பாரசீக மொழி

பாரசீக மொழி (Persian language) ஈரான், ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், போன்ற நாடுகளில் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி ஆகும். பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முன்னர் இந்திய உப கண்டத்தில் இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆதலால் இந்தி, சிந்தி, வங்காள மொழி, உருது ஆகிய மொழிகளில் இதன் தாக்கத்தைக் காணலாம். பாரசீக மொழியானது இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகவும், ஆர்மீனியா, ஈராக், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில் ஓரளவிலும் பேசப்பட்டு வருகிறது.

பாரசீக மொழி
ஃபார்ஸி (Fārsi)
Nastaliq فارسی
பாரசீக மொழியில் ஃபார்ஸி (Farsi). நாஸ்டாலிக் (Nastaʿlīq) எழுத்து வடிவில்.
உச்சரிப்புfɒːɾˈsiː
நாடு(கள்)ஈரான்[1]

ஆப்கானிஸ்தான்[1](தாரி ஆக)
தாஜிக்ஸ்தான்[1](தாஜிக் ஆக)
உஸ்பெகிஸ்தான்
ஈராக்[2]


தாய் மொழியாகப் பேசுபவர்கள்
60 மில்லியன்  (2009)[3]
(மொத்தமாகப் பேசுவோர் 110 மில்லியன்)[3]
Indo-European
ஆரம்ப வடிவம்
பழைய பாரசீகம்
  • மத்திய பாரசீகம்
    • பாரசீக மொழி
அராபிய அரிச்சுவடி (பாரசீக அரிச்சுவடி)
சிரில்லிக் எழுத்துக்கள் (தாஜிக் அரிச்சுவடி)
எபிரேய அரிச்சுவடி
பாரசீக புடையெழுத்து
மொழிக் குறியீடுகள்
ISO 639-1fa
ISO 639-2per (B)
fas (T)
ISO 639-3fas
Linguasphere58-AAC (பரந்த பாரசீகம்) > 58-AAC-c (மத்திய பாரசீகம்)
{{{mapalt}}}
பாரசீக மொழிப் பகுதியின் தோராயமான அளவு. இவ்வரைபடம் பாரசீகத்தின் மூன்று பேச்சுவழக்குகளையும் உள்ளடக்கியது.

இம்மொழி ஆப்கானிஸ்தானில் தாரி[6] என்றும் தாஜிகிஸ்தானில் தாஜிக்[7] என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், ஈரானிலும் ஏனைய நாடுகளிலும் இம்மொழி 'பார்சி' என்று அழைக்கப்படுகிறது. தாஜிகிஸ்தானில் இதனை உருசிய மொழி போன்று திரிபடைந்த சிரிலிய வரிவடிவத்தில் எழுதப்பட்டபோதிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ஏனைய நாடுகளில் அரபு மொழி எழுத்துக்களிலிருந்து திரிபடைந்த வரிவடிவத்தைப் பயன்படுத்தி வலமிருந்து இடமாகவே பாரசீக மொழி எழுதப்படுகிறது. பாரசீகத்தை இஸ்லாமியப் படைகள் வெற்றி கொண்டு, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரசீக மொழியானது அரபு வரிவடிவத்தில் எழுதப்பட்டது. அதற்கு முன்னர், இன்றைய ஈரானின் பண்டைய மொழிகளான 'பஹ்லவி' மற்றும் அவெசுதா ஆகிய மொழிகளின் வரிவடிவங்களிலேயே அது எழுதப்பட்டு வந்தது.

முகலாயப் பேரரசர்களின் காலத்தில் பேரரசின் ஆட்சி மொழியாகப் பாரசீக மொழியே அங்கீகரிக்கப்பட்டிருந்தது. முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தொகுத்தெழுதிய பதாவா ஆலம்கீரி என்ற, ஹனஃபி சட்டத் துறையைச் சார்ந்த இஸ்லாமிய சட்ட நூலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.

