நஃபந்தான்

நஃபந்தான் (Nehbandan , பாரசீக மொழி: نهبندان‎, பிற பெயர்கள் : Nehbandān, Nahbandan; ஒத்த பெயர்கள் : Neh)[2] இந்த நகரமானது, ஈரானிய நகரங்களுள் ஒன்றாகும். நஃபந்தான் மண்டலத்தின் தலைநகராக, இந்நகரம் உள்ளது. தெற்கு கொராசான் மாகாணத்தில், இந்நகரம் அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு, ஈரான் நாட்டு அரசு புள்ளியியல் நடுவம் எடுத்த, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இங்கு 3,817 குடும்பங்கள் வாழ்ந்திருந்தன. அக்குடும்பத்தில் வாழ்ந்திருந்த மொத்த மக்கள் தொகை 15,998 நபர்களாகும். பெரும்பான்மையான மக்கள் பெர்சியர்கள் ஆவர். இவர்களின் பேசும் மொழியாக, நேகி (Nehi) என்ற வழக்கு மொழி ஆகும். இந்த வழக்கு மொழியானது பார்சி மொழியில் உள்ளது.

நஃபந்தான்
نهبندان
நகரம்
நஃபந்தான் is located in ஈரான்
நஃபந்தான்
நஃபந்தான்
ஆள்கூறுகள்: 31°32′31″N 60°02′11″E / 31.54194°N 60.03639°E / 31.54194; 60.03639
நாடு ஈரான்
மாகாணம்தெற்கு கொராசான்
மண்டலம்நஃபந்தான்
பாக்ச்சுநடுவம்
மக்கள்தொகை
 • மொத்தம்18,304 [1]
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)
சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து நஃபந்தான்

தகவற்பெட்டி விவரம்

நாடு

ஈரானின் மாகாணங்கள்=31

பதினெட்டு மத்திய கிழக்கு நாடுகள்[3][4] உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, ஈரான் என்ற இசுலாமிய நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் பெர்சியா என்பதாகும்.[5] இந்த நாட்டின் நிலப்பரப்பானது, அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[6] அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், தெற்கு கொராசான் மாகாணம் என்று அழைக்கப்படுகிறது.

நிலப்பிரிவு

மிகப் பெரிய மாகாணமான, பெரிய குராசான் மாகாணமானது, 2004 செப்டம்பர் 29 அன்று இரசாவி கொரசான் மாகாணம், வடக்கு கொரசான் மாகாணம், தெற்கு கொரசான் மாகாணம் என மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டு, இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது.[7] தொடக்கத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட தெற்கு கொரேசன் மாகாணத்தில், பிர்ஜண்ட் மண்டல மாவட்டமும், வேறு சில மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களையும் (நேபபன், தர்மியன் மற்றும் சர்பிஷேஹ்) உள்ளடக்கி இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், பழைய குவாசினைச் சேர்ந்த (குவான், பெர்தோசு, டாபாசு போன்றவை ) வடக்கு, மேற்கு நகரங்களும், சில இடங்களும் தெற்கு கொராசானுக்குள் இணைக்கப்பட்டன. அதிலிருந்து இந்த ஊரகம், இம்மாகணத்தின் ஆளுகையின் கீழ் இருக்கிறது. தெற்கு கொரசான் மாகாணத்தில் மொத்தம் 11 மண்டலங்கள் உள்ளன.[8] அதில் இருக்கும் ஒரு மண்டலம், நஃபந்தான் மண்டலம் என அழைக்கப்படுகிறது.

மண்டலம்

நஃபந்தான் மண்டல விவரம்[9]

ஈரானின் மண்டலம் என்பதை, அந்நாட்டினர் சாரெசுடன் (பாரசீகம்: شهرستان ) என்றே அழைக்கின்றனர். இவை அந்நாட்டு அரசின் ஆளுகைப் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவுக்கு மேலே இரண்டு பிரிவுகள் உள்ளன. முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர். ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும், அடுத்து 31 பெரிய மாகாணங்களாகப் (பாரசீகம் : استان‎ ) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணங்கள் மூன்றாம் நிலைப் பிரிவாக மண்டலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் (šahr = நகரம், stân = "மாகாணம், மாநிலம்") பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் (இங்கிலாந்து:county; USA:Township) என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான பொருள் உடைய தமிழ்ச் சொல் மண்டலம் ஆகும். 2006 ஆம் ஆண்டு, ஈரான் நாட்டின் அரசு புள்ளியியல் நடுவத்தால் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13,541 குடும்பங்களில், இம்மாவட்டத்தில் வாழும் மொத்த மக்கள் தொகை 56,089 நபர்களாக இருந்தது.[10] இம்மண்டலம் இரண்டு மாவட்டங்களையும், இரண்டு நகரங்களையும் பெற்றிருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் நேகி என்ற பார்சி மொழியின் பேச்சுவழக்கைப் பேசும் பெர்சியர்கள் ஆவர். பலூச்சு மொழி பேசும் சிறுபான்மையினரும் உள்ளனர்.

