துவாரான் மாவட்டம்
துவாரான் மாவட்டம்; (மலாய்: Daerah Tuaran; ஆங்கிலம்: Tuaran District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் துவாரான் நகரம் (Tuaran Town).
துவாரான் மாவட்டம் | |
---|---|
Tuaran District | |
சபா | |
ஆள்கூறுகள்: 6°11′00″N 116°14′00″E / 6.18333°N 116.23333°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | மேற்கு கரை |
தலைநகரம் | துவாரான் (Tuaran) |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சியாரின் சம்சிர் (Syahrin Samsir) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,165 km2 (450 sq mi) |
மக்கள்தொகை (2019) | |
• மொத்தம் | 1,28,200 |
இணையதளம் | ww2 ww2 |
சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் துவாரான் மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]
பொது
சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- கோத்தா பெலுட் மாவட்டம் (Kota Belud District)
- கோத்தா கினபாலு மாவட்டம் (Kota Kinabalu District)
- பாப்பார் மாவட்டம் (Papar District)
- பெனாம்பாங் மாவட்டம் (Penampang District)
- புத்தாத்தான் மாவட்டம் (Putatan District)
- ரானாவ் மாவட்டம் (Ranau District)
- துவாரான் மாவட்டம் (Tuaran District)
வரலாறு
துவாரான் என்ற பெயரின் தோற்றம் ஓரளவுக்கு இன்னும் அறியப் படாமல் உள்ளது. இருப்பினும் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்பே இருந்து துவாரான் நகரில் ஒரு குடியேற்றம் இருந்துள்ளது. 1800-ஆம் ஆண்டுகளில் இசுடாம்போர்டு இராஃபிள்சு துவாரான் எனும் பெயரைப் பயன்படுத்தி உள்ளார்.
இசுடாம்போர்டு இராஃபிள்சு (Stamford Raffles), 1811–ஆம் ஆண்டில் இருந்து 1815-ஆம் ஆண்டு வரை டச்சு கிழக்கிந்திய நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்தார். 1813–ஆம் ஆண்டில் ஜாவாவின் ஆளுநராகவும் இருந்தார்.[2][3]
இசுடாம்போர்டு இராபிள்சு
அந்தக் காலக் கட்டத்தில் துவாரான், தெம்பாசு (Tempasuk) பகுதிகள் கடல் கொள்ளைகளால் பாதிக்கப்பட்டு இருந்தன. இந்தக் கடல் கொள்ளைகளை ஒடுக்குமாறு இசுடாம்போர்டு இராபிள்சை புரூணை சுல்தான் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் இருந்த பிரித்தானிய (East India Company) செயலாளருக்கு இசுடாம்போர்டு இராஃபிள்சு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில் துவாரான் எனும் பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
நிர்வாகப் பிரிவு
துவாரான் மாவட்டம் | |
---|---|
இடம் | முக்கிம் |
சுலமான் | தம்பாலாங் |
முக்கிம் செருசோப் | |
முக்கிம் இந்தாய் | |
பந்தாய் தாலித் | முக்கிம் பெருங்கிசு |
முக்கிம் மெங்கபோங் | |
முக்கிம் பண்டார் துவாரான் | |
தம்பருளி | முக்கிம் தம்பருளி |
முக்கிம் தெங்கிலான் | |
முக்கிம் டோபோகான் | |
முக்கிம் காயாரத்தாவ்/ருங்குசு | |
கியுலு | முக்கிம் உலு |
முக்கிம் தெங்கா | |
முக்கிம் லெம்பா | |
முக்கிம் பந்தாய் | |
முக்கிம் நபாலு | |
முக்கிம் பெக்கான் |
காட்சியகம்
- அன்னூர் மசூதி.
- செயின்ட் ஆண்ட்ரூ ஆங்கிலிகன் தேவாலயம்.
- லிங் சான் புத்தவிகாரம்.
- துவாரான் விதான நடைபாதை.
- துவாரான் கடைவீதிகள்.
மேற்கோள்
மேலும் படிக்க
- Treacher, W. H (1891). "British Borneo: sketches of Brunai, Sarawak, Labuan, and North Borneo". University of California Libraries. Singapore, Govt. print. dept. p. 190.
- Rutter, Owen (1922). "British North Borneo - An Account of its History, Resources and Native Tribes". Cornell University Library. Constable & Company Ltd, London. p. 157.
- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press.
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் Tuaran District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Tuaran District Council
- Tuaran District Office