பாரசீக மொழி - பெயர் வருவழி

பாரசீக மொழி என்பது மத்திய பாரசீகத்தின் ஒரு தொடர்ச்சி ஆகும். இது சாசானியப் பேரரசின், அதிகாரப்பூர்வ மத மற்றும் இலக்கிய மொழி ஆகும். இது பழைய பாரசீகத்தின், தொடர்ச்சியான அகாமனிசியப் பேரரசின் மொழி ஆகும்.[8][9] இதன் இலக்கணம் இம்மொழிக்கு ஒப்பான சமகாலப் பயன்பாட்டிலிருந்த பல ஐரோப்பிய மொழிகளை ஒத்திருந்தது.[10]

தற்போது ஃபர்ஸ் (Fars) என்றழைக்கப்படும் அகாமனிசியப் பேரரசின், பெர்ஸிஸ் (Persis) மாகாணத்தின் தலைநகரான பாரசீகத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி "பாரசீக (Farsi) மொழி" எனவும்,[11] அம்மொழியைப் பேசும் மக்கள் "பெர்சபோன்கள் (Persophones)" எனவும்,[12] ஆழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாரசீக மொழி - பரவல்

மேற்கு ஆசியாமத்திய ஆசியா, மற்றும் தென் ஆசியா போன்ற பகுதிகளில் வெவ்வேறு பேரரசுகளில், பல நூற்றாண்டுகளாக, பாரசீக மொழி ஒரு மதிப்புமிக்க மொழியாகவும், கலாச்சார மொழியாகவும், பரவி இருந்தது.[13]

ஈரான்ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் மக்களும் மற்றும் உலகம் முழுவதும் வாழும் சுமார் 110 மில்லியன் மக்களும் பாரசீக மொழியைத் தங்கள் தாய்மொழியாகவும், அதிகாரப்பூர்வ மொழியாகவும் கொண்டுள்ளனர்.

மத்திய ஆசியாகாகசஸ்அனடோலியா, ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள துருக்கிய மொழிகளிலும், அண்டைய ஈரானிய மொழிகளிலும், அருமேனிய மொழிகளிலும், சியார்சிய மொழிகளிலும், இந்தோ-ஆரிய மொழிகளிலும்,  உருதுமொழியிலும், இந்துசுத்தானி மொழிகளிலும், பாரசீக மொழியின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. இது அரபு மொழி, குறிப்பாக பஹரானி (Bahrani) அரபு மொழியிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது.[14] ஈரான் மீதான இசுலாமியப் படையெடுப்புக்குப் பின் இம்மொழி அரபு மொழியிலிருந்து அதிக அளவு சொற் குவியலைக் கடனாகப் பெற்று, செல்வாக்கு மிகுந்த மொழியாக விளங்குகிறது.[15][16][17][18][19][20]

சொற்பிறப்பியல் - பாரசீக மொழி - வகைகள்

மேற்கத்திய பாரசீக மொழி, பார்ஸி (پارسی pārsi) அல்லது ஃபார்ஸி (فارسی fārsi) அல்லது ஸபான்-எ-ஃபார்ஸி (زبان فارسیzabān-e fārsi) எனும் பாரசீக மொழியானது, 20 ஆம் நூற்றாண்டின் சமீபம் வரை, பாரசீக நாட்டவரால், தாய்மொழியாகப் பேசப்பட்டு வந்ததது. பாரசீக மொழி பெருமளவில் பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும்,[21][22][23] ஈரானில் பயன்படுத்தப்படும் பாரசீக மொழி ஃபார்ஸி வகையைச் சார்ந்தது என்று சில மொழியியல் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.[24][25]