பாக்ச்சு

நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, பாக்ச்சுகள் ( baxš بخش) இருக்கின்றன. பல நேரங்களில், இச்சொல்லானது மண்டலம் என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஆட்சிப்பிரிவானது, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒரு திட்டநகரம் (township) அல்லது இங்கிலாந்து நாட்டின் மாவட்டங்கள் (Districts of England) போன்ற நிருவாக முறையைக் கொண்டதே ஆகும். இவைகள் தமிழகத்தின் மாவட்டங்கள் போன்றவை எனலாம். இவைகள் தமிழகத்தின் மாவட்டங்கள் போன்றவை எனலாம். நடுவ மாவட்டம், நஃபந்தான் மண்டலம், சூசெஃப்பு மாவட்டம் என இரு மாவட்டங்கள் உள்ளன.

தெகெசுதன்

தெகெசுதன் (Dehestān, பாரசீக மொழி: دهستان‎) என்பது ஈரானின் ஆட்சிப்பிரிவுகளில் ஒன்றாகும். இதனைத் தமிழில் ஊரக வட்டம் எனலாம். இது சிற்றூர் அல்லது ஊர் அல்லது ஊரகம் என அழைக்கப்படுபவைகளின் தொகுதி ஆகும். இந்த வட்டத்திற்குள் பல ஊர்கள் (village) அடங்கியிருக்கும். குறைந்த மக்கள் தொகை வாழும் நிலப்பகுதிகளுக்கு மேலேயும், பாக்ச்சு என்ற மாவட்ட நிலப்பகுதிக்கு கீழும் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும். 2006 ஆம் ஆண்டு எடுத்தப் புள்ளிவிவரப்படி, ஈரானில் 2,400 தெகெசுதன்கள் இருந்தன.[11]

சிறப்பு

அமைவிடம்

நஃபந்தான் மார்களி, சூசெப் என்ற இரு பகுதிகளையும், நஃபந்தான், சூசெப் என்ற இரு நகரங்களையும், ஐந்து கிராமிய மாவட்டப் பகுதிகளையும் கொண்டு அமைந்துள்ளது. தெற்கு கொராசானின் தெற்குப் பகுதியில் இயற்கையான அமைவிடத்தில் ஒரு சமவெளியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1196 மீ. உயரத்தில் உள்ளது. இந்நகரின் வட பகுதி அதிகமான சமவெளிப்பகுதியில் அமைந்துள்ளது. [12] 41,102 சதுர மீட்டர் பரப்பளவினைக் கொண்ட இந்நகரின் தெற்கில் ஒரு உப்பு பாலைவனம் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து, இது கு-சோர்க், கு-பிட்மேஷ்க் மற்றும் கு-புபக் மலைகளால் பிணைக்கப்பட்டுள்ளது. [13]

பருவ நிலை

நஃபந்தான் பகுதியின் கால நிலையானது மிகவும் இதமாக உள்ளது. அங்கிருந்து வறண்ட பாலைவனப் பகுதியை எளிதாகக் காணமுடியும். [12] நஃபந்தான், மணல் பாலைவனங்கள் மற்றும் உப்பு சதுப்பு நிலங்களால் சூழப்பட்டிருந்தாலும், அது பாலைவன நிலத்தின் வழியாக ஓடும் நான்கு பருவ நதியைக் கொண்டுள்ளது. [13]

நெருங்கிய உறவு

தகவல் தொடர்பு மற்றும் வணிகம் என்ற நிலைகளில் இப்பகுதி மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அதற்கு ஏற்ற வகையில் சாலைகள் இங்கு அமைந்துள்ளன. சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம் மற்றும் கெர்மான் மாகாணத்துடன் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பார்வையில், அந்நரங்களுக்கு அருகாமையில் இது உள்ளது. நகரின் தென்னகத் துறைமுகங்களுக்கு நெருக்கமாக, குறிப்பாக சாபாகார் துறைமுகத்திற்கு நெருக்கமாக உள்ளது. இந்த மாகாணத்தின் முக்கியமான வணிகச் சாலைகள் இந்த ஊர் வழியாகவே செல்கின்றன. [12]

தொழில்

சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்படுகின்ற விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் விவசாயம் இந்த ஊரின் முக்கியவத்திற்குக் காரணங்களாக அமைகின்றன. [12] நஃபந்தான் மக்கள் ஜுஜூப், தேதி, பிஸ்தா, குங்குமப்பூ, மாயப்பிள் மற்றும் மாதுளை ஆகியவற்றை வளர்க்கிறார்கள். இந்த நிலம் விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை கிரானைட்டுகளால் நிறைந்துள்ளது. ஈராக்கின் நஜாப்பில் உள்ள இமாம் அலி (ஏ.எஸ்) தலத்தின் முற்றத்தில் நஃபந்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட பாறைகள் அமைக்கப்பட்டன. [13]

இனம், மொழி

இவ்வூரில் வாழ்கின்ற மக்கள் ரார்ட் மற்றும் ஆரியன் இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் இஸ்லாமியத்திற்கு முந்தைய காலம் தொடங்கி இங்கு வசித்து வருகின்றனர். மேலும் இங்கு பலூச் மற்றும் அரபு இனத்தவர்களும் வாழ்கின்றனர். நஃபந்தான் மக்கள் உள்ளூர் மொழியான கோரசானி என்ற மொழியினைப் பேசுகின்றனர். அது சிஸ்தானி என்ற கிளைமொழியோடு தொடர்புடையதாகும். அவர்களில் சிலர் சிஸ்தானி மொழியையும் பேசுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் இனத்தவராகவும், ஷியா பிரிவைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். [12]

குறிப்பிடத்தக்க இடங்கள்

நஃபந்தானில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல இடங்கள், அமைப்புகள் காணப்படுகின்றன. [13]

  • நஃபந்தான் கோட்டை : நஃபந்தானில் உள்ள கெய்ம் தெருவில், அடுக்கு மண் செங்கற்களால் ஆன ஒரு பெரிய கோட்டை உள்ளது. இது சசானிட் காலத்திலிருந்து சஃபாவிட் சகாப்தம் வரை இருந்து வருகின்ற கோட்டையாகும்.
  • பள்ளி : 1929 ஆம் ஆண்டில் நஃபந்தானில் முதல் பள்ளி நேபந்தனில் நிறுவப்பட்டது. சமச்சீர் கட்டிடக்கலையில் பஹ்லவி பாணியில் அக்கட்டடம் அமைந்துள்ளது.
  • ஷாதேஜ் கோட்டை : சசானிட் சகாப்தத்தைச் சேர்ந்த கோட்டை நஃபந்தானுக்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கல் மற்றும் செங்கல் ஆகியவற்றால் ஆனது. கட்டிடத்தின் சில பகுதிகளில் மோட்டார் பயன்படுத்தப்படவில்லை. கோபுரங்கள், கோட்டை கொத்தளங்கள், சிப்பாய் அறைகள், உணவு சேமிப்பகங்கள் மற்றும் நீர் சேமிப்பகங்கள் அங்கே உள்ளன.
  • காற்றாலைகள் : கோராசனின் தெற்குப் பகுதியில், குறிப்பாக நஃபந்தான் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், சிஸ்தானின் 120 நாள் காற்றைக் கட்டுப்படுத்தும் காற்றாலைகள் உள்ளன.
  • தகாவி இல்லம் : பழைய நஃபந்தான் பகுதியில் ஒரு பழைய வீடு மற்ற வீடுகளுக்கு மேலாக உள்ளது. அது கஜார் சகாப்தத்திற்கு முந்தைய கட்டிடக்கலைப் பாணியில் உள்ளது. அந்த இல்லத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு பால்கனிகள், வளைவுகள், தென்கிழக்கு மூலையில் ஒரு அடுப்பு அறையில் முடிவடையும் பாதை, மற்றும் முற்றத்தின் அலபாஸ்டர் அலங்காரங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
  • காஜி நமக்சர் ஈர நிலம் : நஃபந்தானுக்கு வடக்கே 75 கி.மீ தொலைவில் காஜி நமக்சர் ஈர நிலம், 22.765 ஹெக்டேர் பரப்பளளில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நஃபந்தான்&oldid=3577593" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்