலும் மிகவும் பெரியதும், பிரபலமானதுமாகும்.[1]

திருச்சூர் பூரம்
திருச்சூர் பூரம் கொண்டாட்டம்
அதிகாரப்பூர்வ பெயர்திருச்சூர் பூரம்
கடைபிடிப்போர்மலையாளிகள்
வகைஇந்துக் கோயில் திருவிழா/திருச்சூர் நகரில் பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
அனுசரிப்புகள்
  • விலாம்பரம்
  • குடமாட்டம் (കുടമാറ്റം)
  • இலஞ்சிதார மேளம் (ഇലഞ്ഞിത്തറമേളം)
  • மாதத்தில் வரவு (മഠത്തില്‍ വരവ്)
  • வாண வேடிக்கை (വെടിക്കെട്ട്)
  • எழுநிலப்பு
நாள்மலையாள நாட்காட்டி மாதமான மேதத்தில் பூரம் நட்சத்திரத்துடன் சந்திரன் உதிக்கும் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திரிச்சூர் பூரம் அன்று தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு.

வரலாறு

பெருமக்காவு கோயிலில் செண்டை மேளத்தை தன் குழுவினருடன் வசிக்கும் பெருமக்காவு குட்டன் மரார்
திருவம்பாடி கோவிலில் தனகு குழுவினரும் செண்டை மேளம் இசைக்கும் கீழக்கூத்து அனியன் மரார்
கனிமங்கலம் வலியலுக்கல் பகவதி கோவில்
பூரம் பந்தலின் அலங்கரிக்கப்பட்டத் தோற்றம்

கொச்சி இராச்சியத்தின் மன்னராக இருந்த ஒன்பதாம் இராம வர்மா என்றும் பிரபலமாக சக்தன் தம்புரான் என்றும் அறியப்பட்ட இராம வர்மா குஞ்ஞி பிள்ளை தம்புரான் (1751-1805) என்பவரால் தற்போதைய வடிவத்தில் புதுப்பித்ததாகக் கருதப்படுகிறது.

திரிச்சூர் பூரம் - பின்னணியும் வரலாறும்

திரிச்சூர் பூரம் அல்லது "அனைத்து பூரங்களின் தாய்" என்பது அறியப்பட்டபடி, சக்தன் தம்புரானின் மனதில் உருவானதாகும். அந்த நேரத்தில், ஆறாட்டுப்புழா பூரம் கேரளாவின் மிகப்பெரிய கோயில் திருவிழாவாக இருந்தது. திருச்சூர் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள கோயில்களும் வழக்கமாக பங்கேற்றன. 1798 ஆம் ஆண்டு இடைவிடாது மழை பெய்து விழாவைத் தொடங்க தாமதம் ஏற்பட்டதால் ஆறாட்டுப்புழா பூரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாமதமாக பங்கேற்ற கோவில்கள் அனைத்தும் கொச்சி மன்னரான இவரிடம் வந்து இந்த பிரச்சினை குறித்து புகார் அளித்தன. தம்புரான் அனைத்து கோயில்களையும் தங்கள் தெய்வங்களை திரிசூருக்கு அழைத்து வந்து வடக்குநாதன் கோயிலின் தெய்வமான சிவனுடன் வழிபடுமாறு அழைத்தார். தம்புரான் பங்கேற்பாளர்களை மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டு குழுக்களாக வகைப்படுத்தினார். மேற்குக் குழுவில் திருவம்பாடி, கனிமங்கலம், இலாலூர், அய்யந்தோல், மற்றும் நெத்திலக்காவு கோயில்கள் இருந்தன. அதே சமயம் பரமக்காவு, கரமுக்கு, செம்புகாவு, சூரகொட்டுகாவு, பனமுக்காம்பில்லி கோயில்கள் கிழக்குக் குழுவின் கீழ் வந்தன.[2]

இதன் மூலம் வடக்குநாதன் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 10 கோயில்களை ஒருங்கிணைத்து திருச்சூர் பூரம் பொதுமக்கள் விழாவாகக் கொண்டாடும் முடிவை மன்னர் எடுத்தார். வடக்குநாதன் கோயிலின் முதன்மைக் கடவுளான வடக்குநாதனை (சிவன்) தரிசனம் செய்ய திருச்சூர் நகருக்கு அவர்களின் தெய்வங்களுடன் கோயிலுக்கு அழைத்தார். இந்தத் திருவிழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், திருவிழாவில் பயன்படுத்தப்படும் அனைத்தும் புதிதாக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரிக்கப்படுகின்றன. குடைகள் மற்றும் நெட்டிப்பட்டம் போன்றவற்றை வடிவமைக்கும் கடமை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[3]

பங்கேற்பாளர்கள்

சக்தன் தம்புரான் கோவில்களை "பரமேக்காவு பக்கம்" மற்றும் "திருவம்பாடி பக்கம்" என்று இரண்டு குழுக்களாக நியமித்தார். திருச்சூர் சுவராஜ் சுற்றுப்பாதையில் உள்ள பரமேக்காவு பகவதி கோயிலும், ஷோரனூர் சாலையில் உள்ள திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோயிலும் முதன்மை பங்கேற்பாளர்களால் தலைமை வகிக்கப்படுகின்றன.

பூரம் வடக்குநாதன் கோயிலை மையமாகக் கொண்டது. இந்த கோயில்கள் அனைத்தும் சிவபெருமானை வணங்குவதற்காக தங்கள் ஊர்வலங்களை அனுப்புகின்றன. நிகழ்ச்சி மற்றும் திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை தம்புரான் வடிவமைத்ததாக நம்பப்படுகிறது.[4][5][6][7]

கொடி ஏற்றுதல்

கொடியேற்றம்) நிகழ்விலிருந்து பூரம் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.[8] திருச்சூர் பூரத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக கொடியேற்ற விழா தொடங்குகிறது. திருச்சூர் பூரத்தில் பங்கேற்கும் அனைத்து கோவில்களும் விழாவிற்கு வருகை தரும். மேலும் திருவிழாவின் தொடக்கத்தை அறிவிக்க சிறிய வாணவேடிக்கையும் நடைபெறும்.

பூர விலாம்பரம்

பூர விலாம்பரம் என்பது திருச்சூர் பூரம் நடைபெறும் வடக்குநாதன் கோயிலின் தெற்கு நுழைவு வாயிலை நெய்திலக்காவிலம்மா சிலையை சுமந்த ஒரு யானை தள்ளி திறக்கும் நடைமுறையாகும்[9].

வாணவேடிக்கை

நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட இந்த அற்புதமான வாணவேடிக்கை திருச்சூர் நகரின் மையப்பகுதியில் உள்ள தேக்கின்காடு மைதானத்தில் நடைபெறுகிறது. பூரம் கொடியேற்றம் முடிந்த நான்காவது நாளில் "வெடிகெட்டு" எனப்படும் வாணவேடிக்கையின் முதல் சுற்று நடக்கிறது. திருவம்பாடி மற்றும் பரமேக்காவு தேவஸ்தானங்கள் வழங்கும் ஒரு மணி நேர நிகழ்வு இது. இந்த வாணவேடிக்கை ஸ்வராஜ் சுற்றில் இரவு 7:15 மணிக்கு தொடங்குகிறது. காட்சி பொதுவாக புதுமையான வடிவங்கள் மற்றும் பட்டாசு வகைகளைக் கொண்டுள்ளது.[10]

பிரியாவிடை நிகழ்ச்சி

பூரத்தின் ஏழாவது நாள் (கடைசி நாள்) இது நடைபெறுகிறது. இது "பகல் பூரம்" என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சூர் மக்களுக்கு, பூரம் ஒரு திருவிழா மட்டுமல்ல, விருந்தோம்பும் நேரமும் கூட. பிரியாவிடை விழா என்பது சுவராஜ் சுற்றில் நடைபெற்ற கடைசி நிகழ்வாகும். திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மற்றும் பரமேக்காவு பகவதி கோயில் சிலைகள் பூரம் கொண்டாட்டத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் சுவராஜ் சுற்றுப் பாதையிலிருந்து அந்தந்த கோயில்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பகல் வெடிக்கட்டு எனப்படும் வாணவேடிக்கையுடன் திருவிழா நிறைவடைகிறது.[11][12]

கலாச்சார தாக்கங்கள்

2013இல் நடந்த பூர விழாவில் குடமாட்டம் நிகழ்வு

இந்துக்களின் பண்டிகையாக இருந்தாலும், திருச்சூர் பூரம் கேரள சமூகத்தின் பல்வேறு பிரிவுகளும் கலந்து கொள்கின்றன.[13][14] திருவிழாவில் நடைபெறும் பல நிகழ்வுகள் கேரளாவின் பிற பகுதிகளிலும், மாநிலத்திற்கு வெளியேயும் நடத்தப்படுகின்றன.[15][16][17] திருச்சூர் பூரம் ஆசியாவின் மிகப் பெரிய கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பூரத்தின் அழகையும் பாரம்பரியத்தையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்வதால், இந்தியாவின் சுற்றுலாவில் இது ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சூரில் தொடருந்து மற்றும் பேருந்து இணைப்பு சிறப்பாக உள்ளது. இது பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இது தேவர்களின் சந்திப்பாக கருதப்படுகிறது.

ஆஸ்கார் விருது பெற்ற இந்தியத் திரைப்பட ஒலி வடிவமைப்பாளரான[18][19] ரெசுல் பூக்குட்டி மற்றும் அவரது குழுவினர் விழாவின் 36 மணி நிகழ்வின் ஒலிகளைப் பதிவு செய்து, "தி சவுண்ட் ஸ்டோரி" என்ற திரைப்படத்தை உருவாக்கினர்.[20]

செயற்கைக்கோள் படம்

மேற்கோள்கள்

குறிப்புதவிகள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திருச்சூர்_பூரம்&oldid=3742203" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்