கிழக்கு பாரசீக மொழி, டாரி பாரசீகம் (دری darī) அல்லது ஃபர்ஸி-ஏ-டாரி (فارسی دری fārsi-ye dari) கிழக்கு பாரசீகப் பகுதிகளிலதிக அளவுப் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு இணையான வேறு பெயர் ஃபர்ஸி (Fārsi) என்பதாகும். இருபதாம் நூற்றாண்டில் இதன் பெயர் மருவி, ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழி என்றானது. அப்பொழுது இது ஆப்கானிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் 'ஆப்கானின் பாரசீக மொழி' என்று அழைக்கப்படுகிறது.[26]

டஜிகி மொழி, (тоҷикӣ, تاجیکی tojikī) அல்லது (ஸபோன்-ஐ-டோஜிகி забони тоҷикӣ / فارسی تاجیکی zabon-i tojiki) என்றழைக்கப்படும் டஜிகி மொழியானது, தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் தற்பொழுதும் பயன்பாட்டில் உள்ள பாரசீக மொழியாகும்.

பழைய பாரசீக மொழி

பழைய பாரசீக மொழி

அகாமனிசியப் பேரரசின் கல்வெட்டுகளில் பழைய பாரசீக எழுத்து மொழி, காணப்படுகிறது. பெஹிஸ்ட்டன் கல்வெட்டுகளில், பழைய பாரசீக மொழியில் எழுதப்பட்ட உரைகள் காணப்படுகின்றன.[27]

ஈரான்ருமேனியா (Gherla),[28][29][30] ஆர்மீனியாபஹ்ரைன்ஈராக்துருக்கி, எகிப்து[31][32] ஆகிய நாடுகளில், பழைய பாரசீக மொழிப் பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில், பழைய பாரசீக மொழி, சான்றிடப்பட்ட பழமையான மொழியாக உள்ளது.[33]

மெய்யெழுத்துக்கள்

இதழின எழுத்துக்கள் / உதட்டொலிகள்பல்லடி ஒலி / நுணியண்ண ஒலிபின்னண்ண ஒலிஇடையண்ண ஒலிஅடிநாப் பின்னண்ண ஒலிஉள்நாக்கு ஒலிகுரல்வளை ஒலி
மூக்கொலிம (m)ந (n)ங் (ŋ)
வல்லெழுத்து / வெடிப்பொலிப்ப (p) ப (b)ட்ட (t) ட (d)க்க (k) க (ɡ)க்க (q) க(ɢ)
அடைப்புரசொலி / தடையுறழ்வொலிட்ச (tʃ) ஜ (dʒ)
உரசொலிஃப (f) வ (v)ஸ (s) ஸ்ஸ (z)ஷ (ʃ) ஷ்ஷ (ʒ)க்ஸ் (χ) த் (ʁ)ஹ (h)
ஆடொலிர (r)
உயிர்ப்போலில (l)ஜ (j)

நெடுங்கணக்கு எழுத்தியல்

பாரசீக நாஸ்டாலிக்கின் (Nasta'līq) விகித விதிகளுக்கு உதாரணம்.[ 1 ]
அலி அக்பர் டெஹ்கோடாவின் (Ali-Akbar Dehkhoda) எளிதாக ஓடும் போக்குடைய தனிப்பட்ட கையெழுத்தில் எழுதப்பட்ட குர்ஆனிய பாரசீக எழுத்து
பஹ்லவி (Pahlavi) எழுத்துக்களில் பாரசீகச் சொல்

நவீன ஈரானிய, பாரசீக மற்றும் தாரி உரைகளின் பெரும்பகுதி அரபு எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. தாஜிகி மொழியானது, பாரசீக மொழியின் வட்டாரப் பேச்சுமொழியாகவும், கிளைமொழியாகவும் கருதப்படுகிறது. இம்மொழி, உருஷ்ய மொழிகளையும், மத்திய ஆசியாவின் துருக்கிய மொழிகளையும்,[34][35] தன் வசமாக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. தாஜிகிஸ்தான் நாட்டில் இம்மொழி, சிரிலிக் எழுத்துக்களால் எழுதப்படுகிறது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பாரசீக மொழிப் பதிப்பு
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாரசீக_மொழி&oldid=3794452" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை